Search

Home / Uncategorized / கண்புரை நோயை தடுப்பது எப்படி?

கண்புரை நோயை தடுப்பது எப்படி?

Subhashni Venkatesh | அக்டோபர் 30, 2018

கண்புரை என்பது கண் வில்லையில் (lens) ஏற்படும் அடர்த்தியான திரை ஆகும். இது பொதுவாக தன் இயல்பு நிலையிலிருந்து மாற்றமடைந்த ஒருவித புரதங்கள் ஒன்று சேரும் பொழுது உருவாகிறது. அதனால் கண் வில்லையில் (lens) ஒளி ஊடுருவும் தன்மையைக்  குறைந்து விழித்திரைக்கு தெளிவான படத்தை அனுப்புவது தடுக்கப் படுகிறது. ஒளி தெளிவாக ஊடுருவ முடியாததால் பார்வை பாதிக்கப் படுகிறது.

கண்புரை நோயானது மெதுவாக வளர்ந்து முன் கூறியதைப் போல உங்கள் பார்வையை பாதிக்கத் தொடங்கும். பலவகையான கண்புரை நோய்கள் பலவிதமான காரணங்களால் உண்டாகின்றன. அவை:

வயது சம்பந்தப்பட்டவை: கண்புரை நோய் முக்கியமாக ஒருவரின் வயதுடன் நெருங்கிய தொடர்புடையது ஆகும். ஒருவர் மூப்படையும் பொழுது, கண்புரை அவர் கண்களில் உண்டாகும்.  இரு கண்களிலும் கண்புரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றாலும், ஒரே சமயத்தில் இருந் கண்களிலும் கண்புரை ஏற்படுவதில்லை.

பிறவியிலேய ஏற்படுவது: ஒரு குழந்தை பிறக்கும்பொழுதே கண்புரை நோயுடன் பிறந்தால் அது பிறவி கண்புரை ஆகும். தொற்று, காயம், கருவில் வளர்ச்சி குறைபாடு போன்றவை அதற்கான காரணங்களாக இருக்கலாம். இருந்தாலும் குழந்தை பருவத்திலும் கண்புரை ஏற்படலாம்.

இரண்டாவது காரணம்: சில மருத்துவ காரணங்களான நீரிழிவு நோய் போன்றவற்றால் உண்டாகும் கண்புரை நோய் இரண்டாம் வகையை சேர்ந்தது. ஒருவர் விஷ பொருட்கள் அருகாமையில் இருத்தல், புற ஊதா கதிர்கள், கதிர்வீச்சு, சிறுநீரிறக்கிகள், கார்டிகோஸ்டீராய்டுகள் போன்ற மருந்துகள் உபயோகித்தல் இவற்றால் இவ்வகை கண்புரை நோய் ஏற்படுகிறது.

காயம்: கண்களில் ஏற்படும் காயத்தால் இவ்வகை கண்புரை ஏற்படுகிறது.

கண்புரை நோயின் சில பொதுவான அறிகுறிகள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 • மங்கலான பார்வை
 • இரவில் பார்வை மங்குவது
 • வெளிறிய நிறங்களாக தெரிவது
 • வெளிச்சத்தை பார்த்தால் கண் கூசுவது
 • விளக்கை சுற்றி ஒளி வட்டம் தெரிவது
 • பாதிக்கப்பட்ட கண்களுக்கு எல்லாம் இரட்டையாக தெரிவது
 • பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடிகளை அடிக்கடி மாற்ற தோணுவது

பலதரப்பட்ட கண்புரைகள், அவற்றிற்கான காரணங்கள், பொதுவான அறிகுறிகள் போன்றவற்றை நன்கு புரிந்துக் கொண்ட, அவற்றை உங்கள் கண்களில் வளர விடாமல் தடுப்பது எப்படி என்று பார்ப்போம்:  

 

1.சரியாக சாப்பிடவும்

நீங்கள் உண்ணும் உணவை உங்கள் முகம் மட்டுமல்ல, உங்கள் கண்களும் பிரதிபலிக்கும். ஆன்டிஆக்சிடன்ட்கள், வைட்டமின் C மற்றும் வைட்டமின்- E நிறைந்த உணவுகளை உங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்ளவும். சிட்ரஸ் பழங்கள், தக்காளி, கிவி பழங்கள், ப்ரோகோலி, ஸ்ட்ராபெரி, மற்றும் உருளை கிழங்கு போன்றவைகளில் வைட்டமின் C சத்துக்கள் நிறைய உள்ளன. சூரியகாந்தி எண்ணெய், பாதாம், நிலக்கடலை, பசலைக்கீரை, மற்றும் ப்ரோகோலி போன்றவற்றில் வைட்டமின் E அதிகமாக உள்ளது.  

லுடீன் மற்றும் ஸீக்ஸாத்தைன் என்ற மற்ற இரண்டு வைட்டமின்களும் கண்களை பாதுகாக்க உதவுகின்றன. இவை முட்டை மற்றும் பச்சை நிற கீரை வகைகளில் அதிகம் இருக்கின்றன.

 

2.புகைப்பிடிப்பதை நிறுத்தவும்

புகைப்பிடிப்பது உங்கள் உடல் மற்றும் சருமத்திற்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் கண்களையும் மிகவும் பாதிக்கிறது. உங்கள் கண்களில் அதிகப்படியான கழிவுகள் புகைப்பிடிப்பதால் உண்டாகிறது. இந்த கழிவுகள் (free radicals) உங்கள் உயிரணுக்களை பாதித்து, உடலில் உள்ள நல்ல வேதி பொருள்களான ஆன்டிஆக்சிடன்ட்களை அழிக்கும் ஒரு வேதிப் பொருள் ஆகும். மேலும் புகைப்பிடிப்பதால் உடலில் பல நச்சுகள் உண்டாகி, கண்களில் புரையை உண்டாக்குகிறது.

 

3.கறுப்பு கண்ணாடி / சன்கிளாசஸ் அணியவும்

உங்கள் கண்களின் வில்லையில் (lens) உள்ள புரதங்களை புறஊதா கதிர்கள் சேதப்படுத்துகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். புறஊதா கதிர்கள் உங்கள் கண்களை தாக்காத வண்ணம் பாதுகாப்பதற்காக கறுப்பு கண்ணாடிகளை அணிய சொல்கிறார்கள். அக்கண்ணாடிகளை வாங்கச் செல்லும் பொழுது நீங்கள் கவனிக்க வேண்டியவை, கறுப்பு கண்ணாடிகள்:

 • 99%-100% புறஊதா நீண்ட மற்றும் குறுகிய அலை கதிர்களை தடை செய்ய வேண்டும்.
 • 75%-90% வெளியே உள்ள வெளிச்சத்தை உங்கள் கண்களின் திரைக்கு வெளியே அளிக்க வேண்டும்.
 • உங்கள் முகத்தோடு ஒத்து போகும் வண்ணமும், கண்ணாடியின் விளிம்பு கண்களுக்கு அருகிலும் இருக்க வேண்டும்.
 • சாம்பல் (grey) நிறத்தில் இருந்தால் வாகனம் ஊட்டும் பொழுது உபயோகமாக இருக்கும்.

 

4.இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்

இரண்டாம் வகையாக கூறப்படும் செகண்டரி கண்புரை நோய் நீரிழிவு நோய் போன்ற நோய்களாலும் வருகிறது. கண்புரை, இந்நோய் இல்லாதவர்களை விட, உள்ளவர்களுக்கு தான் அதிகம் வருகிறது. உங்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு வெகு நாளாக குறையாமல் இருந்தால், உங்கள் கண்களில் உள்ள வில்லைகள் வீக்கமடையும். அது உங்கள் சர்க்கரையை சார்பிட்டாலாக மாற்றுகிறது. சார்பிட்டால் குவியும் பொழுது உங்கள் பார்வை மங்கலடைகிறது. அதனால் கண்புரை உருவாகிறது.

 

5.முறையான கண் பரிசோதனை

உங்கள் கண் மருத்துவர் சுலபமாக உங்கள் கண்களில் உள்ள குறைபாடை பரிசோத்து கூறி விடுவார். நீங்கள் 40 முதல் 64 வயதிற்கு இடைப்பட்டவராயின் கண்டிப்பாக 2-4 வருடத்திற்கு ஒருமுறை கன் பரிசோதனை செய்துக் கொள்ளள வேண்டும். நீங்கள் 65 வயது மேற்பட்டவராயின் வருடத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு கண் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்குமாயின், அடிக்கடி கண் மருத்துவர் ஆலோசனை பெறுவது நலம்.

மேற்கூறியவை உங்களுக்கு கண்புரை நோய் வராமல் தடுக்க உதவலாம். இதைப்பற்றி மேலும் நன்கு அறிந்து, புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் மருத்துவரிடம் இதைப் பற்றி கேட்டு அறிந்துக் கொள்ளலாம்.

 

Sources:  AAPOS, Healthline, Health24, Inneseyeclinic.com, Pixabay, WebMD.

Subhashni Venkatesh

BLOG TAGS

Uncategorized

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன