இந்த 7 உணவுகளுடன் உங்கள் செரிமானத்தை மேம்படுத்தவும்!

Spread the love

நம் ஆரோக்யமான உடலுக்கு, செரிமான அமைப்பின் முறையான செயல்பாடு மிகவும் இன்றியமையாதது ஆகும். இந்த செரிமான அமைப்பின் படிதான் நாம் உண்ணும் உணவானதை, உடல் எடுத்துக் கொண்டு, உடைத்து துகள்களாக்கி, பின் உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. ஒருவரின் ஒட்டு மொத்த உடல் ஆரோக்யத்திற்கும் செரிமான அமைப்பு மிக முக்கியமானது ஆகும். இருந்தாலும், சில உணவுகள் சரியாக செரிமானம் ஆகாமல் இருக்கும் பொழுது நமக்கு சங்கடமாகவும், வயிறு நிறைந்தே இருப்பது போன்ற உணர்வும் தோன்றுகிறது.

செரிமானத்தை மேம்படுத்தும் சில உணவுகள் உள்ளன. அதனால், அடுத்த முறை நீங்கள் இதேபோல் சங்கடமாக உணரும் பொழுது கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு உணவை உண்டு செரிமானத்தை துரிதப் படுத்தவும்.

 

1.யோகர்ட் / தயிர்

பாலை லாக்டிக் அமில பாக்டீரியா மூலம் புளிக்க வைத்து தயிர் செய்யப் படுகிறது. அதில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியா / ப்ரோபயாடிக்ஸ் செரிமானத்தை மேம்படுத்தி குடலை ஆரோக்யமாக்குகிறது. இந்த பாக்டீரியாவானது இயற்கையாகவே குடலில் உள்ளது என்றாலும், தயிர் உண்பதால் செரிமானம் எளிதாகிறது.

தயிரில் உள்ள ப்ரோபயாடிக்ஸ், செரிமானம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளான வயிறு உப்பிசம், மலம் இறுகல், வயிற்றுப்போக்கு போன்றவைகள் குணமாக உதவுகிறது. மேலும் பாலில் உள்ள சர்க்கரையான லாக்டோஸ் செரிமானத்திற்கும் உதவுகிறது. ஆனால் கடைகளில் கிடைக்கும் எல்லா விதமான யோகர்ட்களிலும் இந்த நல்ல பாக்டீரியா இருப்பதில்லை. நீங்கள் கடைகளில் யோடர்ட் வாங்கும் பொழுது, சரியான யோகர்ட் தான் தேர்வு செய்திருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய அதன் டப்பா மேல் ‘live and active cultures’ என்ற வாசகம் இருக்கிறதா என்பதை பார்த்து உறுதி செய்து வாங்கவும்.

 

2.ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C நிறைந்து உள்ளது. இந்த சிவப்பு நிற பழங்களில் நல்ல ஊட்டச் சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம், ஃபோலேட், பாஸ்பரஸ் போன்ற தாதுப் பொருட்கள் உள்ளன. மேலும் ஆப்பிளில் கரையக் கூடிய நார்ச் சத்துக்களான பெக்டின் இருக்கிறது. ஆப்பிள் சாப்பிடுவதால் மலம் அதிக அளவில் வெளியேறுகிறது. அதனால் மலச்சிக்கல் பிரச்னைக்கும், வயிற்றுப்போக்கிற்கும் ஆப்பிள் பரிந்துரைக்கப் படுகிறது. வயிற்றில் ஏற்படும் தொற்று மற்றும் குடல் வீக்கம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை ஆப்பிள் குறைக்கிறது.

 

3.பப்பாளி பழம்

பப்பாளி வெப்பமண்டலத்தை சார்ந்த ஒரு பழம் ஆகும். அதில் செரிமான நொதியான பபைன் இருக்கிறது. பப்பாளி சாப்பிடுவது, வயிற்றில் உள்ள புரதங்களை நொறுக்கி துகள்களாக்க உதவுகிறது. அதனால் செரிமானம் மேம்பட்டு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிரகிக்கப் படுகின்றன. பப்பாளியில் உள்ள எதிர்ப்பு அழற்சி தன்மையானது வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுகிறது. மேலும் உணவு ஒவ்வாமை , நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளையும் தீர்க்கிறது பப்பாளி.

 

4.இஞ்சி

இந்திய சமையலில் உபயோகப்படும் பிரதான பொருள் இஞ்சி ஆகும். சூடான நறுமணப் பொருளான இஞ்சி, நம் உடலுக்கு குளிர்காலங்களில் மிகச் சிறந்தது ஆகும். மேலும் செரிமானத்திற்கு மிகச் சிறந்தது இஞ்சி. கர்ப்பிணி பெண்களின் பிரச்னையான வயிற்றுக் பிரட்டல், மலம் கழிப்பதில் பிரச்னை, குமட்டல், வாயு தொந்தரவு, பசியின்மை போன்றவற்றிற்கு இஞ்சி ஒரு சிறந்த மருந்தாகும். ஆனால் இஞ்சியை மிதம்மான அளவில் தான் உண்ண வேண்டும். ஏனெனில், அதிகமான இஞ்சியை உண்டால் நெஞ்சு எரிச்சல் உண்டாகும். 2 – 3 கிராம் இஞ்சிதான் ஒருநாளில் எடுத்துக் கொள்ளப் படவேண்டும்.

 

5.முழு தானியங்கள்

புல் போன்ற தாவரங்களின் விதையே தானியங்கள் எனப்படுகிறது. முழுதானியம் என்ற வகையில் சேர 1௦௦% முழுமையான பருப்புடன் சேர்ந்து தவிடு, வித்தகவிழையம் (எண்டோஸ்பர்ம்), ஜெர்ம் (germ) ஆகியவை இருக்க வேண்டும். பொதுவான முழு தானியங்கள் ஓட்ஸ், சீமைத்தினை. முழு கோதுமையிலிருந்த செய்யப்படும் பொருள்கள், பிரவுன் அரிசி, போன்றவை ஆகும். முழு தானியங்களில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தவும், செரிமான பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது. மேலும் மலத்தின் அளவை இது அதிகரித்து செரிமானத்தை அதிகரிக்கிறது.  அதனால் மலச்சிக்கல் தவிர்க்கப் படுகிறது. இதில் உள்ள சில நார்கள் ப்ரோபயாடிக் போல் செயல்பட்டு குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவுக்கு உணவாகின்றன.

 

6.சோம்பு / பெருஞ்சீரகம்

சோம்பு முக்கியமாக உணவிற்கு நறுமணசுவை தருவதற்காக சேர்க்கப் படுகிறது. அதில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை தவிர்க்கிறது. மேலும் இது வலி நிவாரணியாக செயல்பட்டு, செரிமான பாதையில் உள்ள தசைகளை தளர்த்துகிறது. அதனால் வாயு தொந்தரவு, வயிற்று பிடிப்பு போன்றவை குறைகிறது.

 

7.சியா விதைகள் (Sia Seeds)

சியா விதைகளில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. அவ்விதைகள் ப்ரீபயோடிக் போல் செயல்பட்டு குடலில் இயற்கையாக இருக்கும் நல்ல பாக்டீரியா வளர உதவுகிறது. அதன் மூலம் செரிமான அமைப்பு ஆரோக்யமடைகிறது. மேலும் சியா விதைகள் மலம் கழித்தலை முறையாக்கி ஆரோக்ய குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.

மேற்கூறிய உணவுகளின் மூலம் செரிமான பிரச்னைகளிலிருந்து விடுதலை பெறலாம். இவை செரிமானத்தை மட்டும் மேம்படுத்தாமல், உங்கள் உடலின் முழு செரிமான அமைப்பையும் ஆரோக்யமாக்குகிறது.

 

Sources: Enzymedica, Everyday Health, Food Revolution Network, Healthline, Onlymyhealth,  Organic Facts, The Knclan.com, Times of India.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன