இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றி உங்கள் ஆரோக்யத்தை பேணுங்கள்

Spread the love

வாஸ்து சாஸ்த்திரத்தை பின்பற்றுவது மூலம் வீட்டில் நேர்மறையான சூழலையும் நல்ல அதிர்வுகளையும்  உருவாக்க முடியும். இது நல்ல ஆரோக்யத்திற்கு வழி வகுக்கும். ஆரோக்யமான வீடு, நல்ல ஆரோக்யத்தை நோக்கி இட்டுச் செல்லும்.

உங்கள் உடல் ஆரோக்கியம் நேரிடையாக நீங்கள் வாழும் சூழலுடன் தொடர்பு உடையதால், ஆரோக்யமான, நல்ல சூழலுடைய வீடு மிக அவசியம். வீட்டில் உள்ள சரியான வாஸ்து உங்கள் நோய்களையும் குணப்படுத்தி, மனம் மற்றும் உடல் ஆரோக்யத்திற்கும் உதவுகிறது. உங்கள் உடலுக்கு வாஸ்து புத்துணர்வு அளித்து, நோயை எதிர்த்து வேகமாக போராடுவதற்கான சக்தியையும் அளிக்கிறது. உங்கள் வீட்டில் ஒருவேளை, தவறான வாஸ்து இருந்தால் உடல் நலக் குறைவு, மன அழுத்தம் மற்றும் எதிர்மறை அதிர்வுகள் போன்றவைகளை ஏற்படுத்தும்.

உங்களின் உடல் ஆரோக்யத்திற்கும், மனஅழுத்தம், உடல் உபாதைகளை தவிர்க்கவும் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில வாஸ்து குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

 

1.நீங்கள் படுத்துறங்கும் திசை:

நீங்கள் எப்பொழுது உறங்கினாலும், உங்கள் தலை தெற்கு நோக்கி இருக்கும்படி படுத்துக்கொள்ளவும். இந்த திசையில் நீங்கள் படுப்பதினால், உங்களால் நல்ல தூக்கத்தை பெற முடியும். நல்ல தூக்கம் நல்ல ஆரோக்யத்தை கொடுக்கும். மேலும் வலப்புறமாக திரும்பி படுத்து உறங்கவும்.

 

2.படிகட்டுகள்

படிக்கட்டுகள் உங்கள் வீட்டின் முக்கியமான ஒரு அம்சம். வீட்டின் நடுவில் எப்பொழுதும் படிக்கட்டுகள் இருக்கவே கூடாது. அவை எப்பவுமே ஒரு வீட்டின் ஓரத்தில் தான் இருக்கவேண்டும்.

 

3.சமையலறைக்கான பொருத்தமான இடம்

வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் சமைலறைக்கென சரியான இடம் உள்ளது. உங்கள் வீட்டின் தென்-மேற்கு மூலையில் சமைலறை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு அமையவில்லை என்றால், வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.

 

4.மேலே இருக்கின்ற உத்தரம்

எந்த ஒரு வீட்டிற்கும் உத்தரம் மிக முக்கியமான ஒன்று. அவை வீட்டிற்கு நல்ல வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி, அழகையும் கொடுக்கிறது. வீட்டின் நடுவே உத்தரம் குறுக்கிடாதபடி பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் அவை எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.

 

5.வீட்டினுள்ளே செடிகள் வளர்க்கவும்

உட்புற தாவரங்கள் வீட்டிற்கு மிகவும் நல்லது. அவை வீட்டினுள் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தும். வீட்டினுள் வடக்கு நோக்கி பச்சை நிற சட்டியில், பச்சை தாவரங்களை வைத்தால் உங்கள் செல்வத்தை பெருக்கி, தொழில் வளர்ச்சியடைய உதவுகிறது. உட்புற தாவரங்கள் ஆரோக்யத்தை மேம்படுத்தி, நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

 

Image Source: Pixabay, Wikipedia, Mukuro energy living.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன