Search

Home / Uncategorized / உங்கள் குழந்தைகளின் படுக்கையறைக்கான உபயோகமுள்ள வாஸ்து குறிப்புகள்

உங்கள் குழந்தைகளின் படுக்கையறைக்கான உபயோகமுள்ள வாஸ்து குறிப்புகள்

Subhashni Venkatesh | ஆகஸ்ட் 24, 2018

நாம் அனைவருமே இடைவிடாது நம் குழந்தைகளைப் பற்றியும் அவர்களின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படுபவர்கள் தான். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு எல்லாவற்றிலும் மிகச்சிறந்ததை கொடுக்கவே முயற்சி எடுக்கின்றனர். குழந்தைகளின் அறையை வாஸ்து சாஸ்திரப்படி வடிவமைத்தால் அது அந்த அறைக்கு சக்தியளித்து அவர்களின் வாழ்வை படைப்பாற்றல், வெற்றி மற்றும் வளம் மிக்கதாக்குகிறது.

 

உங்கள் குழந்தைகளின் படுக்கையறையை வாஸ்து சாஸ்திரப்படி வடிவமைக்க இதோ மிகச்சிறந்த குறிப்புகள்:

  • உங்கள் குழந்தையின் அறையை வீட்டின் மேற்கு புறம் இருக்குமாறு திட்டமிடுங்கள். மாற்றாக கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசையையும் தேர்ந்தெடுக்கலாம். இது அவர்களின் கிரகிக்கும் திறன் மற்றும் அறிவுத்திறனை அதிகரிக்கிறது.
  • அவர்கள் படிக்கும் அறையின் கதவு வடக்கு, கிழக்கு அல்லது வட-கிழக்கு திசையில் இருக்கட்டும்.ஆனால் படுக்கையை நோக்கி இருக்கக் கூடாது.
  • ஜன்னல்கள் கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். மேற்கு திசையில் ஒரு சிறிய ஜன்னல் அமைக்கலாம். இது கதவிற்கோ அல்லது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஜன்னலுக்கோ இணையாக இருக்க வேண்டும். ஜன்னல்களை திறந்து வைத்திருத்தல், அறைக்கு நல்ல காற்றோட்டத்தை அளித்து, எதிர்மறை சிந்தனைகளை குறைக்க வழி வகுக்கிறது.
  • படுக்கை தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். குழந்தை தன் தலையை கிழக்கு திசையில் வைத்து கிழக்கு மேற்காக படுத்திருத்தல் நல்லது. கூண்டுகள் போல் வடிவமைக்கப் பட்ட கட்டில்களை தவிர்க்க வேண்டும்.

  • உடை அலமாரிகள், புத்தக அலமாரிகள் போன்றவை தெற்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும்.
  • கணினி வடக்கு திசையில் இருக்க வேண்டும்.
  • மரச்சாமான்கள் அனைத்தும் குறைந்தபட்சம் சுவற்றிலிருந்து மூன்று அங்குல இடைவெளி விட்டு இருக்க வேண்டும்.
  • திடமான மரத்தில் செய்த பொருட்களை உபயோகப்படுத்தவும்.  

 

படிக்க உபயோகிக்கும் மேஜை

  • குழந்தைகள் படிப்பதற்காக உபயோகிக்கும் மேஜையை வடக்கு திசையில் வைக்கவும்.
  • வடக்கு திசை நோக்கி உட்கார்ந்து படித்தால், அவர்களின் ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்கும்.
  • நேரான பின்புறத்தை உடைய நாற்காலியை உபயோகித்தால் வாழ்வில் உயர்வு வரும்.
  • படித்துக் கொண்டிருக்கும் குழந்தையின் நிழல் புஸ்தகத்தின் மேல் விழக்கூடாது.
  • அம்மேஜையின் மேல் புத்தக அலமாரியை வைக்க கூடாது.

 

அறையின் உள்ளே

  • குழந்தைகளின் அறைக்கு பச்சை வர்ணம் கொடுக்கவும். வெளிர் மஞ்சள் நிறமும் நல்ல தேர்வு.
  • அதிக சுறுசுறுப்புடன் இயங்கும் ஹைபர் ஆக்டிவ் குழந்தைகளின் அறைக்கு நீல நிறம் மிகச் சிறந்தது.
  • அறைக்கு மேல் மாட்டக் கூடிய விளக்குகளை தென்கிழக்கு திசையில் மாட்டினால் நேர்மறை வெளிச்சத்தை உண்டாக்கும்.
  • சரஸ்வதி உருவ பொம்மை அல்லது சிலையை குழந்தைக்கு அருகிலோ அல்லது மேஜையின் மேலோ வைத்தால் அரை முழவதும் எப்பொழுதும் நேர்மறை சக்தி உண்டாகும்.
  • அறையின் வடகிழக்கு திசையை ஓடும் நீர் கொண்டு அலங்கரித்தால் புதிய சிந்தனைகள், அமைதி உண்டாகும்.
  • அதிக வெளிச்சம் தர்க்கொட்டிய, கண்களை கூச வைக்கும் விளக்குகளி உபயோகித்தால் அனாவசிய மன அழுத்தம் உண்டாகும்.
  • பாயும் குதிரை ஓவியத்தை உங்கள் குழந்தையின் அறையில் மாட்டி அலங்கரித்தால் அது நிலையான உத்வேகத்தை அளிக்கும்.

  • அறையின் நடுவில் வெற்றிடமாக இருக்க வேண்டும்.

 

மனதில் கொள்ள வேண்டிய மற்ற குறிப்புகள்

  • குழந்தைகளின் அறை எப்பொழுதும் நல்ல வெளிச்சத்துடன் பளிச்சென இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
  • கூர்மையான முனையுடைய, பழங்கால மரச் சாமான்களை தவிர்க்கவும்.
  • குழந்தைகளை படுக்கையில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்காதீர்கள்.

மேற்கூறிய இந்த எளிமையான வாஸ்து குறிப்புகள் குழந்தைகள் அறையில் நல்ல அதிர்வுகளை உண்டாக்கி, நேர்மறை சக்திகளை அள்ளிக் கொடுக்கும்.

Image sources: Pixabay and Pexels

Subhashni Venkatesh

BLOG TAGS

Uncategorized

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன