முடி உடைவதைத் தவிர்க்க ஜாவெத் ஹபீப் கூறும் குறிப்புகள்

Spread the love

ஒருவரின் அழகின் உருவகம் தான் முடி. ஆனால் நமது நாட்டில், முக்கியமாக பெண்கள், பெருமளவில் முடி உடைதல் அல்லது முடி உதிர்வதை சந்திக்கின்றனர். இதனால் முடியின் அடர்த்தி குறைகிறது. முடி உதிர்வதற்கும் உடைவதற்கும் நிறைய காரணங்கள் உண்டு. புகழ் பெற்ற முடி வளர்ச்சி நிபுணர் ஜாவெத் ஹபீபின் படி, இந்தியாவில் முடி உதிர்வதற்கு காரணம் நாடு முழுவதிலும் பரவி இருக்கும் தவறான தகவலே.

அதனால் இங்கே முடி வளர்ச்சி நிபுணர் ஜாவெத் ஹபீபின் குறிப்புகளை வழங்குகிறோம். இது முடி உதிர்வதை மற்றும் உடைவதை தடுக்கும்:

 

1.அடிக்கடி ஷாம்பு போடுங்கள்

ஷாம்பூவை பற்றி மிக பொதுவான தவறான தகவல் என்னவென்றால், ஷாம்பூவில் ஆபத்தான ரசாயனம் உள்ளது அது முடியை சேதப்படுத்தும் என்பது. உண்மையில், ஷாம்பூவின் உபயோகமே உங்கள் தலையை சுத்தம் செய்து முடியை அழுக்கில்லாமல் வைத்து கொள்வதே. சரியான இடைவெளியில் ஷாம்பு போடாவிட்டால் தலையில் எண்ணெய்ப்பசை அதிகரித்து பொடுகு ஏற்படுத்தும். இது முடியை இன்னும் பலவீனப்படுத்தி விரைவில் முடி நரைக்க காரணமாகும்.

இதை தீர்க்க ஒரே நிவாரணம் சரியான இடைவெளியில் முடிக்கு ஷாம்பு போடு குளிப்பதே ஆகும். அதுவும் நீங்கள் அடிக்கடி வெளியே செல்பவராக இருந்தால், அழுக்கு மற்றும் ஆபத்தான குப்பைகளை முடியில் இருந்து அகற்ற ஷாம்பு உபயோகிங்கள். அப்படி செய்யும் பொழுது உங்கள் முடியின் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் முடியை ஆரோக்கியமாக அடர்த்தியாக வைத்திருக்கும்.

 

2.அதிக எண்ணெய்யை தவிர்க்கவும்

நிறைய எண்ணெய் ஊற்றி முடியை மசாஜ் செய்து கொள்வதில் மக்களுக்கு அதிக ஆர்வம் உண்டு! அவ்வப்போது நல்ல மசாஜ் செய்து கொள்வது மகிழ்ச்சியை உண்டாக்கும். ஆனால் நிறைய பேர் எண்ணெய் போடுவதால் முடி பலவீனமாகி கொட்டுகிறது என்று கூறுகின்றனர். அதனால் எண்ணெய் முடிக்கு நல்லதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. உண்மையில், எண்ணெய் முடியில் ஈரப்பதம் இருப்பதற்கு உதவுகிறது. அதனால் எவ்வளவு அதிகம் நீங்கள் எண்ணெய் போட்டாலும், அதை சரியாக கழுவாவிட்டால், முடி உதிர்வை ஏற்படுத்தும். அதீத எண்ணெய் தோலின் துவாரங்களை அடைத்து கொண்டு முடியிழப்பை ஏற்படுத்துகிறது.

தீர்வு : எண்ணெய் தேய்த்து இரவு முழுவதும் விடாதீர்கள். எண்ணெய் தேய்த்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் குளித்து விடுங்கள்.

 

3.கண்டிஷனரை சரியாக உபயோகிக்கவும்

கண்டிஷனரின் பிரதான நோக்கமே முடியை ஈரப்படுத்துவது தான். ஏனென்றால் ஷாம்பு போடுவதால் அதிக எண்ணெய் மற்றும் அழுக்கு நீங்கி முடி மற்றும் தோல் வறண்டு போகலாம். சில பேர் கண்டிஷனரை சரியாக உபயோகிக்க தெரியாமல் குழம்பி விடுவார்கள்.

கண்டிஷனெரி உபயோகிக்க சரியான வழி ஷாம்பு போட்டு கழுவின முடியை துண்டால் உலர்த்தி பிறகு போடுவதே ஆகும். சிறிய அளவு கண்டிஷனரை எடுத்து முடியின் நுனி முதல் வேர் வரை போடவும். தோலில் கண்டிஷனர் படாதவாறு பார்த்து கொள்ளவும். கண்டிஷனர் போட்ட பிறகு 5 நிமிடம் அப்படியே விடவும். இப்பொழுது கண்டிஷனரை கழுவும் முக்கிய பாகம் வருகிறது. கண்டிஷனர் மிகவும் வலிமையானது என்பதனால் முழுமையாக அலசி விடவும். சரியாக அலசப்படாத கண்டிஷனர் முடி உதிர்வை ஏற்படுத்தும்.

 

For further details, watch the video below:

Image credits: Youtube, Pixabay.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன