இந்த உணவுகளை உறைய வைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

Spread the love

சில மூலிகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை புதிதாகத்தான் உண்ண வேண்டும் என்றாலும் சிலவகையான உணவுகளை உறைய வைத்து சில நாட்கள் கழித்து தேவைப்படும் பொழுது அதன் தரத்தில்  எவ்வித மாற்றமும் இன்றி உபயோகபடுத்த முடியும். ஆம்! உணவுகளை உறைய வைப்பதினால், நம் நேரம் மற்றும் மிச்சப்படுவதில்லை, மளிகை பொருள்களுக்காக நாம் செலவிடும் பணமும் மிச்சமாகிறது. உணவை உறைய வைப்பதற்கு முன், அதன் மேல் அன்றைய தேதியையும் மறக்காமல் எழுதி ப்ரீசரில் வைக்கவும். அதன் மூலம், எவ்வளவு நாட்களாக அவ்வுணவு ப்ரீசரில் இருக்கிறது என்பதை அறிந்துக்கொண்டு அதன்படி உபயோகப்படுத்தலாம்.

எந்தெந்த உணவுகளை உறைய வைக்கலாம் என்பதை அறிந்துக் கொள்வதன் மூலம் உணவை வீணாக்குகிறோம் என்ற குற்ற உணர்வையும், வருத்தத்தையும் தவிர்க்கலாம்.

 

1.பால்

ஒரு டம்ளர் பாலுடன் உங்கள்  நாளை தொடங்குவது மிகவும் சிறந்தது. நம் வீட்டருகில் உள்ள சூப்பர் மார்கெட் அல்லது கடைகளில் அட்டை டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் பாலுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் பொழுது பாலை அதிக அளவில் வாங்கி உறைய வைத்துக் கொள்ளலாம். உறைந்த பால் வாரக்கணக்கில் கெட்டுப் போகாமல் இருக்கும். பாலை உறைய வைப்பதற்கு முன் மறக்காமல் அதன் மேல் தேதியை குறிப்பிடவும். காபி அல்லது கார்ன் பிளேக்ஸ் போன்றவற்றிற்கு உபயோகிப்பதற்கு முன் நன்கு குலுக்கி விட்டு உபயோகிக்கவும்.

 

2.பாஸ்தா

குறைந்த விலையில் கிடைக்கும் பொழுது நீங்கள் ஒரு வேலை பெரிய டப்பா  பாஸ்தா வாங்கியிருந்தால், அதிலிருந்து சிறு அளவை உபயோகப்படுத்திவிட்டு மிச்சத்தை ப்ரீசரில் போட்டு தாரளமாக உறைய வைக்கலாம். பாஸ்தாவை பட்டர் பேப்பர் என்கிற மெழுகுத்தாள் அல்லது காகித தாளில் (பார்ச்மன்ட் பேப்பர்) வைத்து சுற்றி, அதை ஒரு ஜிப்லாக் கவரில் போட்டு ப்ரீசரில் வைக்கவும். சமைப்பதற்கு முன் ப்ரீ-ஹீட் செய்வது அவசியம்.

 

3.நட்ஸ் / கொட்டைகள்

பலவகை  நட்ஸ் நீங்கள் வாங்கியிருந்தால் அவை அனைத்தையும் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடி பிரீசரில் வைக்கவும். தேவைப்படும் பொழுது உபயோகித்துக் கொள்ளலாம். நட்ஸ்களில் கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால், வெளியே வைக்கும் பொழுது சீக்கிரமாக கெட்டுபோய் துர்நாற்றம் வீசக்கூடும். ப்ரீசரில் வைப்பதன் மூலம் அதன் ஆயுள் காலத்தை அதிகரிக்கலாம்.

 

4.பிரட்/ரொட்டி

நம் பிரதான உணவுகளில் ஒன்றான பிரட்டை, ப்ரீசரில் வைப்பதன் மூலம் ஒரு சில நாட்களுக்கு கெட்டுபோகாமல் பார்த்துக்கொள்ளலாம். இது ஒரு நல்ல யோசனையாகும். திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால், ப்ரீசரில் உள்ள பிரட்டை சாண்ட்விச் செய்து நாம் உண்ணலாம். அல்லது டோஸ்ட் செய்து விருப்பமன ஸ்ப்ரெடை அதன் மேல் தடவி உண்ணலாம்.

 

5.தக்காளி விழுது

தக்காளி விழுது, தக்காளி கூழ் இவையிரண்டும் நம் இந்திய சமையலில் உபயோகிக்கப்படும் ஒரு அடிப்படை பொருள். எந்த ஒரு எளிமையான கறி அல்லது க்ரேவி செய்ய ஒரு மேஜைக்கரண்டி தக்காளி விழுது சேர்த்தால் போதுமானது. மிச்சம் உள்ள கூழ் அல்ல விழுதை வீணாக்காமல் ஐஸ் க்யூப் தட்டில் அல்லது ஒரு டப்பாவில் ஊற்றி உறைய வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் பொழுது வேண்டிய அளவு 2-3 தக்காளி விழுது க்யூப்களை மட்டும் சூடு படுத்தி சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

6.மாவு

அதிக எண்ணெய் பசையுள்ள மைதா, கோதுமை போன்ற மாவு வகைகளை ப்ரீசரில் மாதக் கணக்கில் வைத்து உபயோகித்துக் கொள்ளலாம். சுத்தமான, காய்ந்த, காற்று புகாத டப்பாக்களில் போட்டு மூடி, ப்ரீசரில் வைக்கவும்.

 

7.பழுப்பு அரிசி / பிரவுன் ரைஸ்

பழுப்பு அரிசி எனப்படும் பிரவுன் ரைஸ் வேக அதிக நேரம் எடுக்கும். அதனால் தேவையான அரிசியை சமைத்துவிட்டு, மீதமுள்ளதை காற்று புகாத டப்பாவில் போட்டு ப்ரீசரில் உறைய வைக்கலாம். இதை மாதக்கணக்கில் உறைய வைக்கலாம். பாதி வெந்த, உறைந்த பிரவுன் அரிசியை எளிதாக, தேவைப்படும்பொழுது உபயோகிக்கலாம். இந்த முறையை சாதா வெள்ளை அரிசியிலும் பின்பற்றலாம். அதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.

 

8.முட்டைகள்

முட்டைகள் மாதக்கணக்கில் ப்ரீசரில் கெட்டுபோகாமல் புதிதாக இருக்கும். அவைகளை முழு முட்டைகளாகவோ அல்லது மஞ்சள் கருவை, வெள்ளை கருவிலிருந்து பிரித்து எடுத்து இரண்டையும் தனி தனி டப்பாக்களில் போட்டு வைத்தோ ப்ரீசரில் வைக்கலாம். அவற்றில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு வைத்தால் கொழ கொழவென்று ஒட்டாமல் இருக்கும். முட்டையை அடித்தோ, கலந்தோ கூட உறைய வைத்துக் கொள்ளலாம். இதனால் நம் நேரமும் மிச்சமாகிறது. மேலும் சிறிய அளவில் முட்டை கலவை தேவைப்படும் உணவுகளுக்கு , வேண்டிய அளவு மட்டும் எடுத்து சமைத்துக் கொள்ளலாம்.

 

9.மூலிகைகள் மற்றும் நறுமணப்பொருட்கள் (மசாலா)

வாசனைக்காக மட்டுமே முக்கியமாக மூலிகைப் பொருட்கள் உணவில் சேர்க்கப்படுவதால் மிக சிறிய அளவு மட்டுமே நமக்கு தேவைப்படுகிறது. ஆனால் புது மூலிகைப் பொருட்கள் தான் நறுமணச்சுவையை கூட்டுகிறது. மீதமுள்ள மூலிகை பொருட்களை என்ன செய்வது? தேவையானவற்றை உபயோகித்த பிறகு, மீதமுள்ளவற்றை ஒரு இறுக்கமான காற்று புகாத சிப்பர் பையில் போட்டு ப்ரீசரில் வைக்கவும். இஞ்சி , பூண்டு போன்ற மற்ற மசாலா பொருட்களுக்கும் இதே முறை தான். ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது மட்டுமே தேவைப்படும் நேரங்களில், மீதமுள்ளவற்றை உறைய வைக்கலாம். இது நம் நேரம், பணம் இரண்டையும் மிச்சப்படுத்துகிறது.

 

ப்ரீசரில் உறையவைக்கக் கூடிய வெறு சில உணவுகள் :

  • பேக் செய்யப்பட பிஸ்கட்கள், பழ கேக், மப்பின்ஸ், க்ரீம் இல்லாத கேக், ப்ரௌனீஸ் போன்றவைகள்.
  • பிட்ஸா மாவு, குக்கீஸ் மாவு, பிரட் மாவு மற்றும் கேக் மாவு.
  • இறைச்சி, சிக்கன் மேலும் மீன், நண்டு போன்ற கடல் உணவுகள், பன்றி இறைச்சி, சமைத்த பன்றி இறைச்சி.
  • பாலில் தயாரிக்கப்படும் வெண்ணெய், சீஸ் போன்றவை.
  • மாம்பழம், காளான், ப்ரகோலி, பீட்ரூட், அன்னாசிபழ துண்டுகள் மற்றும் பச்சை பட்டாணி.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன