நீங்கள் உறுதியாக நம்பும் 10 சுத்தம் செய்யும் குறிப்புகள் !

Spread the love

நீங்கள் சுத்த பித்து பிடித்தவராக இருந்தாலும் அல்லது விருந்தாளிகள் வீட்டிற்கு வரும் முன்னர் சுத்தம் செய்பவர் ஆகட்டும், சுத்தம் செய்யும் குறிப்புகள் உங்கள் வாழ்வை எளிதாக்கும்! வீட்டை சுத்தம் செய்யும் இந்த குறிப்புகள் மூலம் உங்களது நேரம், சக்தி மற்றும் பணத்தை சேமியுங்கள்:

 

1.கலப்பானை சுத்தம் செய்தல்

கலப்பானில் இளம்சூடான தண்ணீர் மற்றும் சில துளி திரவ சோப்பை நிரப்பவும். கலப்பானை ஆரம்பிக்கவும். இதற்கு அப்பறம் சுத்தமான தண்ணீர் மூலம், கலப்பானை கழுவவும். குப்பை மற்றும் அழுக்கு மறைந்து உங்கள் கலப்பானை சுத்தமாக்கும்!

 

2.பாத்திரம் கழுவும் பஞ்சு

பாத்திரம் கழுவும் பஞ்சு தொட்டியிலேயோ அல்லது தண்ணீரிலேயோ விட்டுவிட்டால், அது பாக்டீரியாவை அழைத்து விடும், எனவே பஞ்சை கழுவுவது மிக முக்கியம் ஆகும். பஞ்சை மைக்ரோவேவில் 30 வினாடி வைத்து 1-2 நிமிடங்கள் வைத்து வெளியே எடுக்கவும். இப்பொழுது உங்கள் பஞ்சில் பாக்டீரியா இருக்காது.

 

3.உங்கள் மோதிரத்தை மின்ன செய்யுங்கள்

உங்கள் மோதிரத்தை மீண்டும் மின்ன வைக்க, ஹைட்ரஜன் பெராக்சைடு கலவையில் கழுவவும்.

 

4.கடும் நாற்றத்தையும் விடா கரையையும் போக்க எலுமிச்சை உபயோகிக்கவும்

குழாய் மற்றும் துாவாலைக்குழாயில் இருக்கும் விடா கறைகளை எலுமிச்சை கொண்டு தேய்ப்பதின் மூலம் எடுத்து விடலாம். இந்த உபயோகபடுத்தின எலுமிச்சையை சமையலறை அல்லது குப்பைக்கூடையில் போட்டு வைத்தால், துர்நாற்றத்தை போக்கலாம்.

 

5.அடுப்பின் மேல் வளையங்கள்

எவ்வளவு தான் சோப்பு வைத்து சுத்தம் செய்தாலும், அடுப்பின் மேல் உள்ள வளையங்களில் உள்ள துரு மற்றும் எறிந்த துகள்கள் போகாது. ஒரு ஜிப்லாக் பையில், சாதாரண அமோனியாவை

போட்டு அடுப்பு வளையங்களை போடவும். இந்த பையை  இரவு முழுவதும் வைத்து விடவும். காலையில் அடுப்பு வளையங்கள் மின்னுவதை பார்த்து ஆச்சரியப்படுவீர்கள்.

 

6.மின்விசிறி சுத்தம் செய்தல்

தினமும் சுத்தம் செய்தல் கடினம் என்பதால், மின்விசிறியை தீபாவளி அல்லது ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சிகளின் பொது தான் சுத்தம் செய்வோம். ஒரு தலையணை உறை இந்த வேலையை எளிதாக்கும். நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் மின்விசிறியின் கைகளை பழைய தலையணை உரையை வைத்து மூடவும். தலையணை உறையை கொண்டு மின்விசிறி கைகளை துடைத்தால், எல்லா அழுக்கும் தலையணை உரையில் ஒட்டி கொள்ளும்.

 

7.மர சாமான்களில் கீறல்கள்

1/4 கிண்ணம் வினிகர் மற்றும் 3/4 கிண்ணம் ஒலிவ் ஆயில் கலந்து கலவையை உங்கள் விலையுயர்ந்த மாற சாமான்களில் மேல் இருந்த கீறல்களை நீக்கி மெருகூட்டும்.

 

8.வெளியேற்றும் விசிறி

வெளியேற்றும் விசிறியை எவ்வாறு சுத்தம் செய்வது என்று மலைக்கிறீர்களா? உங்களுக்கு தேவையானது எல்லாம் சோப்பில் நனைத்த துணியினால் சுற்றப்பட்ட மழுங்கின கத்தி. இதை வைத்து உங்கள் வீட்டில் உள்ள வெளியேற்றும் விசிறியை சுத்தம் செய்யுங்கள்.

 

9.துணியில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை நீக்குதல்

உங்கள் சமையலறையில் இருக்கும் சாதாரண உப்பு கடினமான கறைகளை துணியில் இருந்து நீக்க உதவும். கறையின் மேல் உப்பை தேய்த்து 30 நிமிடம் விட்டு விடவும். சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீரினால் கழுவவும். அந்த கறை முற்றிலும் காணாமல் போய் விடும்.

 

10.பசைப்பட்டை உபயோகிங்கள்

விளக்குத்திரை, இழுப்பறை மேல் இருக்கும் மண் மற்றும் தூசை நீக்க உங்கள் விரல்களில் மேல் பசைப்பட்டையை சுற்றி துடைக்கவும்.

இந்த சுத்தம் செய்யும் குறிப்புகள் கடினமான இடம் மற்றும் கறைகளை சுலபமாக சுத்தம் செய்ய உதவும். உங்களுக்கு இது போல் ஏதேனும் குறிப்புகள் தெரிந்தாலும், எங்களிடம் பகிருங்கள்!

 

பட மூலம்: டுடே ஷோ, வைன் பேர், கண்டோலாசர்வே, கிளீனிங் பேன் ஐடியாஸ், சவுத் ஹோம் ரியாலிட்டி, ஒன்கிரேசிஹவுஸ், பாப்சுகர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன