Search

Home / Uncategorized / மூல நோய்க்கான  காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:

மூல நோய்க்கான  காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:

Subhashni Venkatesh | ஆகஸ்ட் 30, 2018

ஹெமராய்ட்ஸ் என்று அறியப்படும் மூலம் ஆசனவாயில் காணப்படும் ஒரு சிறிய சதை அல்லது திசு ஆகும். அவை முறையான குடல் இயக்கத்திற்கு உதவுகின்றன. ஹெமராய்ட்ஸ் அதிகபடியாக வீக்கமடையும் சமயம், இரத்த நாளங்கள் பெரிதாகும் பொழுதும் வலி உண்டாகி, இரத்தப் போக்கு, அரிப்பு, உறுப்பு வெளியே தள்ளப்படுதல் போன்ற நிலைகள் உருவாகின்றன. இந்த நிலை ஹெமராய்டல் நோய் அறிகுறிகளால் ஏற்படும் நோய்த்தாக்கம் எனப்படுகிறது. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ எழுபது சதவிகிதம் மக்களுக்கு மூல நோய் பாதிப்பு இருக்கிறது. பெரும்பாலோருக்கு மூல நோய் தாக்கம் சிறு அளவில் இருப்பதால், அதற்கான எந்த அறிகுறியும் தெரிவதில்லை. இந்த காரணத்தினால் தான் மக்களுக்கு தாங்கள் மூல நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிய முடிவதில்லை.

 

காரணங்கள்

மூல நோய்க்கான சரியான காரணங்கள் கண்டறியப்படவில்லை என்றாலும், அதிகமான அழுத்தத்தை வயிற்று பகுதிக்கு கொடுப்பதே இந்நோய்க்கான காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கீழே கூறப்படும் காரணங்களால் அழுத்தம் உண்டாகலாம்:

 • அதிக சிரமப்பட்டு மலம் கழித்தல்
 • கனமான பொருட்களை கையாளுதல்
 • அதிகப்படியான மசாலா உணவுகளை உட்கொள்ளுதல்
 • வயது முதிர்ச்சியால் பலவீனமடைந்த திசுக்கள்
 • பெருங்குடல் புற்று நோய்
 • நாள்பட்ட இருமல்
 • மலம் கழித்தலை அடக்கி வைத்தல்
 • அடிகடி வாந்தி எடுத்தல்
 • குத செக்ஸில் ஈடுபடுதல்
 • குடல் அழற்சி நோய்
 • மல இறுக்கம்
 • உடற் பயிற்சி இல்லாதது

 • குறைந்த நார்ச்சத்துடைய உணவு
 • கல்லீரல் நோய்
 • தண்டுவடத்தில் அடிபடுதல் அல்லது
 • வயிற்று போக்கு

இவையெல்லாம் மூல நோய்க்கான பொதுவான அறிகுறிகளாக இருந்தாலும், குடும்பத்தில் யாருக்காவது இந்நோய் இருந்தாலோ அல்லது மரபு வழியாகவோ ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

 

அறிகுறிகள்

மூல நோய்க்கான பொதுவான அறிகுறிகள் இவையாகும்:

 • ஆசனவாய் சுற்றி புண்கள், சிவப்பாக மாறுதல், அரிப்பு போன்றவை.
 • கடினமான கட்டி ஆசனவாய் அருகில் தோன்றும். உறைந்த இரத்தமுள்ள அந்த கட்டியினால் வலி உண்டாகும்.
 • மலம் கழிக்கும் பொழுது இரத்தப்போக்கு. ஆனால் வலி இருக்காது. இரத்தம் அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆசனவாயை சுற்றி வீக்கம்.
 • மலம் முழுவதும் வெளியேறாதது போல் உணர்வு.
 • மலம் கழிக்கும் பொழுது வலி.
 • ஹெமராய்ட் ஆசன வாய் விட்டு வெளியே வரும் பொழுது நீட்டிக்கொண்டு இருப்பது.

 

கடுமையான தாக்கம் உள்ளவர்களுக்கான அறிகுறிகள்

 • இரத்தசோகையை உண்டாக்கும் அளவுக்கு அதிகபடியான இரத்தபோக்கு.
 • தொற்று நோய்.
 • மலம் கழித்தலை கட்டுபடுத்த முடியாத மலச்சிக்கல்,  ஒத்திசைவு என்னும் நிலை.
 • ஹெமராய்ட்டுக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படும் இரத்த உறைவு.
 • பௌத்திரம் உண்டாகுதல். அதாவது ஆசனவாய் தோல் மற்றும் ஆசனவாய் உள்பகுதி இடையே புதிய தோல் உருவாகுதல்
 • மலத்தில் சளி சேர்ந்து வெளியேறுதல்
 • குறுகிய நேரம் நீடிக்கும் ஆசன வாய் வலி.
 • எப்போழுதுமே வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் ஹெமராய்ட்.

 

மூல நோயை தானாகவே வீட்டு சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் போன்றவற்றின் வழியாக தீர்க்க முடியும். முக்கியமாக ஒருவர் தன வாழ்வில் அறிமுகப்படுத்த வேண்டிய மாற்றங்கள்:

1)உங்கள் உணவில் நார்ச்சத்து அதிகமுள்ள பதார்த்தங்களை சேர்க்கவும்.

2)கழிப்பறைக்கு செல்லும் நேரத்தை நீடிக்காமல் இருப்பது.

 

3)எடையை குறைத்தல்

 

4)அதிகப்படியான மசாலா உணவை தவிர்த்தல்

மேற்கூறிய மாற்றங்களை கடைப்பிடித்த பின்னரும், ஆசன வாயில் வலி, இரத்தப்போக்கு குறையவில்லை என்றால், கண்டிப்பாக மருத்துவரை அணுகவும். மருத்துவர் பாதிப்படைந்த இடத்தை நன்கு பரிசோதித்து, நோயின் தீவிரப்படி சிகிச்சை அளிப்பார்.

 

Image sources: Wikimedia, Pexels and Pixabay

Subhashni Venkatesh

BLOG TAGS

Uncategorized

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன