Search

Home / Women Health Tips in Tamil / இந்த இயற்கையான வலி நிவாரணிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்த இயற்கையான வலி நிவாரணிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Subhashni Venkatesh | டிசம்பர் 27, 2018

இயற்கை தன் ஆற்றலாலேயே தான் இயங்க வல்லது. தன்னையும், மனித இனத்தையும் இயக்கக் கூடிய சக்தி கொண்டது இயற்கை. இயற்கையின் பரிசான செடிகள், மரங்கள், மூலிகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மனித இனத்திற்கு பெரும் நன்மைகளை அளிக்க கூடியது. இன்று நாங்கள் உங்களுக்கு 10 இயற்கையான வலி நிவாரணிகள் பற்றி கூறுகிறோம்:

 

1.மூட்டு வலி

செர்ரிகளில் அந்தொசியனின் உள்ளது. அவைதான் செர்ரிகளுக்கு சிவப்பு நிறத்தை அளிக்கின்றன. செர்ரி பழங்களில் உள்ள அந்தொசியனின் தன்னுள் ஆன்டிஆக்சிடன்ட்களை கொண்டுள்ளது. இவை வீக்கத்தை எதிர்த்து போராடும் தன்மை உடையது. இதனால் செர்ரி பழங்கள் மூட்டு வலி மற்றும் கீல்வாதம் போன்றவைகளுக்கு நிவாரணம அளிக்கின்றன.

 

2.நெஞ்சு எரிச்சல்

ஆப்பிள் சைடர் வினிகர் சிறிது அருந்தினால் நெஞ்சு எரிச்சல், இரைப்பையில் ஏற்படும் அமில பின்னோட்டத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆப்பிள் சைடர் வினிகர் அரைப்பையில் இருக்கும் அமிலத்தை நடுநிலைப் படுத்த உதவி, pH நிலையை சமன் படுத்துகிறது.

ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள அசிடிக் அமிலம் செரிமான பாதையில் அதிக அமிலத்தை சேர்க்கிறது. மேலும் இந்த அமிலம் பல வகையான பாக்டீரியாக்களுக்கு எதிராக நுண்ணுயிர் கொல்லியாக செயல்படுகிறது. ஆனால் சிறிதளவு ஆப்பிள் சைடர் வினிகர் எடுத்துக்கொள்வது மட்டுமே பாதுகாப்பானது. அதை சிறிதளவு நீரில் கலந்து அருந்த வேண்டும். அதன் சுவை சற்று வீரியமாகவும், புளிப்பாகவும் இருப்பதால் தேன் கலந்து அருந்தலாம்.

 

3.சிறுநீர் குழாய் தொற்றுகள்

சிறுநீரக குழாய்களில் தங்கி வளரும் பாக்டீரியாக்களால் உண்டாகும் தொற்று இந்த சிறுநீர் குழாய் தொற்று ஆகும். நீல பெர்ரி பழங்களை உண்பது இந்த தொற்று நோய்க்கு மிகச் சிறந்த மருந்து ஆகும். நீல பெர்ரி பழங்களில் உள்ள சில பொருள்கள் சிறுநீர்ப்பை திசுக்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்ளாமல் தடுக்கின்றன. மேலும் அதில் அதிகமாக உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் சிறுநீர்ப்பை தொற்றுகள் பாதிப்பை குறைக்க உதவுகின்றன.

 

4.காது வலி

பூண்டில் உள்ள வலி நிவாரண மற்றும் ஆன்டிபயாடிக் தன்மை, பூண்டை ஒரு மிகச் சிறந்த வீட்டு வலி நிவாரணியாக செயல்பட வைக்கிறது. இரண்டு பல் பூண்டை நசுக்கி, 2 தேக்கரண்டி கடுகு எண்ணெயுடன் கலக்கவும். இந்த கலவையை மிதமாக சூடு படுத்தவும். அதாவது பூண்டின் நிறம் கருப்பாக மாறும் வரை. அது ஆறியவுடன் சில துளிகளை வலியுள்ள காதில் ஊற்றவும். இது காது வலிக்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.

 

5.பல் வலி

கிராம்பில் யூஜினால் என்ற வேதி பொருள் இருக்கிறது. அது உணர்வை இழக்க வைத்து, பாக்டீரியா எதிர் கொல்லியாக செயல் படுகிறது. மேலும் கிராம்பில் எதி்ர்பூஞ்சை, எதிர்பாக்டீரியா சக்திகள் உள்ளன. பல் வலியிலிருந்து நிவாரணம் பெற சில நிமிடங்கள் ஒரு முழு கிராம்பை வலி உள்ள பல்லின் மேல் வைக்கவும். கிராம்பை கிராம்பு எண்ணெயாகவும் தயாரிக்கலாம். எண்ணெயில் முழு கிராம்புகளை போட்டு சிறிது நேரம் வைத்திருக்கவும். பின் அதை வடிகட்டினால் கிராம்பு எண்ணெய் தயார். பருத்தி பஞ்சை கிராம்பு எண்ணெயில் முக்கி வலி உள்ள இடத்தில் வைக்கலாம்.

 

6.நாள்பட்ட வலி

இந்திய சமையலில் பொதுவாக சேர்க்கப்படும் ஒரு நறுமண பொருள் மஞ்சள் ஆகும். மஞ்சளில் குர்குமின் என்னும் ஒரு சிறந்த கலவை வலி நிவாரண மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் தன்மை உடையது. இது காயங்களை ஆற்றும் தன்மை உடையது. முடக்கு வாதம் போன்ற நோய்களால் உண்டாகும் நாள் பட்ட வலிகளை மஞ்சள் குணமாக்குகிறது.

 

7.வீக்கம்

அன்னாசி பழம் வீக்கத்திற்கு மிகச் சிறந்த உணவாகும். அதில் உள்ள ப்ரோமிலைன் என்னும் என்சைம் புரதங்களின் செரிமானத்திற்கு உதவி செய்து, செரிமான பாதையையும் மேம்படுத்துகிறது. அன்னாசி பழத்தின் உட்பாகத்தில் தான் இந்த என்சைம் நிறைய இருக்கிறது. அதன் முழுமையான பலன்களை பெற எப்பொழுதும் நன்கு பழுத்த அன்னாசி பழத்தை வாங்கினால், அதன் உட்பாகம் மிருதுவாக இருக்கும். அதன் நாடு தண்டு பாகத்தை சிறு துண்டுகளாக்கி, ஸ்மூதி அல்லது சாறாக அருந்தலாம்.

8.சைனஸ் வலி

குதிரை முள்ளங்கி எனப்படும் இந்த காய் சைனஸ் தொல்லையால் ஏற்படும் வலியை குணப்படுத்துகிறது. இதில் உள்ள சல்பர், ஆன்டிபயாடிக் தன்மை நிறைந்தது. சல்பரின் இந்த குணம் சைனஸ் தொற்று மற்றும் அதனால் உண்டாகும் வலிக்கு சிகிச்சையாக அமைகிறது.

 

9.அடிபட்ட வலி

ஏதாவது காயத்தினால் நீங்கள் அவதிபட்டால், அதற்கான சிறந்த சிகிச்சை நீர் அருந்துதல் அல்லது காயம் அடைந்த இடத்தை வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவுதல் ஆகும். வெந்நீர் அந்த காயத்திற்கு சிறிது ஆறுதல் அளித்து, வலியிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கும்.

 

10.தசைகளில் வலி

சமயங்களில் நீங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றாலோ அல்லது அதிகப்படியான உடலுழைப்பு செய்த காரணத்தினாலோ அதற்கு அடுத்த நாள் தசைகளில் வலி உணர்வீர்கள். பொதுவாக உங்கள் கை கால் தசைகளில்தான் இது அதிகமாக இருக்கும்.

இதற்கு சிறந்த சிகிச்சை, வலி உள்ள இடங்களில் பெப்பர் மின்ட் எண்ணெயை நன்கு மசாஜ் செய்யவும். பெப்பர் மின்ட் வழியை நீக்கி, வீக்கத்தையும் குறைக்கிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதனால் வேகமாக குணப்படுத்துகிறது. மேலும் பெப்பர் மின்ட் அதில் உள்ள வலிநிவாரண தன்மையால், தசை பிடிப்பால் உண்டாகும் வலியை சரி செய்கிறது.

அடுத்த முறை, மேற்கூறிய ஏதாவது ஒரு வலி உங்களுக்கு ஏற்பட்டால், வலிநிவாரண மாத்திரைகளை அல்லது ஸ்ப்ரே உபயோகிக்காமல், இந்த இயற்கை முறையை பின்பற்றி உடனடி நிவாரணம் பெறுங்கள்:

 

Subhashni Venkatesh

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன