உங்கள் தொழில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான வாஸ்து குறிப்புகள்

Spread the love

வாஸ்து சாஸ்திரம் என்பது கட்டிடக் கலையின் சாஸ்திரம் அல்லது விஞ்ஞானம் எனலாம். ஒருவரின் வீட்டில் மற்றும் அலுவகத்தில் முறைப்படி நல்ல வாஸ்துவை கடைப்பிடிப்பதால், இயற்கையின் ஐந்து கூறுகளான பஞ்சபூதங்களுக்கும், மனிதனுக்கும் இடையே நல்லிணக்கம் மற்றும் சமநிலையை உண்டாக்கலாம். நல்ல வாஸ்து நேர்மறை ஆற்றலை ஈர்க்க உதவும், மாறாக முறையில்லாத வாஸ்துவானது எதிர்மறை விளைவுகளை உங்கள் வாழ்க்கை முன்னேறத்தில் ஏற்படுத்துகிறது. பண்டைய இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம் நேர்மறை ஆற்றலை ஊக்குவிப்பதை பெரிதும் நம்புகிறது. விஞ்ஞானத்தின் படி அறையின் திசை,நிலை கதவின் இருப்பிடம், உபகரணங்கள், நிறம், பொருட்கள் போன்றவை அனைத்தும் ஒரு நபரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனால் நல்ல வாஸ்துவானது ஒரு நபரின் வாழ்வின் எல்லா அங்கங்களிலும் ஆதரவு அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர் வாழ்விலும் , தொழிலிலும் முன்னேரி, வளர்ச்சியடையவும் உதவுகிறது.

 

பின்பற்றுவதற்கு எளிமையான சில வாஸ்து குறிப்புகள்:

செய்யக்கூடியவை

 • அலுவலக இருப்பிடம்: ஒருவர் தன் அலுவகத்தில் உயர் பதவி வகிப்பவராயின், அவரின் அலுவலகமானது, கட்டிடத்தின் தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். அந்த நபரும் அலுவலகத்தின் தென்மேற்கு திசையில், வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி அமர்ந்து வேலை செய்ய வேண்டும்.
 • இருக்கை ஏற்பாடு: முதுகு சுவற்றை நோக்கி இருக்குமாறு அமரவும். சுவர் ஆதரவை குறிக்கும். உங்கள் முதுகின் பின்புறம் உள்ள சுவற்றில் மலைகளின் ஓவியத்தை தொங்கவிடவும். அது ஆதரவை வலுப் பெறச் செய்யும். உயர்ந்த முதுகுப்புறத்தை உடைய நாற்காலியை நீங்கள் அமர தேர்வு செய்யவும். அது உங்களை திடமாக தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு சிறப்பான இருக்கையை அளிக்கும்.
 • மரச்சாமான்களின் / பர்னிச்சர் வகைகள்: ஒழுங்கற்ற வடிவம் மற்றும் வட்ட வடிவ மரச்சாமான்களை தவிர்க்கவும். அலுவலக வேலைப் பார்க்க சதுர அல்லது செவ்வக வடிவ மேஜையை தேர்வு செய்யவும். ஒருவேளை உங்கள் அலுவலகம், கட்டிடத்தின் மேற்கு புறத்தில் இருந்தால், மேஜையின் மேற்புறம் கண்ணாடியில் இருக்கலாம். மரத்தினால் ஆனா மேற்புறமும் நல்லதுதான். உடைந்த மரச்சாமான்கள் உடனடி சரி செய்யப்படவோ, மாற்றப்படவோ வேண்டும்.
 • அலங்காரம்: அலுவலக அறையின் வட கிழக்கு மூலை அல்லது மேசையின் மேல் நீரூற்று வைக்கவும். புதிய மலர்களை கொண்டு செய்யப்பட்ட மலர் அலங்காரங்களை அலுவலகத்தின் கிழக்கு திசையில் வைக்கவும். அதில் சில மொட்டுகளும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் அவை வரப்போகும் புதிய வாய்ப்புகளை குறிக்கின்றன. தினம் ஒரு விளக்கு அல்லது தீபத்தை அலுவலக அறையின் தென் கிழக்கு மூலையில் ஏற்றவும். அதனால் அதிர்ஷ்டம் மற்றும் பணம் ஈர்க்கப்படுகிறது. தென் கிழக்கு மூலையை செடிகள் வைத்தும் அலங்காரப்படுத்தலாம். அது வியாபாரம் மற்றும் நிதி நிலைமையை வலுப்பெறச் செய்யும்.

 • சாதனங்கள்: சூட்டை உருவாக்கும் அனைத்து சாதனங்களான கம்ப்யூட்டர்கள், தொலைகாட்சி பெட்டி போன்றவைகளை அலுவலகத்தின் தென்கிழக்கு மூலையில் வைக்கவும். அவற்றின் மின்கம்பிகள் வெளியே தெரியாதவாறு வைத்தல் நலம்.
 • பொதுவான விஷயங்கள்: முன்புறம் சிறிது திறந்தவெளியாக இருந்தால் புதிய சிந்தனைகளை வரவேற்று படைப்பாற்றலை அள்ளித் தரும் என்பது நம்பிக்கை . அலுவலகத்தை எப்போதும் வெளிச்சமாக, விளக்குகள் போட்டு இருட்டில்லாமல் வைத்திருங்கள். அலுவலகத்தின் வட கிழக்கு மூலை சுத்தமாக, அடைசல் இல்லாமல் இருக்க வேண்டும். அறையின் மைய பகுதியை வெறுமையாக, திறந்த வெளியாக வைத்திருத்தல் நல்லது. கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அலுவலகத்தை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருத்தல் அவசியம்.

செய்யக்கூடாதவை

 • ஒருபோதும் உத்திரத்தின் அடியில் அமரக் கூடாது.
 • கால்களை குறுக்கே போட்டு அலுவலகத்தில் அமரக் கூடாது.
 • உங்கள் முதுகு வாசலை நோக்கி இருக்கும்படி உட்காரக் கூடாது.
 • கூர்மையான, பிளாஸ்டிக், உலோக பர்னிச்சர்கள் உபயோகிக்கக் கூடாது.
 • வன்முறை அல்லது எதிர்மறை சிந்தனைகளை பறைச்சாற்றும் போர், அழும் குழந்தை போன்ற ஓவியங்களை தொங்க விட வேண்டாம்.

இந்த வாஸ்து குறிப்புகள் நல்ல ஆற்றல்களை ஒன்றோடு ஒன்று வினை புரிய வைத்து உங்கள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன