மாதவிடாயின் போது எப்படி சுகாதாரத்தை பராமரிப்பது?

Spread the love

பெரும்பாலும், உற்சாகமாக இருக்கும் பெண்கள்கூட, மாதத்தின் அந்த நாட்களில் சோர்வாகவும் மந்தமாகவும் காணப்படுவர். 

இந்த நாட்களில் அதிகம் உணர்ச்சிவயப்படவோ அல்லது  அழுக்காகவோ உணர வேண்டியதில்லை, ஏன்னெனில் மாதவிடாய் கொட்டாவி, தும்மல், பசி அல்லது தாகம், போன்று உடலின் ஒரு இயற்கையான நடைமுறை. நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று உங்கள் உடலின் சுகாதாரத்தை தனி அக்கறை கொண்டு கவனித்துக் கொள்ளவும் மேலும் இந்த சமயத்தில் தேவை இல்லாத நோய்த்தொற்றில் இருந்து விலகவும் வேண்டும். எல்லாவற்றிக்கும் முன், சுகாதாரத்தை பராமரிக்காமல் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் கண்டு பிடிப்போமா?

மாதவிடாயின் போது, பிறப்புறுப்பை சுற்றி உள்ள பிரதேசம் ஈரமாக இருக்கும், நீங்கள் ஒருமுறை பயன்படும் பேட் அல்லது மீண்டும் பயன்படும் பேட் எது பயன்படுத்தினாலும், பிரதேசம் வெகுநேரம் ஈரமாக இருக்குமானால் பலவகையான நோய்த்தொற்று வருவதற்கான சாத்தியம் இருக்கிறது. இந்த நோய்த்தொற்று பெண்ணுறுப்பில் அரிப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். இந்த ஈரத்தினால், பெண்ணின் கால்ச்சட்டை கோட்டுப் பிரதேசத்தில் தடிப்புகள் பொதுவாக வரும். மாதவிடாய் கப்புகள் உடலின் உள்ளே செருகப்படுகின்றன, மேலும் சுகாதாரமின்மையால் இது உட்புறத்திலும் நோய்த்தொற்றை ஏற்படுத்தும்.

 

மாதவிடாயின் போது சுகாதாரத்தை பராமரிக்க கீழ்கண்டவற்றை மனதில் கொள்ளுங்கள்:

முதல் முக்கியமான விஷயம் அவ்வப்போது உங்கள் பேடை மாற்றிக்கொண்டிருப்பது. சில பெண்கள், குறிப்பாக குறைவாக உத்திரப்போக்கு இருப்பவர்கள், நீண்ட நேரத்திற்கு ஒரே ஒரு பேட்தான் பயன்படுத்துவார்கள். உங்கள் உதிரப்போக்கு எப்படி இருந்தாலும், முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு,  நீங்கள் பேட்டை வழக்கமான இடைவெளியில் மாற்ற வேண்டும், அதனால் உங்களுக்கு எந்த நோய்த்தொற்றும் வராமல் இருக்கும் என்பதை, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். முதல் மூன்று நாட்களில் வரும் சாதாரண போக்கின்போது, ஆறுமணிக்கு ஒரு முறை பேடை மாற்றவும் மேலும் நான்காவது ஐந்தாவது நாட்களில் ஒவ்வொரு எட்டு அல்லது ஒன்பது மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றவும். இந்த வகையில் நீங்கள் நோய்த்தொற்றிற்கோ  தடிப்புகளுக்கோ பயப்பட தேவையில்லை.

இப்போது நாம் எந்த பேடை பயன்படுத்துவது என்ற கேள்விக்கு வருவோமா?  துணி பேட் ஒரு பழைய விஷயம் ஆகிவிட்டது, ஆனால் பல வகையான மாதவிடாய்கால பேட்கள் கிடைக்கின்றன. எப்பொழுதும் குருதியை முழுவதுமாக உறிஞ்சும் திறன்கொண்டதாகவும் நீண்ட நேரம் ஈரத்தை கட்டுப்படுத்த முடிந்ததாகவும் உள்ள நல்ல தரமான பேட்களைப் பயன்படுத்தவும். பெண்ணுறுப்பை சுற்றி ஈரம் இல்லையெனில், தடிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.

அவ்வப்போது பேடை மாற்றுவது பெண்ணுறுப்பில் அரிப்பையும் எரிச்சல் உணர்வையும் குறைக்கும் ஏன்னெனில் இதுவும் தடிப்புகளைப் போன்று, தூய்மையும் வறட்சியும் சார்ந்த ஒரு பிரச்சனை.

மாதவிடாய் கப்புகள் பயன்படுத்தினால், நீங்கள் இரண்டு கப்புகள் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஒன்றை நீங்கள் நிரப்பிய பின், மீண்டும் பயன்படுத்துவதற்கு முன், அதை நன்றாக தண்ணீரில் கழுவி மேலும் அதை பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு கிருமியழிப்பு(ஸ்டெர்லைஸ்) செய்யவும். அது உள்ளே பயன்படுத்துவதால்,  மாதவிடாய் கப்புகளை கிருமியழிப்பு(ஸ்டெர்லைஸ்) செய்வது மிகவும் முக்கியம்.

இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்குப் பின்னும், தடிப்புகள் வந்தால் ஒரு நல்ல நோய்எதிர்ப்பு கிரீமை மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்தவும். தடிப்புகள் மேலும் மோசமாவதைத் தடுக்க பேட் மாற்றும் போது க்ரீமை பயன்படுத்தவும்.

மாதவிடாயின்போது உங்கள் பேட்டை மாற்றும்போதெல்லாம், பிறப்புறுப்பை சுத்தப்படுத்திய பின் பவுடர் பயன்படுத்தவும். அது பிறப்புறுப்பை சுற்றியுள்ள பிரதேசத்தை வறட்சியாக வைக்கும் மேலும் தடிப்புகள் வர எந்த அபாயமும் இல்லை. ஆனால் உங்களுக்கு வாசனைஒவ்வாமை இருந்தால், ஒரு திடமான வாசனை கொண்ட பவுடர் பயன்படுத்தாமல் இருப்பதும் மேலும் ஒரு நல்ல நோய்எதிர்ப்பு பவுடரை மருத்துவரிடம் ஆலோசித்தபிறகே பயன்படுத்துவதும் பற்றி மனதில் கொள்ளுங்கள். சுகாதார குறைப்பாட்டினால், நிறைய பெண்கள் நோய்த்தொற்றிற்கும் நோய்களுக்கும் ஆளாகிறார்கள், அதனால் இவை எல்லா விஷயத்திலும் கவனம் கொள்ள வேண்டும் ஏன்னெனில் உங்கள் கடினமான நாட்கள் எளிதாகவும் உற்சாகமாகவும் இருக்கும்!

படத்தின் ஆதாரங்கள்:  பிக்ஸாபே, விக்கிபீடியா, பிலிக்கர்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன