குறைவான இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் மற்றும் சமாளிக்கும் வழிமுறைகள்

Spread the love

இரத்த குழாய்களுக்குள் பாய, அதிலிருந்து வெளியேறி உடல் முழுவதும் செல்ல  இரண்டிற்கும் இரத்தத்திற்கு ஒருவகை அழுத்தம் தேவைப்படுகிறது. அந்த வேலையை செய்ய தேவையான அளவு அழுத்தம் இல்லாத நிலையையே நாம் குறைந்த இரத்த அழுத்தம் / ஹைபோ டென்ஷன் என்கிறோம். அடிப்படையில்  ரத்தமானது ரத்தக்குழாய்களில் ஆற்று நீர் போல ஓடுகிறது. இது, இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட  வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும்போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது. இந்த வேகத்திற்குப் பெயர்தான் இரத்த அழுத்தம். இதயத்தை நோக்கி செலுத்தப்படும் இரத்த அளவிற்கும், உடல் முழுவதற்கும் செலுத்தப்படும் இரத்த அளவிற்கும் இடையே உள்ள விகிதத்தைக் கொண்டு தான் இரத்த அழுத்தம் கணக்கிடப்படுகிறது.  இரத்த அழுத்தமானது 90/60 மி.மீ. பாதரச அளவுக்குக் கீழ் குறைந்தால் அதைக் குறை ரத்த அழுத்தம்என்றும் சொல்கிறோம். ஒரு குறிப்பிட அளவுக்கு மேல் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் வரை எந்த அறிகுறியும் தென்படுவதில்லை என்றாலும், தொடர்ந்து குறைந்த இரத்த அழுத்தம் இருந்து வந்தால் அது ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும்.

இரத்த அழுத்தத்தின் நிலையை பொறுத்து ஹைபோ டென்ஷன் பல வகை படுகிறது:

 • ஆர்த்தோ ஸ்டேடிக்ஸ் / இருக்கை நிலை சார்ந்த குறை ரத்த அழுத்தம் என்பது நீங்கள் திடீரென்று எழுந்து நின்றாலோ, படுத்தாலோ உங்கள்  உடலின் நிலை மாறும் பொழுது ஏற்படுவது.
 • போஸ்ட் பிராண்டியல் என்பது ஒருவர் உணவு உண்ட பின் திடீரென்று இரத்த அழுத்தும் குறையும் நிலை.
 • நீண்ட நேரம் நீங்கள் நின்று கொண்டிருந்தால் கீழே விழும் நிலைக்கு இரத்த அழுத்தம் குறைந்து தள்ளப்படுவீர்கள்.
 • எதிர்பாராத அதிர்ச்சிக்கு நீங்கள் உள்ளாகும் சமயம் உங்கள் உடலால் தேவையான இரத்தத்தை செலுத்த முடியாமல் குறைந்த இரத்த அழுத்தம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது.

குறைந்த இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள்

இரத்த அழுத்தமானது  90/60 மி.மீ. பாதரச அளவுக்குக் கீழ் குறைந்தால் இந்த அறிகுறிகள் உண்டாகும்:

 • தலை சுற்றல்
 • மங்கலான பார்வை
 • மன அழுத்தம்
 • குமட்டல் உணர்வு
 • உடல் சோர்வு
 • களைப்பு
 • குறைந்த நாடித் துடிப்பு
 • மூச்சு வாங்குதல்
 • அதிர்ச்சி

அதிர்ச்சியினால் இரத்த அழுத்தம் குறைந்தால் அது மிகவும் ஆபத்தானது.  அவ்வாறு ஏற்பட்டவருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

குறைவான இரத்த அழுத்தத்திற்கான முக்கிய காரணம், போதுமான இரத்தம் உடலுக்குள் செலுத்தப்படாதது அல்லது பலவீனமான இதயம் ஆகும். கர்ப்பம், ஊட்டச்சத்து குறைபாடு, மருந்து ஒவ்வாமை போன்றவைகளும் மற்ற காரணங்கள் ஆகும்.

 

குறைந்த இரத்த அழுத்தத்தை திறம்பட சமாளிப்பது எப்படி

பொதுவாக குறைந்த இரத்த அழுத்தம் உண்டாகும் பொழுது எந்த அறிகுறிகளும் இருக்காது என்றாலும், மேற்கூறிய அறிகுறிகள் ஏதாவது உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் சில வழி முறைகளை பின்பற்றி உங்கள் இரத்த அழுத்தத்தை உயர்த்தலாம். இல்லையென்றால் மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைகளை பெறலாம்.

 • ஒரே இடத்தில் வெகு நேரம் நிற்பதை தவிர்க்கவும். தலை சுற்றினால் சிறிது நேரம் அமரவும்.
 • ஷவரில் சுடு நீரில் வெகு நேரம் நிற்காதீர்கள்.
 • உங்கள் இரத்த அழுத்தம் குறையும் பொழுது நிறைய நீர் அருந்தி போதுமான அளவு இரத்தம் இரத்த குழாய்களுக்குள் பாய வழி வகுக்க வேண்டும்.
 • ஆர்த்தோ ஸ்டேடிக்ஸ் நிலை ஏற்படாமல் இருக்க அவ்வப்பொழுது இடமாற்றம் செய்துக் கொள்ளுங்கள். சம்மணம் போட்டு அமர்வது நல்லது.
 • உங்கள் மன அழுத்தத்தை கட்டப்பாட்டுக்குள் வைத்திருந்தால் அதிர்ச்சியால் ஏற்படும் குறைந்த இரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம்.
 • உங்கள் இரத்த அழுத்தத்தை சமன் நிலையில் வைத்திருக்க உங்கள் உணவில் கூடுதல் உப்பு சேர்க்கவும்.
 • தேவையான மருத்துவ பரிந்துரைப்பு பெற மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

குறைந்த இரத்த அழுத்தம் எப்பொழுதும் ஆபத்தை விளைவிக்க கூடியது இல்லையென்றாலும், அதை பற்றி நன்கு புரிந்து கொண்டு , அதன் அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொண்டு அதை நீங்களே சமாளித்து ஆரோக்ய வாழ்வை வாழ்வது புத்திசாலித்தனம்.

Image Source: pixabay, pexels, wikipedia commons, max pixel

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன