Home / Women Health Tips in Tamil / தோல் புற்றுநோய்க்கான காரணங்களும் அறிகுறிகளும்
பெண்கள் பொதுவாக தங்கள் தோற்றத்தின் மேல் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். தங்கள் சரும தோற்றத்தின் பொலிவிற்காக எல்லாவித முயற்சிகளையும் எடுப்பார்கள். ஆனால் வெளிப்புற தோற்றத்தைவிட, சருமத்தின் உட்புற ஆரோக்யத்தை பேணி காப்பது மிக அவசியம். அவ்வாறு செய்வது தீவிர தோல் நோய்கள் உங்களை தாக்காவண்ணம் பாதுகாப்பு அளிக்கிறது.
தோல் புற்றுநோய் என்பது மனித உடலில் தோன்றும் ஒரு பொதுவான வகை புற்று நோயாகும். தோல் செல்கள் அசாதாரணமாக பெருகி, வளர்ச்சியடைந்து பெருந்திரளாக மாறி ட்யூமர் / கட்டி உண்டாகிறது. இந்த ட்யூமர்களில் மாலிக்னன்ட் செல்கள் இருந்தால் அவை புற்றுநோயாக மாறுகின்றன. அப்படிப்பட்ட அந்த செல்கள் உடல் முழுவதும் பரவி, உடலின் மற்ற பாகங்களான எலும்புகள், பக்கத்தில் உள்ள திசுக்கள், இரத்த ஓட்டம் போன்றவற்றை பாதிக்கிறது. அதனால் ஆரம்பகால கண்டுபிடிப்பு இந்த புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்க மிகவும் உதவுகிறது.
Table of Contents
யாரை எளிதாக தோல் புற்றுநோய் தாக்கக் கூடும்?
தோல் புற்றுநோய்க்கான அறிகுறிகளை தெரிந்து, புரிந்து வைத்துக் கொள்வதன் மூலம் அதை தொடக்கத்திலேயே சிகிச்சை அளித்து கட்டுப்படுத்தலாம்.
மொத்தம் மூன்று வகை தோல் புற்றுநோய் இருக்கிறது. அவை:
இது உலகம் முழுவதும் பரவலாக காணப்படும் புற்றுநோய் வகை. சிறு இளஞ்சிவப்பு நிறத்தில் புடைத்து இருக்கும். அல்லது சிறிய குருதிக்கலன்கள் இதன் வெளிப்பரப்பில் காணப்படும். நடுப்பகுதியில் சிறிய பள்ளம் போலும் இருக்கும். பொதுவாக கழுத்து அல்லது தலை பகுதியில் தோன்றும். மற்ற புற்று நோய்கள் போல் இது உடலின் மற்ற பாகங்களுக்கு பெரும்பாலும் பரவாது. இந்த புற்றுநோய் செல்கள் மிக மெதுவாகத் தான் பரவும்.
இந்தவகை தோல் புற்று நோயானது முகம், கழுத்து, காதுகள், கைகள் போன்ற சூரிய கதிர்கள் நம் உடலின் மேல் படும் பகுதிகளில், தோலின் மேல் பகுதி எனக் கூறப்படும் எடபிடர்மிஸ் பகுதியில் தான் தோன்றுகிறது. அடிக்கலப் புற்று நோயைவிட இது ஆபத்தானது. உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவக் கூடியது. இது சிவப்பு திட்டாக தோன்றி செதில் செதிலாக தோற்றமளிக்கும்.
மூன்று வகைகளில் மிகவும் ஆபத்தானது இவ்வகை புற்று நோயாகும். அரிதான வகையானாலும், இவ்வகை புற்றுநோய் அதிக இறப்புகளை விளைவித்திருக்கிறது. ஆண், பெண் இருவருக்கும் தோன்றும் இந்நோய் பெரும்பாலும் அதிக சூரிய ஒளி படாத கால்கள், கைகள், உள்ளங்கால்கள், ஆசனவாய், பிறப்புறுப்பு, விரல் நுனி போன்ற இடங்களில் உண்டாகிறது. அடர்ந்த பழுப்பு நிறத்தில் பெரும் புள்ளியாக தோன்றும். வயது வந்தபின் புதிய மச்சங்கள் வலி அல்லது இரத்த போக்குடன் உண்டானால் மருத்துவ பரிசோதனை கண்டிப்பாக செய்துக் கொள்ள வேண்டும்.
கரிநிறமிப் புற்றுநோய் கண்டுபிப்பதற்கான எளிய பரிசோதனை
உங்கள் சருமத்தில் ஏதாவது அசாதாரண மாற்றம் தோன்றினால் மருத்துவரை அணுகவும். பெரும்பாலும் தோல் புற்றுநோய் புடைப்புகள் குணமாகாத கட்டிகளாக தவறாக புரிந்துக் கொள்ள படுகிறது. அதனால் சிக்கல்களை தவர்க்க இதைபற்றி நன்று புரிந்துக் கொள்ளுதல் மிக அவசியம். கதிர்வீச்சு சிகிச்சை, மருந்து, மாத்திரைகள் போன்றவை தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கக் கூடும் என்றாலும் இதற்கான பக்க விளைவுகளை நாம் எதிர்க்கொள்ள வேண்டும். மற்ற பாதுகாப்பு வழிமுறைகள் அதிகமாக சூரிய ஒளியில் போகாமல் இருத்தல், சன்-ஸ்க்ரீன் லோஷன்கள், லிப் பாம் உபயோகித்தல், கண்களுக்கு கண்ணாடி போட்டுக் கொள்ளுதல் போன்றவை உங்களுக்கு சூரிய கதிர்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. ரசாயனங்கள் உபயோகிப்பதை தவிர்க்கவும்.
Image source: pixabay, wikimedia, wikipedia commons, flickr, pexels
COMMENTS (0)