Search

HOME / முப்பத்தைந்திற்குபின்- கர்ப்பம் நினைவில்கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்புகள்

முப்பத்தைந்திற்குபின்- கர்ப்பம் நினைவில்கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்புகள்

Nithya Lakshmi | அக்டோபர் 22, 2018

முப்பத்தைந்திற்குபின்- கர்ப்பம் நினைவில்கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்புகள்

ஒரு தாயாவது ஒவ்வொரு பெண்ணின் கனவு; அது அவரையும் அவரது குடும்பத்தையும் முழுமையடையச் செய்கிறது. முந்தய நாளில் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்வர், மேலும் அவர்கள் திருமணத்திற்குப்பின் விரைவில் குழந்தைகள் பெற்றுக்கொண்டனர். இந்தக்காலத்தில் பெண்கள் மேல் படிப்பிற்காக செல்கிறார்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆர்வமாக இருக்கிறார்கள், எனவே அவர்கள் வயது முதிர்ந்த பின் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு சில வருடங்களுக்குப்பிறகு, தாயாகும் மனநிலை வரும்வரையில் காத்திருப்பது, சில சமயங்களில் பெண்ணின் வயது ஒரு தடையாக இருக்கலாம். வேறு சில சந்தர்ப்பங்களில் தாமதமாகத் திருமணம் செய்யும் போதும் அல்லது பெண்கள் இரண்டாவது குழந்தையை முப்பத்தி-ஐந்து வயதிற்குப் பின்னர் திட்டமிடும் போதும் இருக்கும். இன்றயை காலத்தின் மருத்துவ வசதிகளுடன், முப்பத்தி ஐந்து வயதிற்குப் பிறகு ஒரு தாயாவது ஆபத்து இல்லை, ஆனால் இதுபோன்ற ஒரு சில விஷயங்களை ஒருவர் கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியம்-

 

1.கர்ப்பத்திற்கு முன் மருத்துவரை சந்திக்கவும்

குழந்தைக்கு திட்டமிடுவதற்குமுன் ஒரு நல்ல பெண் மருத்துவரை(கைனகாலஜிஸ்ட்) சந்தித்து ஒரு ஆரோக்கியமான கர்ப்பத்தை பற்றி கேளுங்கள். உங்கள் வயதை மனதில்கொண்டு அதிக வாய்ப்புள்ளதால், முக்கியமான உயிர்சத்து(வைட்டமின்)கள் அல்லது போலிக் அமிலம் போன்ற கனிமங்களை  மருத்துவர் ஒரு ஆரோக்கியமான அடித்தளத்தை குழந்தைக்கு உறுதிப்படுத்த பரிந்துரைக்கலாம்.

 

2. கர்ப்பத்தின்போது சரியான கவனிப்பு

கர்ப்பந்தரித்ததற்கு பின், முதல் இரண்டு மாதங்களுக்கு எல்லாவிதமான முன்னெச்சரிக்கைகளையும் எடுக்க வேண்டும், செவ்விய முறையில் உடல்நல பரிசோதனையைச் செய்ய வேண்டும். எல்லா நல்ல மருத்துவர்களும் பரிசோதனைகளுக்கு பரிந்துரைப்பர்  மேலும் வெவ்வேறு அளவுகளில் உடலை பரிசோதித்து கவனிப்பர். மேலும் மருத்துவர்கள் வாடிக்கையாளர்களுக்கு கருப்ப காலத்தில் பல்வேறு அறிகுறிகளைப்பற்றியும் அபாயங்களைப்பற்றிய அறிவுரையும் ஆலோசனையும் வழங்குவர்.

3. ஆரோக்கியமான குழந்தைக்கு உயிர்சத்து(வைட்டமின்)கள் மற்றும் ஊட்டச்சத்து உணவு

கர்ப்பத்தின்போது, மருத்துவர்கள் உங்கள் வயதையும் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு நிறைய  உயிர்சத்து(வைட்டமின்)கள், கனிமங்கள் மற்றும் சுண்ணாம்புசத்துக்களைப் பரிந்துரைப்பார். குழந்தையின் மூளை அல்லது தண்டுவடத்தில் குறைபாடு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கு இந்த உணவுக்குறைநிரப்பிகள் உதவும். குறிப்பாக வயது முதிர்ந்த பெண்களுக்கு, குறிப்பாக இது முக்கியம் ஏன்னெனில் அவர்களின் குழந்தைகள் இந்த நோய்களால் எளிதில் பாதிக்கபடுகின்றனர். இதோடு, ஒரு ஆரோக்கியமான உணவுமுறையும் முக்கியம். புதிய பழங்கள், பச்சை இலை காய்கள், முழு தானியங்கள், கொழுப்பு குறைந்த பால் அல்லது பால் பொருட்கள் உடைய ஒரு சமச்சீரான உணவுமுறையில் சாப்பிடுங்கள். மேலும், சுண்ணாம்பு சத்துமிக்க பொருட்களை உங்கள் உணவுமுறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். போலிக் அமிலத்திற்காக சில புளிப்பு(சிட்ரஸ்) பழங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை உங்கள் உணவுமுறையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

4. பிரசவத்திற்குமுன் அவசியமான சோதனைகள் செய்ய உறுதியாய் இருங்கள்

வயதைக் கருத்தில்கொண்டு, கர்ப்ப கால சிக்கல்களின் அபாயம், குறிப்பாக இடம்மாறிய கர்ப்பதிற்கு சாத்தியக்கூறுகள் அதிகரிக்கலாம். உங்கள் மருத்துவரால் நடத்தப் பட்ட சோதனைகள் குழந்தையின் மரபணு பிரச்சனைகளை பின்தொடரவும் தாமதமின்றி இவற்றிற்கு  சிகிச்சை அளிக்கவும் உதவும். உதாரணத்திற்கு, பனிக்குடத்துளைப்பு போன்ற சோதனையினால் துல்லியமாக இனக்கீற்று(க்ரோமோசோம்) பிறவிக் குறைபாட்டை கண்டுபிடிக்கலாம் ஆனால் பனிக்குடத்துளைப்பு கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடும், எனினும், உங்கள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு உங்கள் மருத்துவர் அதற்கு பரிந்துரைப்பார்.

5. புகைபிடிக்கவோ அல்லது மது அருந்துவதோ கூடாது

ஒரு ஊட்டச்சத்துமிக்க உணவுமுறை தவிர, நீங்கள் மது மற்றும் சிகரெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும் ஏனெனில் கர்ப்பத்தின்போது மது மற்றும் சிகரெட் உங்கள் பிரசவத்தில் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். புகை பிடித்தல் புதிதாக பிறந்த குழந்தையின் எடையைக் குறைக்கலாம், மேலும் பிரசவகாலத்தில் ஜன்னி வர அதிக வாய்ப்பாக அமையும்.

 

6.உடற்பயிற்சி மற்றும் உடலை சுறுசுறுப்பாக வைப்பது

செவ்விய உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி மற்றும் எளிமையான உடற்பயிற்சிகள் உங்களை பொருத்தமாக இருக்க, பதட்டமின்றி, சுறுசுறுப்பாக மற்றும் கர்ப்பம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.  ஆனால் எதைத் துவங்குவதற்கு முன்னும் மருத்துவரிடம் ஆலோசிக்க மறவாதீர்.

7. உங்கள் எடையை கவனித்துக் கொள்ளுங்கள்

கர்ப்பத்தின்போது எடையை பராமரிப்பது முக்கியம் ஏன்னெனில் அது உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் அபாயத்தை உருவாக்கலாம்  மேலும் குறைப்பிரசவத்திற்கு காரணமாகலாம். அதிக எடை உயர் இரத்த அழுத்தம் மற்றும் கர்ப்பத்தில் சக்கரை போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.  முப்பத்தைந்திற்குப்பின் மட்டுமல்ல, கருப்பம் சார்ந்த அபாயங்கள் அனைவரையும் பாதிக்கும் அதனால் எச்சரிக்கையாகவும் முன்னெச்சரிக்கை குறித்த வழிகாட்டல்கள் பெற வேண்டியதும் அவசியம்.

படத்தின் ஆதாரங்கள்: பிக்ஸாபே, விக்கிபீடியா, மாக்ஸ்பிக்ஸெல், பிக்ஸெல், பிலிக்கர், பிக்ஸாபே