Home / Uncategorized / தேன் உபயோகிப்பதால் கிடைக்கும் பயன்கள் பற்றி நீங்கள் அறிவீர்களா?
மென்மையான, தங்க நிற, மிதமான இனிப்புடைய தேன் காலாவதியாகாத மிக சில உணவுப் பொருள்களில் ஒன்றாகும். தேன், நம் உடல் மற்றும் சருமத்திற்கு நன்மை அளிக்க கூடியது. இந்த அதிசய சாறு இருமல், ஜலதோஷம் போன்ற பொதுவான வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்க வல்லது.
மேலும் வேறு பல உபயோகங்களும் தேன் நமக்கு அளிக்கிறது.
Table of Contents
பருவநிலை மாறும் பொழுது, நமக்கு ஜலதோஷம் பிடிப்பது சகஜம். இதற்கு சிகிச்சையாக மருந்து உண்பதற்கு பதில் 1 மேசைக்கரண்டி தேனுடன், 1 மேஜைக்கரண்டி எலுமிச்சைபழ சாறு கலந்து இத்துடன் ஒரு கிண்ணம் வெந்நீர் சேர்த்து கலக்கி அருந்தினால், நல்ல பலன் கிடைக்கும்.
மூக்கு, காது மற்றும் தொண்டை இந்த மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையது. உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்கும் பொழுது, காதுகள் அடைத்துக் கொண்டு, தொண்டையில் புண் ஏற்படுவதுண்டு. அதைப்பற்றி கவலை இனி வேண்டாம்! உங்களுக்கு உதவ தேன் இருக்கிறது. 8 தேக்கரண்டி தேனை 4 தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் கலந்து, சிறிது வெந்நீர் சேர்த்து அருந்தவும்.
எடை கூடிக்கொண்டே போகிறதே என்று கவலை படுகிறீர்களா? உங்களுக்கு உதவ தேன் இருக்கிறது. சுடு தண்ணீரில் 1 தேக்கரண்டி தேன் மற்றும் ½ தேக்கரண்டி லவங்கப்பட்டை பொடி சேர்க்கவும். இந்த தேநீரை உங்கள் சாப்பாட்டிற்கு பின் அருந்தவும். வருடம் முழுவதும் உங்கள் எடையை பராமரிக்க இது மிகவும் உதவும்.
பல் வலி நம் உடலில் எதிர் பாராமல் வரக்கூடிய ஒரு வலியாகும். எப்பொழுது எந்த நிமிடம் இந்த வலி வந்து தொல்லை தரும் என்று சொல்ல முடியாது. நன்றாக இருப்பது போல் தோன்றும். ஆனால் திடீரென்று தாங்க முடியாத பல்வலி வரும். அதை சமாளிக்க 1 தேக்கரண்டி லவங்கப்பட்டை பொடியை 1 மேஜைக்கரண்டி தேன் மற்றும் வெந்நீரில் கலந்து அருந்தி நிவாரணம் பெறவும்.
சாதாரண தலைவலி சிறிது நேரத்தில் சரியாகிவிடும். ஆனால் சைனஸ் தொல்லையால் வரும் தலை வலி நம்மை மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகும். அச்சமயங்களில் உங்களால் வீடு மற்றும் அலுவலகத்தில் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் போகும். தலை வலி இருக்கும் பொழுது தேநீர் அல்லது காப்பி அருந்தவதற்கு பதிலாக,தேன் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்த தேநீர் அருந்தவும். வெந்நீரில் 2 மேஜைக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர், 1 மேஜைக்கரண்டி தேன் கலந்து அருந்தவும். இதை சைனஸ் தொல்லையால உண்டாகும் வலிக்கு அருந்தி பயன் பெறலாம்.
அடிக்கடி நம் உடலில் உள்ள நச்சு பொருள்களை வெளியேற்ற வேண்டியது அவசியமாகிறது. அவ்வாறு செய்யும் பொழுது நம் உடலில் உள்ள ஆரோக்யமற்ற, கேடு விளைவிக்ககூடிய நச்சுகள் வெளியேறி உடலை முறையாக இயங்க வைக்கிறது. அதற்கு ஒரு கப் மூலிகை தேநீரில் 1-2 தேக்கரண்டி தேன் கலந்து அருந்தவும்.
தேனின் எண்ணற்ற பயன்களால், அதை எப்பொழுதும் உங்கள் சமையலறை அலமாரிகளில் வைத்திருக்கவும்.
COMMENTS (0)