Search

Home / Weight Loss Tips in Tamil / உங்களது கைகளை மெலிதாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த உடற்பயிற்சிகள்

உங்களது கைகளை மெலிதாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த உடற்பயிற்சிகள்

Nithya Lakshmi | செப்டம்பர் 14, 2018

தடித்த கைகள் உங்களது முழு ஆளுமையையும் கெடுத்துவிடும். சில சமயங்களில் உங்களது கைகளால் மெல்லிய பொருத்தமுடைய அல்லது கைகளற்ற ஆடைகள் அணிவதை உங்களால் நினைத்து கூட பார்க்க முடியாது. உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது என்பது அனைவருக்கும் சாத்தியமானதாக இருப்பதில்லை என்பதனால், வீட்டிலேயே சிறிய பயிற்சிகளை மேற்கொள்வது என்பது உங்களது கைகளை மெலிதாக வைத்திருக்கக் உதவும்.

கீழேயிருக்கும் 5 உடற்பயிற்சிகள் உங்களது கைகளை மெலிதாக வைத்திருக்க உதவும்:

 

1.பளு-தூக்குதல்:

இந்த பயிற்சிக்காக, 1-2 கிலோ வரை எடையுள்ள எந்தவொரு வீட்டு பொருட்களும், 2 லிட்டர் குளிர்ந்த  தண்ணீர் பாட்டில் அல்லது டம்பெல்ஸ் போன்ற பொருட்களை கொண்டு மேற்கொள்வது சிறந்ததாகும்.

உடற்பயிற்சிக்கான முறைகள்:

இரண்டு கைகளாலும் எடையை உயர்த்தி தலைக்கு மேல் வைத்திருக்க வேண்டும். உங்களது கைகளை நேராக வைப்பது, இதன் ஆரம்ப  நிலையாகும். அடுத்தப்படியாக எடையை உங்களது இடுப்பை நோக்கி கீழே நகர்த்தவும். எடையை கீழே குறைக்கும் போது கைகளை மெதுவாக நகர்த்தவும். இந்த செயல்முறையை குறைந்தபட்சம் 30 முறை மீண்டும் மீண்டும் செய்யவும். ஒவ்வொரு முறை இந்த செயல்பாட்டை செய்யும் போதும் சில வினாடிகள் இடைவெளி எடுக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் உடற்பயிற்சிக்காக உபயோகப்படுத்தப்படும் எடை மற்றும் காலத்தை அதிகரிக்க வேண்டும்.

கீழுள்ள இணைப்பைக் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்யப்படுவதைப் பார்க்கவும்:

 

2.நாற்காலியை கொண்டு:

இந்த பயிற்சிக்காக, தரைக்கு சற்று மேல இருக்கக்கூடிய படுக்கை விரிப்பு அல்லது நாற்காலியை உபயோகித்து கொள்ள வேண்டும். இந்தப் பொருட்கள் தரைக்கு மேல் குறைந்தபட்சம் 2 அடி உயரமுள்ளதாக இருக்க வேண்டும்.

உடற்பயிற்சிக்கான முறைகள்:

உங்களது முகத்தை முன்னோக்கியும் கைகளை நாற்காலியின் பின்புறமாகவும் வைத்திருக்க வேண்டும். அடுத்தப்படியாக, உங்களது உடலை 3 படி முன்னோக்கி நகர்த்தவும். உங்களது முழங்கால்களை 90-டிகிரி கோணத்தில் மடக்கி உங்களது கீழ் பாகத்தை கொண்டு தரையை தொட முயற்சிக்க வேண்டும். தினசரி 30 முறை இந்த பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்யவும்.  

கீழுள்ள இணைப்பைக் பயண்படுத்தி உடற்பயிற்சி செய்யப்படுவதைப் பார்க்கவும்:

 

3.கத்தரிக்கோல்

இது ஒரு வேடிக்கையான உடற்பயிற்சியாகும். இது ஒரு வகையான எளிதான இதய கோளாறுகளை குணமாக்குவதற்கு உதவும்  உடற்பயிற்சியாகும் மற்றும் இது எடையை மிக வேகமாக குறைக்க உதவும்.

உடற்பயிற்சிக்கான முறைகள்:

உங்களது கைகளை பக்கமாக நீட்டிக்க வேண்டும். கத்திரிக்கோல் வடிவத்தில் எதிர் கைகளின் மீது கைகளை நேராக வைக்க வேண்டும். மீண்டும் கைகளை பக்கவாட்டில் நீட்டித்து ஒரு கத்திரிக்கோல் வடிவத்தை மேற்கொள்ள வேண்டும், ஆனால் இம்முறை தங்களது கைகளை தலைகீழாக வைத்திருக்க வேண்டும்.

கீழுள்ள இணைப்பைக் பயண்படுத்தி உடற்பயிற்சி செய்யப்படுவதைப் பார்க்கவும்:

 

4.ஒரு கை ட்ரைசெப்ஸிற்கான குறிப்புக்கள்:

இந்த உடற்பயிற்சி கைகளின் மேல் பகுதியில் குவிந்துள்ள கொழுப்புகளை குறைக்கிறது. இந்த உடற்பயிற்சியை மேற்கொள்வதற்கு எந்த ஒரு உபகரணங்களும் தேவையில்லை என்பதே இந்த உடற்பயிற்சியின் சிறப்பாகும். இதற்கு உடல் எடை மற்றும் சில இடங்கள் மட்டுமே உங்களுக்குத் தேவை.

உடற்பயிற்சிக்கான முறைகள்:

கைகளை தோள்பட்டைக்கு பின்னால் வைத்து கால்களை விரித்து தரையில் உட்கார வேண்டும். ஒரு கையை நேராக வைத்து உங்களது இடுப்பை மேல்நோக்கி நகர்த்தி பின் உங்கள் கைக்கு நேராக முழங்கையைத் திருப்பிக் கொண்டு, தரையை நோக்கி உங்களது இடுப்பை கொண்டு வரவும். இந்த செயல்முறையானது எதிர் கரத்தின் முழங்காலுடன் மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டும். இந்த பயிற்சி ஒரு கையை பயன்படுவதை தவிர நாற்காலியை பயன்படுத்தும் பயிற்சிக்கு ஒத்ததாகவும் கடினமானதாகவும் உள்ளது.

கீழுள்ள இணைப்பைக் பயண்படுத்தி உடற்பயிற்சி செய்யப்படுவதைப் பார்க்கவும்:

 

5.அரை-சந்திர சுழற்சி:

இந்த உடற்பயிற்சிக்கு சிறிய முயற்சி இருந்தால் போதுமானது, ஆனால் செயல் முறை மற்றும் உங்களது  நிலை சரியானதாக இருக்க வேண்டும்.

உடற்பயிற்சிக்கான முறைகள்:

180-டிகிரி கோணத்திற்கு பக்கவாட்டை நோக்கி உங்களது கைகளை நீட்டிக்க வேண்டும். பின்னர் உங்களது இரண்டு உள்ளங்கைகளையும் மேல்பக்கவாட்டிற்கும், அதன் பின் தரையை நோக்கியும் சுழற்றவும். இந்த பயிற்சியை குறைந்தபட்சம் 30 முறை செய்ய வேண்டும். இந்த உடற்பயிற்சி தோள்பட்டை மற்றும் கைகளின் மேல் பகுதியில் குவிந்துள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.

கீழுள்ள இணைப்பைக் பயண்படுத்தி உடற்பயிற்சி செய்யப்படுவதைப் பார்க்கவும்:

குறிப்பு – இந்த பயிற்சிகளை 10 நாட்களுக்கு மட்டும் மேற்கொள்வது என்பது உங்களது கைகளை மெலிதானதாவோ அல்லது ஒழுங்கமைக்க செய்ய போதுமானதாக இருக்காது. ஆனால் நீங்கள் இரண்டு மாதங்கள் தொடர்ந்து இந்த உடற்பயிற்சியை மேற்கொண்டால், வேறுபாட்டை எளிதில் காணலாம்.

 

பட மூலம் – பர்சனல் ட்ரைனர் மால்டா, பாபில் பீட், திபிட்இந்தியன்.காம்

Nithya Lakshmi

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன