வைர நெக்லஸ்களின் சமீபித்திய டிசைன்கள்

Spread the love

ஒவ்வொரு பெண்ணிற்கும் தன கழுத்தில்,  ஜொலிக்கும் வைர நெக்லஸ் அணிந்து அழகு பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் கண்டிப்பாக இருக்கும். மற்ற நகைகளைப் போல வைர நெக்லசை நீங்கள் அடிக்கடி வாங்கப் போவதில்லை. அதனால் வைர நெக்லஸ் வாங்கும் பொழுது அழகான, நேர்த்தியான, எப்பொழுதும் மதிக்கப்படும் டிசைனை தேர்வு செய்து வாங்குவது மிக அவசியம். இதோ பெட்டர் பட்டர் உங்களுக்காக 2018 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய வைர நெக்லஸ் வடிவமைப்புகளை அளிக்கிறது:

 

1.டைமன்ட் வடிவ வைர நெக்லஸ்

இந்த டைமன்ட் வடிவ வைர நெக்லஸ் தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில் இந்த நெக்லசுடன் அதே வடிவ பிரேசிலட் மற்றும் காதணிகள் பொருத்தமாக உங்களுக்கு கிடைக்கிறது. இந்த நெக்லஸ் இந்திய-மேற்கத்திய உடைகளுக்கு வெகுவாக பொருந்துகிறது.

 

2.முடிச்சு வடிவ வைர நெக்லஸ்

ராஜ தோற்றம் அளிக்கும் இந்த நெக்லஸ் வரிசையாக வைரங்களின் அணிவகுப்பால் செய்யப்பட்டது. நெருக்கமான அமைப்பால் மிகவும் ஜொலிப்புடன் காட்சியளிக்கிறது. அதன் கீழே பளிச்சென தொங்கும் இரு நீல நிற கற்கள்,  இந்த நெக்லசின் அழகை எடுத்துக் காட்டுகிறது.

 

3.சோக்கர் / கழுத்தை ஒட்டி போடப்படும் நெக்லஸ்

கழுத்தை ஒட்டி போடப்படும் சோக்கர் எனப்படும் இந்த நெக்லசின் அழகை வேறு எந்த நெக்லசின் அழகோடும் ஒப்பிட முடியாது. உங்களை மகாராணி போல தோன்ற வைக்கும் இந்த நெக்லஸ். உங்களுக்கு மிக அதிக செலவை தரப்போகும் இந்த நெக்லஸ் உங்கள் கழுத்தை பளபள என ஜொலிக்க வைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

 

4.மாறுபட்ட வடிவ வைர நெக்லஸ்

மாறுபட்ட வடிவ வைர கற்கள் பதிக்கப் பட்ட இந்த வைர நெக்லஸ் இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் ஒரு அற்புத நெக்லஸ். அனைத்து ரக இந்திய உடைகளுக்கும் பொருந்தும் நெக்லஸ். இந்த வைர நெக்லசின் ஜொலிப்புடன் உங்கள் முகமும் போட்டி போட, இதை அணியும் பொழுது நீங்கள் அதற்கேற்ற முக ஒப்பனை செய்து கொள்ள வேண்டும்.

 

5.முத்துக்கள் தொங்கும் திறந்த நெக்லஸ்

ஒன்று சேராமல் இருக்கும் இந்த வைர நெக்லஸ் உங்களுக்கு கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கும். சிறு வைர கற்கள், மற்றும் கீழே தொங்கும் இரு முத்துக்களால் செய்யப்பட்ட இந்த அழகான வைர நெக்லஸ், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

6.மாணிக்க வைர நெக்லஸ்

மிகச்சிறிய வைர கற்களால் சூழப்பட்ட மாணிக்க கற்களால் செய்யப்பட்ட  இந்த தனித்துவம் வாய்ந்த நெக்லஸ் உங்கள் மனதை கவர்ந்த, அன்புக்குரியவருக்கு உங்கள் காதலை தெரிவிக்க மிகச்சிறந்த ஒரு வழியாகும்.

 

7.டென்னிஸ் வைர நெக்லஸ்

கழுத்தை ஒட்டி அணியப் படும் இந்த டென்னிஸ் வைர நெக்லஸ் எளிமைக்கும், தரத்திற்கும் அடையாளமாக விளங்குகிறது. இந்த நெக்லஸ் அனைத்து வகை உடை மற்றும் எல்லா நிற உடைகளுக்கும் பொருந்தும்.

 

Image Source: raj diamonds, pinterest, celini

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன