இயற்கையாக துள்ளும் கூந்தலை பெறுவதற்கான டிப்ஸ்

Spread the love

பொதுவாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னை படிந்த, துள்ளாத கேசம் ஆகும். நம் தலையில் எண்ணெய் பசை சுரப்பதால், முடி ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு, துள்ளல் தன்மையை இழந்து விடுகிறது. பெண்கள் எல்லாவிதமான இரசாயன பொருட்கள், ஹேர் ட்ரையர் போன்றவற்றை தங்கள் கூந்தலை துள்ளச் செய்வதற்காக உபயோகிகிரார்கள். இன்னும் சில பெண்கள் தங்கள் முடியை அடர்த்தியாகவும், அதிகமாக இருக்கும்படி தெரியுமாறு வெட்டிக் கொள்கிறார்கள். அனால் இந்த எல்லா வழிகளுமே தற்காலிகமானது தான். மேலும் வெகு நாட்களுக்கு இவற்றை பின்பற்றும் பொழுது உங்கள் கேசத்திற்கு கேடு விளைவிக்கும். முடியை அதிக சூட்டிற்கும், இராசயனங்களுக்கும் உள்ளாக்குவது உங்கள் கேசத்தை மேலும் வறட்சியாக்கி, சோர்வடைய செய்யும். அதன் இயற்கை பொலிவையும் இழந்து விடும்.

அப்பொழுது, எப்படித்தான் முடியை அலை பாய்ந்து, துள்ள செய்வது? இதோ கேச நிபுணர் ஜாவேத் ஹபிப் உங்கள் முடியை எளிமையாக துள்ளச் செய்வது எப்படி என்று விளக்குகிறார்:

 

மெஹந்தி / மருதாணி-

நம் நாட்டில் பண்டைய காலம் முதல், பாரம்பரியமாகவே முடி நரையை மறைப்பதற்கும், கேசத்தின் பொலிவிற்கும் மருதாணி உபயோகிப்பது வழக்கம். அதே மருதாணி உங்கள் கேசத்தை துள்ளவும் செய்யும். மருந்தானி / மெஹெந்தி ஒரு மிகச் சிறந்த கண்டிஷனராக செயல்பட்டு முடியின் இழை நயத்தை அதிகரிக்கும். ஜாவேத், ஒருவர் எண்ணெய் பசையுள்ள தலைக்கு மெஹந்தியை 5 நிமிடங்கள் மட்டும் தான் போடலாம் என்கிறார். மற்ற ஹேர் டை உபயோகிக்கும் முறையிலேயே மெஹந்தியையும் உபயோக்கிக்க வேண்டும். கேசத்தை நெகிழ்த்தி துள்ள உதவும். தலை முடிக்கு மெஹந்தி உபயோகிப்பதைப் பற்றி பல்வேறு பழங்கதைகள் உள்ளன. ஆனால் இது உங்கள் முடிக்கு அழகு, ஆரோக்யம் மற்றும் துள்ளலை தரும் ஒரு பழைய , பாரம்பரியமான வழி ஆகும்.

முழு செயல்முறைப் பற்றி தெரிந்துக் கொள்ள இந்த காணொளியை பார்க்க:

 

காற்றில் உலர்த்தல்

எந்த பொருட்களையும் உங்கள் கேசத்தில் உபயோகிக்காமல், இந்த எளிய முறையை பின்பற்றி உங்கள் கேசத்தை துள்ளச் செய்யலாம். ஒரு ஹேர் ட்ரையரை எடுத்து, அதன் நாசித் துவாரத்தை செங்குத்தாக வைத்து, பிரஷ் எதுவும் உபயோகிக்காமல் உங்கள் முடியை உலர்த்தவும். சூடு மிதமானதாக இருக்க வேண்டும். மிக்க சூடாகவோ. மிக்க குளிர்ந்தோ இருக்கக் கூடாது. இந்த ப்ரி-கண்டிஷனிங் (pre conditioning) முறையை தினமும் இருமுறை செய்துக் கொள்ளலாம். இது கேசத்திற்கு எந்த கேடையும் விளைவிக்காது. ஆனால் இதை வெகு நேரம் உபயோகிக்காமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் அதிக சூடு உங்கள் கேசத்தை பாதிக்கும்.

முழு செயல்முறைப் பற்றி தெரிந்துக் கொள்ள இந்த காணொளியை பார்க்க:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன