Home / Home Remedies in Tamil (வீட்டு வைத்தியம்) / குறட்டையை தவிர்ப்பது எப்படி?
குறட்டை தனக்கு மட்டுமல்லாமல், அறையில் தூங்கும் மற்றவர்களின் தூக்கத்தையும் கெடுக்கும். தூங்கும் பொழுது காற்று மூக்கு மற்றும் தொண்டையின் வழியே சுலபமாக செல்ல இயலாத பொழுது குறட்டை ஏற்படுகிறது. தொண்டையில் உள்ள திசுக்களை அதிர செய்து குறட்டை ஒளி ஏற்படுகிறது. குறட்டைக்கு பொதுவான காரணங்கள் தூக்கத்தில் மூச்சு திணறல், மூச்சு குழாயில் அடைப்பு, மூச்சு குழாய் என்பது மூக்கு,வாய் அல்லது தொண்டையைக் குறிக்கும், அதிக உடல் தூக்கமின்மை ஆகும்.
எளிதில் கிடைக்கும் காட்ஜெட், மாத்திரை மற்றும் ஸ்பிரேக்கள் குறட்டையை விரட்டும் என்றாலும் அதை உபயோகிப்பதில் கவனம் தேவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய குறிப்புகளை முயற்சிக்கலாம்.
Table of Contents
(Source: https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRHtasv5vbEnA0bON7nBiBFRlMA3thSp_ZyFYkWCXOCK4prcPFM)
நீங்கள் ஏறி நின்ற உடன் எடை பார்க்கும் கருவி அதிவேகத்தில் சுழலுமானால், முதலில் நீங்கள் உடல் எடையை இழக்க வேண்டும். அதீத எடை இதயக்கோளாறு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், செரிமான கோளாறு போன்ற பல்வேறு தொந்தரவுகளை ஏற்படுத்தும். அதனால் உடல் எடையைக் குறைத்தால் குறட்டை நிற்பதோடு மட்டுமல்லாமல் ஒருவரின் ஆரோக்கியமும் மேம்படும்.
(Source: https://cdn.pixabay.com/photo/2015/08/26/20/31/man-909049_960_720.jpg)
ஒருவர் மல்லாந்து படுக்கும் பழகுமையவராக இருந்தால், பக்கவாட்டில் படுப்பது குறட்டையைக் குறைக்கும். பக்கவாட்டில் படுப்பதால் மூச்சு குழாய்கள் விரிவடைவதால் குறட்டை வராது. பழக்கதோஷம் காரணமாக மல்லாந்து படுபவரானால், ஒரு தலையணை வைப்பது அல்லது அவரது பாண்டில் ஒரு பந்து வைப்பது போல யுக்திகளை செய்தால் அவர் மல்லாந்து படுக்கமாட்டார். அல்லது, படுக்கையின் தளைமாட்டை உயர்த்தி வைக்கலாம்.
(Source: https://cdn.pixabay.com/photo/2014/08/26/19/19/drink-428310_960_720.jpg)
முழு வயிறு உனவுடன் ஒருவர் தூங்கும் பொழுது, அது வயிற்றின் மேல் பகுதியை அழுத்தி, சீரான மூச்சுவிடுதலை பாதிக்கின்றது. பால் பொருட்கள் வாயில் மற்றும் தொண்டையில் சளியை வரவழைத்து குறட்டையை இன்னும் மோசமாக்கும்.
அதே போல் மது மற்றும் தூக்க மாத்திரை தொண்டை தசைகளின் ஓய்வெடுக்கும் முறையை மாற்றி குறட்டையிட வைக்கும். தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் மது அருந்துதலை நிறுத்தவும். தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்கும் பழக்கம் உள்ளவருக்கு குறட்டை இருந்தால், மருத்துவரை அணுகவும்.
(Source: https://cdn.pixabay.com/photo/2013/03/03/22/23/pets-89726_960_720.jpg)
சில சமயங்களில், குறட்டை ஒவ்வாமையினால் ஏற்படலாம். இது தான் காரணமா என கண்டுபிடிக்க, தலையணையை மாற்றுங்கள், மின்விசிறியை மற்றும் குளிரூட்டியின் வடிகட்டியை சுத்தம் செய்யுங்கள். போர்வையை மாற்றுங்கள், திரைசீலைகளை துவையுங்கள் மற்றும் செல்ல பிராணிகளை அறையின் வெளியே வையுங்கள். ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை குறைப்பது நல்லது.
(Source: https://cdn.pixabay.com/photo/2016/04/15/22/28/a-glass-of-juice-1332104_960_720.jpg)
நெஞ்சு சளி குறட்டையை ஏற்படுத்தும். சுத்தமான பெப்பெர்மிண்ட் அல்லது யூக்கலிப்டஸ் எண்ணெயை நெஞ்சில் தடவுவதன் மூலம் அல்லது மூலிகை தேநீர் குடிப்பதின் மூலம் மூச்சு குழாய்கள் விரிவடையலாம். சமையலில் வெந்தயம் சேர்ப்பதன் மூலம் செரிமானம் மேம்பட்டு நெஞ்செரித்தலை கட்டுப்படுத்தும்.
இந்த குறிப்புகளால் குறட்டை நிற்கவில்லை எனில், மருத்துவரை அணுகி குறட்டைக்கான காரணத்தை அறிவதோடு வெளிப்புற உதவி அல்லது அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும்.
COMMENTS (0)