வீட்டிலேயே எளிதாக செய்யக் கூடிய,  உங்கள் சருமத்திற்கான உப்டன்கள்

Spread the love

ஒவ்வொரு இந்திய பெண்ணிற்கும் உப்டன் என்பது என்ன என்று தெரிந்திருக்கும் ! நம் பழமையான பாரம்பரிய முறைப்படி  பிறந்த குழந்தைகளுக்கும், மணப் பெண்களுக்கும் சுத்தமான, பிரகாசமான சருமத்தைப் பெற உப்டன் தடவுவது வழக்கம். பொதுவாக இந்திய திருமணங்களில் மஞ்சள் பூசும் சடங்கு வைப்பது உண்டு. அதில் மஞ்சள் விழுதை மணப்பெண் மற்றும் மணமகன் உடல் மற்றும் முகத்தில் பூசுவர்.

உங்கள் சருமத்தை பராமரிக்க உப்டன் மிகச் சிறந்த வழியாகும். உப்டன் மங்கிய சருமத்தை பளிச்சென்று மாசு மரு இல்லாமல் பொலிவுறச் செய்து, தோலின் இறந்த செல்களை நீக்குகிறது. நீங்கள் வீட்டில் உப்டன் செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. வழக்கமாக உப்டன் உங்கள் சமையலறையில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்தே எளிமையாக செய்யலாம். வாரத்திற்கு ஒருமுறை உப்டனை உபயோகித்து இயற்கையாக உங்கள் சருமத்திற்கு புத்துணர்வு ஊட்டவும்.

சுலபமாக உங்கள் வீட்டில் செய்யக்கூடிய உப்டன் செய்முறைகள் உங்களுக்காக இங்கே கொடுக்கப் பட்டுள்ளது:

 

1.மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவு  

ஒரு கப் கடலை மாவில், இரண்டு தேக்கரண்டி மஞ்சள் தூள் , ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய்  அல்லது பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து குழைக்கவும். இதை உங்கள் உடலில் தடவி தானாக உதிரும் வரை காய விடவும். பின் இளஞ்சூடான வெந்நீர் விட்டு துடைத்து எடுக்கவும். இது உங்கள் சருமத்தின் பொலிவை அதிகமாக்கி இறந்த செல்களை அழித்து சருமத்தை மிருதுவாக்குகிறது. இதை உங்கள் முகம் மற்றும் உடல் முழுவதும் வாரத்திற்கு இருமுறை தடவலாம்.

 

2.மங்கிய, தொய்வடைந்த சருமம், கரும் புள்ளிகளுக்கான உப்டன்

ஒரு முழு மேஜைக்கரண்டி கடலைமாவில், ஒரு தேக்கரண்டி பால் அல்லது பால் பௌடர் மற்றும் ஒரு தேக்கரண்டி சந்தன பொடி சேர்க்கவும். அதில் ஒரு அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு குழைக்கவும். பாலை திரிய விடாமல் தேன் நன்கு கலக்குமாறு பார்த்துக் கொள்ளவும். விழுது மிக கெட்டியாக இருந்தால் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம். இதை உங்கள் முகம் மற்றும் உடலில் நன்கு அடர்த்தியாக தடவி, உணர்ந்தவுடன் உதிர்த்து விடவும். இது உங்கள் சருமத்தை பளிச்சென்று ஆக்கி கரும் புள்ளிகளை மெதுவாக மறையச் செய்யும்.

 

3.சுத்தமான சருமத்திரற்கான ஓட்மீல் உப்டன்

ஒரு கப் கரகரப்பாக அரைத்த ஓட்மீலுடன், 2 தேக்கரண்டி கடலைமாவு, சந்தனப்பொடி, 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து அதில் சிறிது வெள்ளரி சாறு விட்டு குழைக்கவும். இதை விழுதாக்கவும். இந்த விழுதை உங்கள் உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றி சருமத்தை மென்மையாக்க முடியும்.

 

4.கோதுமை தவிடு உப்டன்

இந்த மிக சுலபமான உப்டன் மிகவும் பயனுள்ளது. இரண்டு பெரிய மேஜைக்கரண்டி கோதுமை தவிட்டுடன் , அதே அளவு தயிர் சேர்த்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். அதை நன்கு குழைத்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும். அதற்குள் உங்கள் உடலை நல்லெண்ணெய் கொண்டு நன்கு மசாஜ் செய்யவும். அதன் பிறகு இந்த விழுதை உங்கள் உடலில் தடவி 15-20 நிமிடங்கள் ஊற விடவும். நன்கு காய்ந்த பின் இளஞ்சூட்டு நீர் கொண்டு கழுவவும்.

 

Image Source: www.pixnio.com, www.stylecraze.com, www.youtube.com, www.bollywoodshadis.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன