Search

HOME / எப்பொழுதும் பின்பற்றக்கூடாத எடைக்குறைப்பு முறைகள்

எப்பொழுதும் பின்பற்றக்கூடாத எடைக்குறைப்பு முறைகள்

Subhashni Venkatesh | அக்டோபர் 29, 2018

எப்பொழுதும் பின்பற்றக்கூடாத எடைக்குறைப்பு முறைகள்

எடை குறைக்க வேண்டும் என்ற தாகத்தில் பெண்கள் பலதரப்பட்ட உத்திகளான, டயட்டில் இருத்தல், எண்ணெய் குடித்தல், மூக்கில் கிளிப் போடுதல், சமைக்கும் பொழுது இயற்கை இனிப்புகளை சேர்த்துக் கொள்ளுதல், உடல் இளைப்பதற்கான மாத்திரைகளை உண்ணுதல், மிக அதிகமாக உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றில் ஈடுபடுவர். சிலர் இதில் மிக உறுதியாக இருந்தாலும், ஆராய்ச்சிகள் இவை எடை குறைப்பிற்கான சரியான முறைகள் இல்லை என்கிறது, எடையை குறைப்பது கடினம்தான் என்றாலும் அது முடியாதது இல்லை. இருந்தாலும் இங்கே கூறப்பட்டுள்ளவைகளை எடையை குறைக்க பின்பற்றவேண்டாம். ஏனெனில் அவற்றால் உண்டாகும் நன்மையை விட தீமைதான் அதிகம்.

 

1.உணவை தவிர்த்தல்

சாப்பிடாமல் இருத்தல், எடையை குறைப்பதற்கான சரியான வழி அல்ல. நீங்கள் ஒரேடியாக சாப்பிடுவதை நிறுத்தினால், வேகமாக எடை குறையலாம். ஆனால், மறுபடியும் நீங்கள் உண்ணத் தொடங்கும் பொழுது துரிதமாக உங்கள் எடை அதிகரிக்கத் தொடங்கும். இதற்கு காரணம் என்னெவென்றால், நீங்கள் சாப்பிடுவதை நிறுத்தும் பொழுது உங்கள் உடல் பட்டினி நிலைக்கு செல்கிறது. பின் மீண்டும் உணவு உண்ணும் பொழுது உங்கள் உடலானது மீண்டும் எதிர்காலத்தில் பட்டினியை எதிர்பார்த்து கொழுப்பை உடலில் சேர்த்து வைக்கத் தொடங்கும். நீங்கள் மறுபடியும் சாப்பிடுவதை நிறுத்தினால் அதன் பாதிப்பு உங்கள் முடி, மற்றும் முகத்தில் பிரதிபலிக்கும். முகம் மற்றும் கேசம் அதன் பொலிவை இழக்கத் தொடங்கும்.

இதற்கு மாறாக நீங்கள் கடைபிடிக்கவேண்டியது , குறைந்தது 5 – 6 வேளை சிறு சிறு அளவில் உணவை உண்டு உங்கள் உடலின் மெடபாலிசத்தை உயர்த்தி வைப்பதன் மூலம், நீங்கள் உண்ணும் உணவை சரிவர செரிமானம் செய்ய உதவும்.

 

2. டயட் மாத்திரைகளை நாடுதல்

இப்பொழுதெல்லாம் சந்தையில் ஏகப்பட்ட உடனடி டயட் முறை பொருள்கள் கிடைக்கின்றன. அதில் மிக பிரபலமானது, உடல் இளைப்பதற்கான மாத்திரைகள். நீங்கள் நிரந்தரமாக உடல் இளைக்க விரும்புபவர் என்றால் இதற்கான வழி அது இல்லை. ஏனெனில் இந்த மாத்திரைகள் பெரும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

எடையை குறைப்பதற்கான மிகச் சரியான வழி சரியான நேரத்திற்கு சாப்பிட்டு, முறையான உடற்பயிற்சிகளை செய்து, நேரத்திற்கு தூங்கி எழுந்து, தகுந்த வேலையை செய்து ஆரோக்யமான வேலையை செய்வதுதான்.

 

3.குறைந்த கொழுப்புள்ள உணவு நல்லது என்று எண்ணுதல்

சந்தையில் உள்ள ஒரு பொருள் குறைந்த கொழுப்பு, ஜீரோ கொழுப்பு அல்லது சர்க்கரை இல்லாத உணவு என்ற குறிப்பை கொண்டிருக்கிறது என்பதாலேயே அது அப்படிப்பட்டது தான் என்பது இல்லை. நீங்கள் சற்றே கவனமுடன் அதில் உள்ள குறிப்புகளை படித்தீர்களானால், அவற்றை சராசரி உணவு என்று பறைசாற்ற அந்த உணவுகளில் தேவையான சர்க்கரை அல்லது கார்போஹைட்ரெட்கள் உள்ளன என்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள்.

பதப்படுத்தப்பட்ட மற்றும் உறைந்த உணவுகளை நாடுவதற்கு பதிலாக ப்ரெஷாக உள்ள காய், கனிகளை அவ்வப்பொழுது சமைத்து உண்ணுதல் நலம். ஆரோக்யமான உடலை பெற நன்கு உண்ண வேண்டும். ஆனால் நீங்கள் உண்ணும் உணவின் அளவையும், சமைக்கும் முறையையும் மனதில் கொள்ள வேண்டும்.

 

4.ஜங்க் உணவை முழுமையாக தவிர்க்க வேண்டும்

உங்களுக்கு பீட்சா, சாண்ட்விச் அல்லது பர்கர் போன்ற துரித உணவுகளை உண்ண வேண்டும் என்ற ஆவல் இருந்தால் அதற்கு தடை போடாதீர்கள். உணவில் உள்ள கலோரிகளை பெரிதும் மனதில் கொண்டு, கணக்கிட்டு அதை உண்ணாமல் இருக்கும் நபர், முடிவில் அதிக அளவு கலோரி உள்ள உணவுகளை உண்பார். அதனால் உங்களுக்கு எதையாவது சாப்பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டால் அதை சிறு அளவில் உண்டு உங்கள் ஆசையை பூர்த்தி செய்துக் கொள்ளவும்.

ஒரு சிறு துண்டு கேக் அல்லது பீட்சா உங்கள் எடை குறைப்பு குறிக்கோளை பெரிய அளவில் பாதிக்க போவது இல்லை. நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஜங்க் உணவை ஏழு முதல் பத்து நாளுக்கு ஒரு முறை என குறைத்துக் கொண்டு அவற்றை உண்ணும் அளவையும் குறைத்துக் கொண்டால், இவற்றால் உங்கள் எடை கூடக் கூடும் என்று நீங்கள் அஞ்சவே தேவையில்லை. மேலும் காய்கறிகள் நிறைந்த பீட்சாவை உண்டால் உங்கள் முயற்சிக்கு மிக்க உறுதுணையாக இருக்கும்.

உடல் குறைப்பதற்கு மிகவும் முக்கியமானது, நீங்கள் அழகானவர், உங்கள் உடல் அழகானது  என்ற நம்பிக்கை உங்களுக்கு வேண்டும். பெரும்பாலும் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு, ஒல்லியானவர்களை விட அதிக திண்மை மற்றும் மெட்டபாலிக் விகிதம் இருக்கிறது. நீங்கள் நீங்களாகவே இருப்பதுதான் ஆரோக்யத்திற்கு சிறந்த வழி!