நீங்கள் புறக்கணிக்க கூடாத மலேரியா நோய்க்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்

Spread the love

பிளாஸ்மோடியம் என்னும் ஒட்டுண்ணியுடைய கொசு மூலம் பரவும் தொற்று நோய் மலேரியா ஆகும். இந்த கொசு ஒருவரை கடிக்கும் பொழுது, அதனிடம் உள்ள ஒட்டுண்ணியை, அவரின் கல்லீரலுக்குள் செலுத்துகிறது. அங்கே அந்த ஒட்டுண்ணி வளர்ச்சியடைந்து, கல்லீரலில் இருந்து இரத்த ஓட்டத்திற்குள் நுழைந்து சிவப்பு இரத்த அணுக்களை பாதிக்கிறது. உள்நுழைந்த ஒட்டுணிகள் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் வளர்ச்சி அடைந்து வெளிவருகிறது.

சரியான சிகிச்சை அளிக்காவிடின், மலேரியா நோய் மிக ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும். அதனால் இந்நோய்க்கான காரணங்களையும், அறிகுறிகளையும் அறிந்துக் கொண்டு உங்கள் குடும்ப உறுப்பினர்களை இந்நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

 

காரணங்கள்

அனாஃபிலிஸ் வகை கொசுக்கள் மலேரியா உண்டாக காரணமானவை. மலேரியா இரத்தத்தினால் மட்டுமில்லாமல் உறுப்பு மாற்றுதல் செய்யும் பொழுது, இரத்தம் ஏற்றும் பொழுது, தொற்றுகளுடைய சிரிஞ்ச், ஊசி உபயோகிக்கும் பொழுது  அல்லது பிரசவத்தின் பொழுது தாயிடமிருந்து குழந்தைக்கு பரவலாம். ஏனெனில் இவை அனைத்தும் இரத்த ஓட்டத்தினுடன் சம்பந்த பட்டிருக்கிறது. விவாக்ஸ், பால்சிபாரம், மலேரியை, ஓவேல் என மலேரியாவுக்கு காரணமான நான்கு வகை ஒட்டுண்ணிகள் இருந்தாலும், பால்சிபாரம் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிதான் மரணத்தைக் கூட உண்டாக்கும் ஆபத்தான ஒட்டுண்ணியாகும்.

 

எச்சரிக்கையுடன் இருப்பதற்கான அறிகுறிகள்:

10 லிருந்து 30 நாட்களுக்குள் மலேரியாவுக்கான அறிகுறிகள் தெரிய தொடங்கும். ஒருவரை எந்தவகை பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி தாக்கியுள்ளது என்பதைப் பொறுத்து நோயின் தீவிரம் இருக்கும். ஆபத்தற்ற மலேரியா நோய்க்கான அறிகுறிகள் உடல் அசதி, குமட்டல் உணர்வு, வாந்தி, காய்ச்சல், தலைவலி, உடல் தசைகள் வலி, வயிற்று வலி, பேதி மற்றும் வியர்வை ஆகும். நோயின் தீவிரம் அதிகமாயிருக்கும் பொழுது சிவப்பு இரத்த அணுக்கள் அழியத் தொடங்குவதால்,  இரத்த சோகை, வலிப்பு, உணர்வற்ற கோமா நிலை, நினைவின்மை, சிறுநீரக செயலிழப்பு, குறைந்த சர்க்கரை அளவு, மனக் குழப்பம் போன்றவை இருக்கும். இவற்றால் மரணம் கூட சம்பவிக்கலாம்.

 

மலேரியாவை தடுப்பதற்கான வழி முறைகள்:

மலேரியாவை பரப்பும் கொசுக்கள், வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் அதிக இனப்பெருக்கம் செய்வதாலும் அங்கு  எளிதாக மலேரியா பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும், அங்கு செல்வதை தவிர்க்கவும். அங்கு செல்வதை தவிர்க்க இயலாத பட்சத்தில், மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான முன்னெச்சரிக்கை மருந்துகளை எடுத்துக்கொண்டு பாதிப்பிலிருந்து விடுபடவும். மேலும் அதற்கான சில முன்னெச்சரிக்கை வழிகள் இதோ:

  • முழு கீழ கையுடைய லேசான நிறமுடைய உடை அணியவும்.
  • கூடிய வரை உடல் முழுவதையும் மறைக்கும் உடையை அணியவும்.
  • இயற்கை எண்ணெய்களான லெமன் கிராஸ் போன்றவற்றை உபயோகித்தால் அவை கொசு விரட்டிகளாக செயல்படும்.
  • கொசுக்கள் அதிகள் உள்ள இடங்களில் நீங்கள் வசிப்பவரானால், கொசு வலை உபயோகிக்கவும்.
  • கொசு தெளிப்பு மருந்துகளையும் உபயோகிக்கலாம்.

Image Source:  flickr, consumer reports, NIH

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன