சிக்கன்குனியாவிற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தற்காப்பு முறைகள்
Subhashni Venkatesh | ஆகஸ்ட் 17, 2018
SHARE
மழைக்காலங்களில், பொதுவாக பரவும் நோய் சிக்கன்குனியா ஆகும். டெங்கு, மலேரியா போல் இதுவும் தேங்கிய மழைநீரில் இனப்பெருக்கம் செய்யும் கொசுக்களால் உண்டாகிறது. மாடா ஆடிஸ் என்னும் கொசுவால் கடிக்கப் படும்போது சிக்கன்குனியா நோய் ஏற்படுகிறது. ஆரம்ப காலத்தில் வைரஸ் காய்ச்சல் மற்றும் தீவிர மூட்டு வலி உண்டாகும். கிட்டத்தட்ட ஒரு வார காலத்திற்கு இந்நோய் தாக்கப்பட்டவர் தீவிர மூட்டுவலியால் அவதி படுவதால் அசதியடைந்து பலவீனமாகி விடுகிறார்.
Table of Contents
காரணங்கள்
சிக்கன்குனியா நோய், மாடாஆடிஸ் என்னும் கொசு கடிப்பதால் ஏற்படுகிறது.
அளவில் பெரியதாக இருக்கும் இந்த கொசுக்கள் பெரும்பாலும் பகலில் தான் கடிக்கிறது.
இந்த கொசு பல மனிதர்களை கடிக்கும் தன்மை உடையது. ஒரு சாதாரண கொசு, இந்நோயால் பாதிக்கப்பட்ட நபரை கடித்தால், சிக்கன்குனியா வைரஸ் அந்த கொசுவிற்கு தொற்றுகிறது.
அறிகுறிகள்
1.அதிக காய்ச்சல்
2.மூட்டு வீக்கம், கடுமையான வலி
3.உடல் தடிப்புகள்
4.முதுகு மற்றும் தசை வலி
5.தலைவலி
6.இருமல் மற்றும் ஜலதோஷம்
7.வெளிச்சத்தை காண முடியாமல் கண் கூச்சம்
8.தூக்கமின்மை
சிகிச்சை
இந்நோய்க்கான அறிகுறிகள் யாரிடமாவது தென்பட்டால், அவரை உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவரிடமோ அல்லது மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்லுங்கள். சிக்கன்குனியாவிற்கென குறிப்பாக எந்த சிகிச்சையோ மருந்தோ இல்லையெனினும், சாதாரண மருந்துகளும் சற்றே நிவாரணம் அளிக்கின்றன.
வைரஸின் தாக்கத்தை கண்டறிய, அதற்கென உள்ள சில பிரத்யேகமான பரிசோதனைகளை செய்யவேண்டும். RTPCR டெஸ்ட், வைரஸ் தனிமை பரிசோதனை, செராலாஜிக்கள் பரிசோதனை போன்றவை அவற்றில் சில ஆகும்.
திரவ உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும்.
டிஸ்பிரின், ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்.
தற்காப்பு முறைகள்
சிக்கன்குனியா பெரும்பாலும் மழை காலங்களில்தான் பரவுகிறது. அதனால் மழை நீர் தேங்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால், தேங்கிய நீரில் மண்ணெண்ணெய் ஊற்றினால், அது கொசு முட்டைகளையும், கொசுக்களையும் அழிக்கிறது. .
வாட்டர் கூலரில் அடிக்கடி நீரை மாற்றவும்.
வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது, உடல் முழுவதும் மூடுமாறு உடைகளை அணிந்து சென்றால், கொசுக் கடியிலிருந்து தப்பிக்கலாம்.
மீன் தொட்டி இருந்தால், அதை எப்பொழுதும் மூடி வைக்கவும்.
குழந்தைகள் பள்ளி அல்லது வெளியே செல்லும் முன் கொசு விரட்டும் களிம்புகளை தடவிக் கொள்ளலாம்.
Image Source: Flickr, Pxhere, Wikipedia, Wikimedia Commons, Pixabay, Show Air Force Base, Air Force medical services, Public Domain Pictures.
COMMENTS (0)