Home / Uncategorized / உதட்டுச்சாயம் பூசுவது எப்படி – ஒரு பயிற்சி
உண்மையாக சொல்லப் போனால் பெண்கள் உதடுகளில் சாயம் பூசுவது வெகு காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. உதட்டுச்சாயம் பூசாமல் ஒரு பெண்ணின் ஒப்பனை முழுமை பெறுவதில்லை. இபோழுதெல்லாம், சந்தையில் பல நிறங்களிலும், பல அமைப்புகளிலும் உதட்டுச்சாயங்கள் கிடைக்கின்றன. ஒரு பெண்ணின் அழகை அது மேலும் அழகாக எடுத்துக் காட்டுகிறது. ஆனால் அந்த அழகு நீங்கள் உதட்டுச் சாயத்தை சரியாக பூசிக் கொண்டால் தான் கிடைக்கும்.
இங்கே சரியான விதத்தில் உதட்டுச்சாயம் பூசுவது எப்படி என்று பார்ப்போம்:
Table of Contents
முதலில் மெல்லியதாக உங்கள் லிப் பாம் / உதட்டு தைலத்தை போட்டுக்கொள்ளவும்.
லிப் பாம் பூசிய பிறகு, ஒரு டூத் பிரஷ் கொண்டு லேசாக உங்கள் உதட்டில் தேய்த்து இறந்த செல்களை அகற்றவும்.
இப்பொழுது உங்கள் உதட்டின் மேல் கன்சீலர் போடவும். இது உங்கள் உதட்டிற்கு சீரான நிறத்தை கொடுக்கும். மேலும் அதன் மேல் நீங்கள் உதட்டுச்சாயம் பூசும் பொழுது நேர்த்தியாக, சீராக வெகு நேரம் நிலைத்து நிற்கும்.
உதட்டுச்சாயம் போடுவதற்கு முன் லிப் லைனர் கொண்டு உங்கள் உதட்டில் ஒரு எல்லைக்கோடு (அவுட் லைன்) வரையவும். இது உதட்டுச் சாயம் உதட்டை விட்டு வெளியேறாமல் இருக்க உதவும்.
நீங்கள் லேசான வெளிர் நிறத்தை விரும்புபவரானால் உதட்டின் உள்ளேயும் லிப் லைனர் பென்சில் கொண்டே வண்ணம் தீட்டிக் கொள்ளலாம்.
நீங்கள் ஒருவேளை திரவ உதட்டுச்சாயம் உபயோகிப்பவரானால், முதலில் எல்லைக் கொடு / அவுட்லைன் வரைந்து கொண்டு பின் படிப்படியாக உள்ளே நிரப்பவும்.
நீங்கள் உதட்டுச்சாயம் பூசிய பின்னும், உங்கள் உதட்டின் வடிவம் எடுப்பாக தெரியவில்லை என்று உணர்ந்தால், இந்த கன்சீலர் பென்சில் உபயோகித்து நீங்கள் விரும்பியவாறு அவுட்லைன் போட்டுக் கொள்ளலாம். உங்கள் உதட்டின் வெளியே இதைக் கொண்டு அவுட் லைன் போடவும்.
மேட் உதட்டுச்சாயம் விரும்புவோர், உங்கள் உதட்டின் மேல் ஒரு டிஷ்யூ தாள் வைத்து அதன் மேல் பிரஷ் கொண்டு கொஞ்சம் பவுடர் போட்டு ஒற்றி எடுக்கவும்.
உங்கள் உதடு முழுவதும் பளிச் என உதட்டுச்சாயத்தால் நிரப்பப்பட்டது போன்ற தோற்றத்தை நீங்கள் பெற விரும்பினால், சிறிதளவு சில்வர் நிற கண்-ஷாடோ (EYE SHADOW) எடுத்து உங்கள் உதட்டின் மையப்பகுதியில் தீட்டி கொள்ளவும். பார்க்க கவர்ச்சியாகவும், முழுமையாகவும் இருக்கும்.
Click on the video below to learn more about how to apply lipstick:
Image Source: Youtube.
COMMENTS (0)