Search

Home / Women Health Tips in Tamil / ஆஸ்துமாவுக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதை சமாளிக்கும் முறை

ஆஸ்துமாவுக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதை சமாளிக்கும் முறை

Subhashni Venkatesh | ஆகஸ்ட் 9, 2018

ஆஸ்துமா என்பது மூச்சு திணறலையும், நுரையீரலின் மூச்சு குழாய்களில் வீக்கத்தையும் ஏற்படுத்தும் ஒரு நாள்பட்ட நோய் ஆகும். ஆரம்ப காலங்களில் ஆஸ்துமா லேசாக, கடுமையின்றி இருக்கும் என்பதால் பெரும்பாலோனருக்கு அதன் அறிகுறிகள் தெரிவது இல்லை. ஆனால் இந்நோயை அலட்சிய படுத்தினால், மிகவும் அபாயகரமான நிலைமைக்கு இட்டு செல்லும். அதனால் சரியான நேரத்தில், அதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை அறிந்துக் கொள்வது மிக அவசியம்.

 

காரணங்கள்-

தீவிர வானிலை அல்லது காய்ச்சல் போன்றவை தான் ஆஸ்துமா ஏற்பட முக்கியமான காரணங்கள் ஆகும். மூச்சு விடுதல் சம்பந்தமான சுவாச நோய்களினாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது. மேலும் நாம் தீவிர உணர்வுகளுக்கு ஆட்படும்போது ஆஸ்துமா தூண்டப்படுகிறது. ஒருவர் உரக்க கத்தி பேசும்  பொழுதும் மூச்சு திணறல் ஏற்பட்டு ஆஸ்துமா ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வலுவான வாசனை, புகை, தூசி, விலங்குகளிடம் ஒவ்வாமை, பூக்களின் மகரந்த தூள் ஒவ்வாமை போன்றவைகளும் ஆஸ்துமாவை உண்டாக்கும். இவை அனைத்தும் ஆஸ்துமாவின் பொதுவான காரணங்கள்.

ஆனால் ஒரு சிலரை மட்டும் இந்நோய் தாக்க காரணம் நம் சுற்றுப்புற சூழலே ஆகும். மேலும் வெளிப்புற சூழ்ல்களினால் ஏற்படும் ஒவ்வாமையை தாங்கிக்கொள்ளும் எதிர்ப்பு சக்தி ஒவ்வொரிடமும் வேறுபடுகிறது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்களுக்கு மற்றவர்களை விட சுலபமாக நோய் தொற்று ஏற்படுகிறது. நம் ஒவ்வொருவர்  உடல் செல் அமைப்புகளின் வித்தியாசம், நுரையீரலை இணைக்கும் மூச்சு குழாய்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

 

அறிகுறிகள்-

  • ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், சிரிக்கும் பொழுது, தொடர்ந்து பேசும் பொழுது அல்லது உடல் பயிற்சி செய்யும் பொழுது இரும்மத் தொடங்குவார்கள்.
  • அந்த நபருக்கு  மூச்சு விடுவதில் தடை (வீசிங்) ஏற்படும், பெரும்பாலும் மூச்சை வெளிவிடும் பொழுது குறட்டை ஒலி போன்ற சத்தம் ஏற்படும்.
  • மூச்சு திணறல், ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறி.
  • நெஞ்சில் / மார்பில் ஒரு இறுக்கம் அல்லது விறைப்பு தன்மை இருப்பது போல் தோன்றும்.
  • மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும்.
  • அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும்.
  • சில நாட்கள் முதல் பல வாரங்களுக்கு இருமல் நீடிக்கும்.

ஆரம்ப நாட்களில் அறிகுறிகள் தெளிவாக தென்படாவிட்டாலும், மூச்சுவாங்கினால் அந்த நபருக்கு கண்டிப்பாக ஆஸ்துமா இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருப்பினும் மேற்கூறிய அறிகுறிகள் சில நாட்களுக்கு நீடித்தால் , மருத்துவரை கண்டிப்பாக அணுகவும்.

 

ஆஸ்துமாவை சமாளிப்பது எப்படி?

உங்களுக்கு ஆஸ்துமா இருப்பது கண்டறியப்பட்ட பின், சில முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, சுலபமாக மூச்சு விடுமாறு பார்த்துக்கொள்ளலாம்.

  • மருத்துவர் பரிந்துரைத்த இன்ஹேலேரை உபயோகிக்கவும்.
  • மிகவும் மக்கள் நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
  • தூசி, புழுதி, வலுவான வாசனை, ஸ்ப்ரே உள்ள பகுதிகளிலிருந்து விலகி இருப்பதன் மூலம் ஆஸ்துமாவை தூண்டாமல் இருக்கலாம்.
  • மருத்துவரை ஆலோசிக்காமல் எந்த மருந்தையும் தானாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
  • புகப் பிடிக்காதீர்.
  • வீட்டு ஜன்னல், கதவு திரை சீலைகள், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்து மாற்றவும். வீட்டையும், வீட்டின் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்கவும்.

Subhashni Venkatesh

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன