Home / Women Health Tips in Tamil / ஹெபடைடிஸ் பி க்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:
கடந்த வாரத்தில் எனது நண்பர்களுடன் ஒரு இலவச சுகாதார விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகளை பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. விவாததிற்கான தலைப்பு – நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மழைக்காலத்தில் ஹெபடைடிஸ் பி போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதிலுருந்து எப்படி பாதுகாக்க கொள்ள வேண்டும்? அங்கு வந்திருந்த கல்லீரல் வல்லுநர்கள் ஹெபடைடிஸ் என்கிற தொற்று நோய் கல்லீரலை பாதிப்பதோடு அல்லாமல், அனைத்து வகையான ஹெபடைடிஸ் நோயும் கல்லீரலில் சில நோயை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது என்று விளக்கினர்.
ஹெபடைடிஸ் பி ஒரு ஆபத்தான வைரஸ் மூலம் பரவி நோயை ஏற்படுத்தி மற்றும் கல்லீரலில் வீக்கத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக தான் ஒரு நபர் ஹெபடைடிஸினால் பாதிக்கப்படுகிறார். இந்த வைரஸ் உடலில் இருந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் தொடர்ந்து உடலை வைரஸிடமிருந்து பாதுகாக்க வேண்டும். எப்போதுமே இந்த வைரஸ் தீங்கு விளைவிப்பதாக இல்லை என்றாலும், சில நேரங்களில் கல்லீரலை பாதித்து அது உயிருக்கு அச்சுறுத்தக்கூடியதாக மாறுகிறது. இந்த வைரஸ் 2 வகையானது – செயலிலுள்ள மற்றும் செயலற்றதாக இருக்கலாம். செயலற்ற நிலைமையில் உள்ளவர்கள் தொடர்ந்து இரத்த பரிசோதனைகள் செய்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், ஆனால் செயலில் உள்ள நிலைமை உள்ளவர்கள் மிகவும் ஆபத்தானது மற்றும் நோய்த்தொற்றை அகற்றுவதற்கு மருந்துகளை எடுக்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவர்களின் கூற்றின்படி அதிகப்படியான நேரங்களில் ஹெபடைடிஸ் பி யினால் ஒரு நபர் பாதிக்கப் பட்டதற்கான எந்த அறிகுறிகள் வெளிப்படையாக தெரிவது இல்லை. இந்த நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படாது மற்றும் பல நேரங்களில், நோயாளிக்கு நீண்ட காலமாக நோய்த்தொற்று பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. இந்த வைரஸ் உடலில் தொடர்ந்து தங்கி இருந்து கல்லீரலை வலுவிழக்க வைக்கிறது. இதன் விளைவாக கல்லீரல் புற்றுநோய் அல்லது கல்லீரல் ஈரல் அழற்சி ஏற்படலாம். ஹெபடைடிஸ் B இன் ஆரம்ப அறிகுறிகளில் சில அடையாளம் காணப்படாதவை:
அடுத்த படமானது, இரத்த சோதனை எந்த வகையான ஹெபடைடிஸ் பி ஒரு நபரை பாதிக்கின்றது என்பதைக் விளக்குகிறது – கடுமையான அல்லது நாட்பட்டது. ஒரு கடுமையான ஹெபடைடிஸ் பியில் பாதிக்கப்பட்டவர், தொற்றுநோயக்கான மருந்துகள் எடுத்து கொள்வதன் மூலம் 6 மாதங்களுக்குள் குறைய தொடங்குகிறது. நாள்பட்ட கல்லீரல் அழற்சி நோய்க்குரியவர், 6 மாதங்களுக்குப் பிறகும் கூட வைரஸ் உங்கள் இரத்த மாதிரிகளில் காணப்படுகிறது மற்றும் நோயாளியின் வாழ்நாளில் இந்த நிலைமை நிலைத்து நிற்கிறது. இதற்கு தொடர்ந்து மருந்துவ ஆலோசனையை பின்பற்றவும்.
எங்களுக்கு அவர்கள் ஒரு சில துண்டு பிரசுரங்களை கொடுத்து, இவற்றில் இருந்து கூடுதல் தகவலை பெற எங்களுக்கு கோரிக்கை விடுத்தார்கள். அதிலிருந்து நாங்கள் ஹெபடைடிஸ் B என்பது எச்.ஐ.விக்கு ஒத்ததாக இருப்பதை அறிந்து கொண்டோம். அதற்கான காரணங்கள் பின்வருமாறு:
Table of Contents
ஹெபடைடிஸ் பி முக்கியமாக அதே நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் இரத்தத்தோடு தொடர்பு கொள்வதினால் ஏற்படுகிறது. இந்த நோயின் தாக்கம் ஒருவரது உமிழ்நீர், ஊசி மருந்துகள், ரேஸர் பிளேடுகள், பல் தூரிகைகளில் தென்படுகின்ற இவைகளும் தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். பச்சை குற்ற பயன்படுத்தப்படும் அக்குபுங்ச்சர் குத்தூசி கூட தொற்றுநோயை ஏற்படுத்தும். நோயாளிக்கு இரத்தம் தேவைப்பட்டாலும், இரத்தம் ஒரு தொற்றுநோயாளியிடமிருந்து பெறக்கூடாது என்பதில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும்.
ஹெபடைடிஸ் பிற்கான மிகப்பெரிய காரணம், ஹெபடைடிஸ் பி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபருடன் பாதுகாப்பற்ற பாலினம் இருப்பதனால் வருகிறது, ஹெபடைடிஸ் பிக்கான காரணத்திற்காக மிகப்பெரிய காரணம் இதுவாகும். மேலும் ஹெபடைடிஸ் பி நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு ஊசி போடும் போது, மருந்துகளை உட்கொள்பவர்களுக்கும் இது தொற்றை ஏற்படுத்தும்.
ஒரு பெண் ஹெபடைடிஸ் பி நோயால் கர்ப்பகாலத்தின் போது பாதிக்கப்பட்டிருந்தால், கருவுற்றிருக்கும் அல்லது பிறக்கும் குழந்தை நோயினால் பாதிக்கப்பட வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும்.
சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு நீரிழிவு நோய்க்கான பகுப்பாய்வைப் தொடர்ந்து செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், இதனால் ஹெபடைடிஸ் சிக்கலுக்கான அபாயம் இருப்பதனாலும், ஹெலட்டீசிஸ் பி வைரஸ் பாதிப்புக்குள்ளாக்கப்படுவதனாலும் இது தேவைப்படுகிறது.
ஒரு ஆரோக்கியமான நபர் ஹெபடைடிஸ் பிக்கு எதிராக இரத்த பரிசோதனை மூலம் பரிசோதிக்கப்பட வேண்டும். இந்த பரி சோதனையில் அவர்கள் எதிர்மறை விளைவை பெற்றாலும் கூட, அவர் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியின் முழு அளவையும் பெற்று கொள்வது தான் இந்த நோயை தடுப்பதற்கு சிறந்த வழியாகும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
பட மூலம்: மாக்ஸ்பிஸேல்.காம், விக்கிமீடியா, விக்கிபீடியா, பிலிக்கர், ரக்ஸ்டி.தாபா,ஆர்மி.மில், 5த் ஏர்போர்ஸ்
COMMENTS (0)