குளிர்காலத்திற்கேற்ற உங்கள் உடலை சூடாக வைத்திருக்க உதவும் 7 உணவுகள்

Spread the love

காலையிலும், மாலையிலும் காற்றில் லேசான குளிர் உங்கள் மூக்கு நுனியை வருடி செல்வது போல் தோன்றுகிறதா? ஆம் எனில், குளிர் காலம் உங்களை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது என அறிந்துக் கொண்டிருப்பீர்கள். பகல் பொழுது குறுகி, நீண்ட இரவுகளாய் மாறி,, வெப்பநிலை குறைய தொடங்கி விடும் காலம் இது.

அதனால் உங்களை வரப் போகும் குளிர் காலத்திற்கு தயாராக்கி கொள்ளுங்கள். பெட்டர் பட்டர் உங்களுக்காக, நீங்கள் குளிர் காலத்தில் உங்கள் உடலை சூடாகவும், இதமாகவும் வைத்துக் கொள்ள உதவும் 7 சிறந்த உணவுகளை பட்டியலிட்டு கொடுத்திருக்கிறது.

 

1.தண்டுக்கீரை விதைகள் ( அமரந்த் )

கம்பு, கீரை விதை போன்ற தானியங்கள் உங்களை இதமாகவும், சூடாகவும் குளிர்காலங்களில் வைத்திருக்க உதவுகிறது. சிறிது கீரை விதைகளுடன், பெர்ரி பழங்களை தூவி, தாராளமாக தேனையும் சேர்த்து பாருங்கள். இதை காலை அல்லது மதிய உணவாக எப்பொழுது வேண்டுமென்றாலும் உண்ணலாம். இதனுடன் கேழ்வரகு, கம்பு போன்ற சிறு தானியங்களையும் சேர்த்தால், குளிர் காலத்திற்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். அதிக ஆற்றலை அளிக்க வல்ல இந்த இரண்டு உணவுகளிலும் முக்கியமாக ஸ்டார்ச் / மாச்சத்து இருக்கிறது. சிறு தானியங்களில் ஸ்டார்ச் இருப்பதால், அவற்றை செரிமானம் செய்ய அதிக நேரம் தேவைப் படுகிறது. அதனால், உடலில் அதிக நேரத்திற்கு ஆற்றல் இயக்கப்படுகிறது.

 

2.இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை ஒரு குளிர்கால உணவு என்றே சொல்லலாம். அதன் நறுமணம் மற்றும் சுவை இரண்டும் உங்களை வெது வெதுப்பாகவும், இதமாகவும் உணர வைக்கிறது. மேலும் பட்டை உங்கள் உடல் மெட்டபாலிசத்தை மட்டும் அதிகரிக்காமல், உங்கள் உடலை சூடாக வைத்திருக்கவும் உதவுகிறது. அதை பால், ஹாட் சாக்லேட், காபி, தேநீர் எதனுடன் வேண்டுமென்றாலும் சேர்த்து, குளிருக்கு இதமாக அருந்தலாம்!

 

3.இஞ்சி

இஞ்சியில் இருக்கும் தெர்மோஜெனிக் குணம் உங்கள் உடலை சூடாக வைத்திருக்கிறது. இது மேலும் உங்கள் உடலின் மெடபாலிசத்தை உயர்த்தி, இரத்த ஓட்டத்தை உடலினுள் அதிகரிக்கிறது. இஞ்சி உடலை வலுவாக்கி, செரிமானத்தை மேம்படுத்தி இருமல் மற்றும் சளியை குணமாக்குகிறது.

 

4.தேன்

காலாவதியாகாத வெகு சிலப் பொருட்களில் தேனும் ஒன்றாகும். தேனில் உள்ள மருத்துவ குணங்கள் குளிர்காலத்தில் பொதுவாக உங்களை தாக்கும் ஜலதோஷம், காய்ச்சல் இரண்டிற்கும் சிகிச்சை அளிக்கிறது. இஞ்சி மற்றும் பட்டை போல தேனும் இயற்கையாகவே சூடான பொருள் ஆகும். அதனால் குளிர்காலத்தில் தேன் உங்களை சூடாகவும், இதமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

 

5.கடுகு

கடுகு, கடுகு எண்ணெய், ப்ரெஷ் கடுகு கீரை இலைகள் இவை அனைத்துமே உங்களை குளிர்காலத்தில் சூடாக வைத்திருக்க கூடியவை. உங்கள் உடலிற்கு கடுகு எண்ணெய் வைத்து ஒரு மசாஜ் கொடுத்து பாருங்கள்! மிகவும் இதமாக உணர்வீர்கள். இந்த இலைகளை வைத்து பாரம்பரிய உணவான “ சர்சன் கா சாக்” செய்து உண்ணலாம். குளிர் கால மாதங்களில் கடுகு சம்பந்தப்பட்ட பொருகளை வைத்து வித் விதமான உணவுகளை செய்து உண்ணலாம்.

 

6.குங்குமப்பூ

குங்கமப்பூ, உலகின் விலையுயர்ந்த நறுமணப் பொருளாக கருதப் படுகிறது. ஏனெனில் முந்தைய காலங்களில் அவை மிகப்பெரிய பணக்கார அரச குடும்பங்களில் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. இப்போழுதும், ஒரு சிறிய குங்கமப்பூ டப்பா அதிக விலை தான். பொலிவான சருமத்தை தருவதோடு, குளிர்காலங்களில் உங்கள் ஆரோக்யத்தை பேணி காக்க குங்கமப்பூ உதவுகிறது. குளிர் சமயங்களில் ஒரு சிட்டிகை குங்கமப்பூவை பாலில் கலந்து தினசரி அருந்தலாம்.

 

7.எள்ளு

எள்ளு உடலுக்கு, சருமத்திற்கு மற்றும் கேசத்திற்கு ஆகிய மூன்றிற்கும் பயன் அளிக்க வல்லது. இச்சிறிய விதைகள் நாள்பட்ட வியாதிகளான நிமோனியா, ஆஸ்த்மா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நோய்களுக்கு சிகிச்சையாக பயன்படுகிறது. மேலும் குளிர்காலங்களில் செய்யப்படும் பாரம்பரிய இனிப்புகலான ஹல்வா, சிக்கி போன்றவைகளில் சேர்க்கப்படுகிறது. இரும்புச்சத்தும், கால்ஷியமும் நிறைந்த இவற்றை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, அந்த நீரை காலையில் அருந்தலாம். எள்ளுடன் வெல்லம் சேர்த்து ஆற்றலை அளிக்கும் எள்ளுருண்டைகலாக பிடித்து தினமும் உண்ணலாம். அதனால் நீங்கள் குளிர்காலம் முழுவதும் ஆற்றலுடன் விளங்குவீர்கள். மேலும் எள்ளிலிருந்து எடுக்கும் நல்லெண்ணெய் சமையலில் உபயோகிக்கலாம்.

உங்கல் உடலை ஸ்வெட்டர், கோட், ஸ்கார்ப் கொண்டு மூடி இருப்பதுடன், குளிர் காலத்தில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை, உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு குளிர்காலங்களில் இயற்கையாகவே நீங்கள் சூடாக இருக்கலாம்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன