Home / Uncategorized / உங்கள் வாழ்வை சுலபமாக்கக்கூடிய அண்மைக்காலத்து 6 பிரஷர் குக்கர்கள்
உங்கள் வாழ்வை சுலபமாக்கக்கூடிய அண்மைக்காலத்து 6 பிரஷர் குக்கர்கள்
Subhashni Venkatesh | ஆகஸ்ட் 9, 2018
SHARE
சமையல் என்னும் கலையின் மூலம் யார் மனதிலும் இடம் பிடிக்க முடியும். ஒரு மனிதனின் இதயத்தில் அவன் வயிற்றின் வழியே இடம் பிடிக்கலாம் என்று சொல்வதுண்டு. வானிலையை சார்ந்து நம் சமையல் இருப்பதுண்டு. எடுத்துக்காட்டாக மழைக்காலங்களில் எண்ணெயில் பொரித்த மொறு மொறு பஜ்ஜி, பக்கோடா போன்றவைகளும், குளிர் காலங்களில் சூடான சூப் முதலானவையும் சாப்பிட தோன்றும். சுலபமாக சமையல் செய்ய, தரமான, நல்ல சமையல் உபகரணங்கள் தேவை. நம்மருகில் தரமான சமையல் உபகரணங்கள் இருந்தால் சுவையான உணவை எளிதில் சமைக்கலாம்.
மார்கெட்டில் தற்போது கிடைக்கும் 6 அண்மைக்கால பிரஷர் குக்கர்கள்:
Table of Contents
1)ஹாகின்ஸ் ஃப்யூட்சுரா
அம்சங்கள்:
மின் முலாம் (அனடைஸ்ட்) பூசிய கடின அலுமினியத்தால் செய்யப்பட்ட இந்த குக்கர் உணவுடன் சேர்ந்து இராசாயான எதிர்வினை புரியாமல் உணவை பாதுகாப்புடன் வைத்திருக்கிறது.
அலுமினியத்தை உபயோகித்து இதை செய்ய காரணம் அதன் கடின தன்மை மற்றும் உபயோகிக்க இலகுவாக இருப்பதுமாகும்.
6.35 மி.மீ தடிமன் அடிப்பாகம் கொண்ட இந்த குக்கர், இன்டக்ஷன் தவிர எந்த வகையான பர்னர் கொண்ட அடுப்பிலும் உபயோகிக்கலாம்.
மைக்ரோவேவ் விட 46சதவிகிதம் துரிதமாக உணவை சமைக்கிறது.
நல்ல இறுக்கமாக பொருத்தப்பட்டுள்ள மூடி இருப்பதால் அது நீராவியினால் எந்த தருணத்திலும் திறந்து கொள்ளாது. அதனால் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கிறது.
2)மண் சட்டி குக்கர்
அம்சங்கள்:
சுட்ட மண்ணினால் செய்யப்பட்ட இந்த குக்கரில் சமைக்கப்பட்ட உணவு நம் உடல் ஆரோக்யத்திற்கு மிகவும் நல்லது என்பது இதன் சிறப்பம்சம்.
காவி நிறத்தில் இருக்கும் இந்த குக்கரின் கொள்ளளவு 3 லிட்டர் ஆகும்.
இது காஸ் அடுப்பு மற்றும் இன்டக்ஷன் அடுப்பு இரண்டிலும் உபயோகிக்கலாம்.
எளிதாக குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.
சுத்தம் செய்வதும் சுலபம்.
3)ஹாகின்ஸ் கான்ட்சுரா
அம்சங்கள்:
இக்குக்கரின் அடிப்பாகம் மின் முலாம் (அனடைஸ்ட்) பூசிய கடின அலுமினியத்தாலும், மூடி எவர்சில்வராலும் செய்யப்பட்டது.
3 லிருந்து 4 நபருக்கு சமைக்க ஏற்ற உபகரணம் இது.
இதன் அடிப்பாகம் 3.25 மி.மீ தடிமன் உடையது.
இதன் சிறப்பம்சம், இதனால் வெப்பத்தை வேகமாக உள்வாங்கிக் கொண்டு உணவை துரிதமாக சமைக்க முடியும்.
இதை காஸ் அடுப்பு பர்னரில் மட்டும் தான் வைத்து சமைக்க முடியும்.
4)ப்ரெஸ்டீஜ் டீலக்ஸ் ப்ளஸ்
அம்சங்கள்:
காஸ் அடுப்பு, இன்டக்ஷன் அடுப்பு இரண்டிலும் இந்த குக்கரை உபயோகிக்குமாறு வடிவமைக்கப் பட்டிருப்பது இதன் சிறப்பம்சம்.
பருப்பு, அரிசி, காய்கறிகள் போன்ற பலவகை உணவுகளை இதில் சமைக்க முடியும். மேலும் இதை வானலி போல் வதக்கவும் உபயோகிக்கலாம்.
நீங்கள் தனி நபராக இருந்தாலோ அல்லது சிறிய குடும்பத்தை உடையவராக இருந்தாலோ உங்களுக்கு பொருத்தமான குக்கர்.
அதன் கனத்த அடிப்பாகம் வேகமாக வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு உணவை துரிதமாக சமைக்கிறது.
5)ப்ரெஸ்டீஜ் நக்ஷத்திரா
அம்சங்கள்:
மிக அழகான இந்த குக்கர் சமைத்தவுடன், குக்கரை அப்படியே உணவு உண்ணும் மேஜையில் வைத்து பரிமாறும் படி நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
சமைக்க, வேக வைக்க, பொரிக்க என பல விதமாக இந்த குக்கரை உபயோகிக்கலாம்.
காஸ் அடுப்பு, இன்டக்ஷன் அடுப்பு இரண்டிலும் இந்த குக்கரை வைத்து சமைக்கலாம்.
நீடித்து, நிலைத்து நிற்க கூடிய தரமான பொருட்களால் செய்யப்பட்ட திடமான இந்த குக்கரை பராமரிப்பதும் மிக சுலபம்.
6)பீஜியன் கடின மின் முலாம் பூசப்பட்ட சூப்பர் குக்கர்
அம்சங்கள்:
பாரம்பரிய அமைப்பை கொண்ட இந்த குக்கர் அதன் தரத்திற்கும், செயலாற்றலுக்கும் உத்திரவாதம் அளிக்கிறது. உங்கள் சமியலறைக்கு ஏற்ற “ஆல் இன் ஒன்” சூப்பர் குக்கர் இது.
இந்த கருமை நிற குக்கர் கீறல் விழாத தன்மை உடையது.
இதை உபயோகிப்பவர்களை மனதில் கொண்டு இதன் கைப்பிடியை சிறியதாக வடிவமைத்திருந்தாலும், அது மிகவும் சூடு ஆவதில்லை.
COMMENTS (0)