உங்கள் பழைய புடவைகளை பயன்படுத்தி இந்த புதிய உடைகள் செய்யுங்கள்!

Spread the love

புடவை என்பது இந்திய கலாச்சாரத்தின் உடை. அணைத்து வகை பண்டிகைகள் மற்றும் விசேஷங்களுக்கு பெண்கள் புடவை அணிவதை விரும்புவார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு புடவை வாங்கி அலமாரி முழுவதிலும் பழைய புடைவைகளால் நிரம்பி இருப்பது பொதுவாக நடப்பது ஆகும். உங்களுக்கு தெரியுமா? பழைய புடைவைகளை கவுன், டிரஸ், ஸ்கிர்ட், ஜம்ப்சூட் போன்ற புதிய ஆடைகளாக மாற்றலாம். இதை படிக்க உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம், ஆனால் அது சாத்தியம்.

பழைய புடவைகளை உபயோகித்து செய்யும் புதிய உடைகளை இங்கே பாப்போம்:

 

1.பூப்போட்ட மாக்ஸி உடை

உங்களுக்கு தேவையானது ஒரு பழைய பூப்போட்ட ஜார்ஜெட் புடவை மற்றும் ஒரமடிப்பதற்காக ஒரு வண்ண துணி. துணியை கீழ் கண்ட காணொளியில் வழிகாட்டுதல் படி கத்தரித்து தைத்து கடற்கரை செல்வதற்கு பத்தே நிமிடத்தில் தயார் ஆகுங்கள்!

காணொளிக்கு இங்கே அழுத்தவும்:

 

2.ஒரே துண்டு உடை

இந்த அழகிய உடை செய்வதற்கு, உங்களுக்குத் தேவையானது ஒரே வண்ண சிப்பான் புடவை. காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பார்த்து ஒவ்வொரு அடுக்காக செய்து இந்த அழகிய உடையை தயாரிங்கள்.

காணொளிக்கு இங்கே அழுத்தவும்:

 

3.லெஹெங்கா

பண்டிகை காலங்களில் ஒரு முறை அல்லது இரு முறை உபயோகிக்கும் லெஹெங்காவிற்காக அதிகம் செலவு செய்வதை விரும்பாதவர்கள், தங்களது பழைய புடவையை இந்த காணொளியின் மூலம் மாற்றி லெஹெங்கா செய்யலாம்.

காணொளிக்கு இங்கே அழுத்தவும்:

 

4.ஜம்ப்சூட்

ஜம்ப்சூட் தான் தற்போதைய காலத்தில் பிரபலமான உடை, அதிலும் கோடை காலத்தில் பெரிதும் விரும்பப்படும் உடை. உங்களுக்கு ஜம்ப்சூட் வேண்டுமென்றால், உங்கள் அலமாரியில் ஒரு பழைய புடவையைத் தேடி, நாகரிகமான ஜம்ப்சூட் தயாரிக்கலாம்.

காணொளிக்கு இங்கே அழுத்தவும்:

 

Source: Youtube

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன