உங்கள் வளர்ச்சிக்கான வாஸ்து குறிப்புக்கள்

Spread the love

இந்திய புராணங்களின்படி, குபேரன் செல்வங்களின் அதிபதி ஆவார். சரியான வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் செல்வத்தையும் வளமையையும் உங்கள் வீட்டில் குடியேற வைக்கலாம். வாஸ்து அல்லது கட்டிடக்கலை சாஸ்திரப்படி ஒவ்வொரு திசைக்கும், குறப்பிட்ட நோக்கம் உள்ளது. ஜோதிட கலைஞர்கள் மற்றும் வாஸ்து சாஸ்திர நிபுணர்களின் கூற்று படி, நம் வீட்டில் வாஸ்துவை பின்பற்றும் பொழுது கடவுள்கள் சந்தோஷம் அடைகிறார்கள். உண்மையில் கடவுள்கள் சந்தோஷம் அடைகிறார்களா இல்லையா என்பது புதிராகவே இருந்தாலும், வாஸ்து நம் வீட்டில் தேவையற்ற சண்டை சச்சரவுகளை தடுத்து, வளமான வாழ்வை தருகிறது.

இங்கே உங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் வாஸ்து குறிப்புகளை உங்கள் வீட்டில் செயல்படுத்தினால், அது கண்டிப்பாக நல்ல வாய்ப்புகளுக்கும் வெற்றிக்கும் வழி வகுக்கும்:

 

1.உங்கள் வீட்டிற்கான நுழைவாயில்

உங்கள் வீட்டிற்கான நுழைவாயிலை நீங்கள் வாஸ்து சாஸ்திரப்படி வடிவமைக்க வேண்டும். உங்கள் வீட்டின் கிழக்கு அல்லது வட-கிழக்கு திசையில் உங்கள் வீட்டிற்கான நுழைவாயில் இருக்க வேண்டும். நுழைவாயில் பகுதியை சுத்தமாகவும், எந்த தடையும் இல்லாமல் வைத்திருக்க வேண்டும். நல்ல வெளிச்சமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம். ஒருகாலும் நுழைவாயில் கதவு அருகே காலணிகளை வைக்க கூடாது.

 

2.“ஏழு குதிரைகள்” ஓவியம்

வாஸ்துவில் பந்தய குதிரைகளுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. பந்தய குதிரைகள் சக்தி மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக விளங்குகின்றன. ஏழு குதிரைகளின் ஓவியம் உங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான சக்தியை அளிக்கிறது. உங்கள் வீட்டில் தெற்கு திசையை நோக்கி இருக்கும் சுவற்றில் இந்த படத்தை மாட்டவும்.

குறிப்பு:படத்தை சுவற்றில் மாட்டுவதற்கு முன் இரண்டு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். முதலில் படத்தில் உள்ள குதிரைகள் கோபம் அல்லது வருத்தத்துடன் இல்லாமல் சந்தோஷ குதிரைகளாக இருக்க வேண்டும். இரண்டாவதாக குதிரைகள் ஒரே திசை நோக்கி ஓடுவதாக இருக்க வேண்டும்.

 

3.சுவர் கடிகாரத்தின் இடம் மற்றும் அது காட்டும் நேரம்

கடிகாரத்தில் நேரத்தை சரி செய்யும் பொழுது பெரும்பாலும் யாரும் மற்றொரு முறை கூட நினைத்து பார்ப்பது இல்லை. வாஸ்து சாஸ்திரப்படி, கடிகாரங்கள் உங்கள் வீட்டின் தெற்கு திசை நோக்கி இருக்க கூடாது. கதவுகளுக்கு மேல் அல்லது அருகில் கடிகாரங்களை மாட்டக் கூடாது. கடிகாரம் ஓடவில்லை என்றால் உடனே சரி செய்யவோ அல்லது அந்த இடத்திலிருந்து அகற்றவோ வேண்டும்.

குறிப்பு: ஒருபோதும் நேரத்தை சரியான நேரத்திற்கு பின்னால் வைக்காதீர்கள், அது உங்கள் முன்னேற்றத்தை தடை செய்யும். நேரத்தை 2 நிமிடங்கள் சரியான நேரத்திற்கு முன்னால் வைக்கவும்.

 

4.தண்ணீர் செல்வத்தின் அடையாளம்

வாஸ்து சாஸ்திரப்படி தண்ணீர் கசிவதை நிறுத்தினால், பண விரயத்தை தடுக்க முடியும். நீர் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுவதால், தண்ணீர் விரயம் செய்தால், அது பண விரயத்தை குறிக்கிறது. உங்கள் வீட்டின் அசுத்த நீர், தேங்கிய நீரை அகற்ற வேண்டும். எந்த குழாயிலும் நீர் கசியவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி ஏதாவது இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

 

5.பணம் செடிகளிலும் வளர்கிறது

வீட்டினுள் வளர்க்கும் உட்புற தாவரங்கள் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியுடன் சம்பந்தப்பட்டது. மணி பிளான்ட் நேர்மறை சக்தியை வீட்டினுள் ஏற்படுத்துவதால், அவை அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் தருகின்றன. அவற்றை அறையின் தென்-கிழக்கு திசையில் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் அது அதிக வருமானத்திற்கு வழி வகுக்கும் என்று நம்பப் படுகிறது. அவற்றை ஈசான மூலையிலோ, வட-கிழக்கு திசையிலோ வைக்கவே கூடாது.

 

6.லாக்கர் / பாதுகாப்பு பெட்டகத்தின் முன் கண்ணாடி

பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வைக்க உங்கள் வீட்டில் பாதுகாப்பு பெட்டகம் இருக்கும். அதன் எதிர் புறத்தில் ஒரு நிலை கண்ணாடி வைக்க வேண்டும். நீங்கள் எப்பொழுதெல்லாம் லாக்கரின் கதவை திறக்கிறீர்களோ அப்பொழுது அதனுள் இருக்கும் பணத்தின் பிம்பம் கண்ணாடியில் பிரதிபலிக்கும். அது உங்கள் பணம் இரட்டிப்பாகும் என்பதை பிரதிபலிக்கிறது. மேலும் அது நேர்மறை சக்தியை ஈர்த்து, உங்கள் வீட்டின் நிதி நிலைமையை செம்மைபடுத்துகிறது.

 

Image Credits – Luxury_furniture_desgin, Pinterest, Pexels, Popular Mechanics, Max_Pixel, Flickr.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன