பெண்களுக்கான சமீபித்திய மோதிர வடிவமைப்புகள்

Spread the love

அழகிய மோதிரங்கள் இல்லாத பெண்களின் விரல்கள் முழுமையடைவதில்லை. விழாக்கள் அல்லது விசேஷங்களுக்கு எந்த நகை அணிந்தாலும், மோதிரம் உங்கள் விரல்களில் அணிந்தால் தான், அலங்காரம் முழுமையடைகிறது. மோதிரங்கள் அன்பின் அடையாளமாக திகழ்ந்து, அதை அணிபவரின் பாணியை எடுத்துரைக்கிறது. இன்று தற்காலத்துக்கேற்ற பிரபலமான மோதிரங்களை பார்ப்போம்:

 

1.நவீன, கம்பீரமான மோதிரம்

நீங்கள் அதிக கனமில்லாத, ஆனால் அதி நவீன மோதிரத்தை விரும்புபவரானால், இந்த தங்க மோதிரத்தை நீங்கள் தேர்ந்தடுக்கலாம். இன்றைய காலகட்டத்தின் பெண்களின் மன வலிமை, மற்றும் உறுதியை இம்மோதிரம் பிரதிபலிக்கிறது. தினசரி உடைகளுக்கும், விசேஷ நாட்களின் உடைகளுக்கும் ஏற்ற மோதிரம் இது.  

 

2.மயில் வடிவமைப்பு

எப்பொழுதும், அனைவரும் விரும்பி வேண்டும் வடிவமைப்பு இது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே! மயில் வடிவில் பதிக்கப்பட்ட நீல நிற கல், ஜிர்கான் அல்லது வைரம் அதற்கு மிக அழகான ஒரு பார்வையை கொடுக்கிறது. மோதிரத்தில் பதிக்க வேண்டிய கற்கள் வெள்ளை நிற கற்களா அல்லது வேறு நிற கற்களா என்பதை நாமே முடிவு செய்யலாம். இந்த மோதிரத்தின் வடிவமைப்பு ஒரு ராஜ களையின் அடையாளமாக இருக்கிறது.

 

3.நவரத்தின கற்கள் பதித்த கல்யாண மோதிரம்

உங்களுக்கு வெறும் வெள்ளை கற்கள் பதித்த மோதிரங்கள் அணிய விருப்பமில்லை என்றால், நீங்கள் மோதிரம் நடுவில் பல வண்ணக் கற்கள் பதித்த, அழகில் மெருகேறிய மோதிரத்தை தேர்ந்தெடுக்கலாம். நடுவில் உள்ள கல்லை சுற்றி பதிக்கப்பட்ட சிறு கற்கள், மோதிரத்தின் அழகை எடுத்துக்காட்டி அதனை பராமரிக்கிறது. உங்களுக்கு பிடித்த எந்த நிற கல்லை  வேண்டுமென்றாலும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கேற்ற நவரத்தின கல்லை உங்கள் ஜோசியரிடம் கலந்தாலோசித்து செயல் படலாம்.

 

4.ஓம் தங்க மோதிரம்

ஒருவருக்கு கடவுளின் மேல் உள்ள பக்தி மற்றும் நம்பிக்கைய காட்டும் மோதிரம் இது. இந்த மோதிரத்திற்கு என்றுமே நிலையான தேவை உண்டு. மற்றவர்களை தன்பால் ஈர்க்கும் தன்மை இம்மோதிரத்திற்கு உண்டு.

 

5.கிரீட வடிவ டிசைனர் மோதிரம்

இம்மோதிரம் அதன் அழகான கிரீட வடிவமைப்பின் மூலம் அதை அணிபவருக்கு இளவரசியின் தோற்றத்தை அளிக்கிறது. இதை அணிந்தால் நீங்கள் கண்டிப்பாக பாராட்டப்படுவீர்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

 

6.தனித்துவமிக்க தங்க முத்து மோதிரம்

தங்கம், முத்துவுடன் சேர்ந்து காட்சியளிக்கும் பொழுது அதன் அழகு இரட்டிப்பாகிறது. நீங்கள் எந்த உடை அணிந்தாலும் அதற்கு பொருத்தமான இம்மோதிரம் பார்க்க அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கும். இந்த மோதிரத்தை நீங்கள் உற்று நோக்கினால் கை, அழகாக வடிவமைக்கப்பட்ட முத்துவை பிடித்திருப்பது போல் தோன்றும்.

 

7.ஆமை மோதிரம்

வேதங்களின் கூற்றுப்படி, ஆமை அமைதி மற்றும் நேர்மறை எண்ணங்களின் அடையாளமாக திகழ்கிறது. ஆமை, வளமையையும் செல்வத்தையும் உங்கள் வாழ்க்கைக்கு அளித்து அமைதியை தருவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

 

Image Source: Caratlane, stylecentre, youtube, pinterest

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன