சமீபத்திய ட்ரெண்டிங் தங்க காப்பு / ப்ரேசிலட் வடிவமைப்புகள்

Spread the love

செல்வம் மற்றும் சுபிக்ஷம் இரண்டிற்கும் சம்பந்தமான தண்தேராஸ் என்னும் ஐந்து நாள் தீபாவளி பண்டிகைக்கு நீங்கள் ஏன் ஒரு அழகான தங்க ப்ரேசிலட் வாங்கக்கூடாது? அவரவரின் தனிதன்மைக்கேற்ற ப்ரேசிலட் வாங்குவது தான் சிறந்தது. தினசரி உபயோகத்திற்கு நீங்கள் ப்ரேசிலட் வாங்குவதாக இருந்தால் நல்ல திடமான, உறுதியான ப்ரேசிலட் வாங்குவது சிறந்தது. மேலும் அதன் சரியான அளவை கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டும். பொதுவாக பெண்களுக்கான ப்ரேசிலட்கள் 7 அங்குல நீளம் இருக்கும்.

தற்போது சந்தையில் உள்ள பிரபலமான ப்ரேசிலட்களை பார்ப்போம்:

 

1.பர்ஃபி வடிவ ப்ரேசிலட்கள்

உங்கள் இதயத்தை கொள்ளை கொள்ளும் ப்ரேசிலட்கள் இந்த பர்ஃபி வடிவ ப்ரேசிலட்கள். இதன் சிறப்பம்சம் இந்த ப்ரேசிலட்களில் பதிக்கப்பட்டுள்ள பர்ஃபி வடிவ மிகச்சிறிய வைர கற்கள். அதனால் மேலும் அழகாகவும் நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறது.  

 

2.வைரகற்கள் பொருத்திய வட்ட வடிவ தங்க ப்ரேசிலட்கள்

பிரேத்தியகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ப்ரேசிலட்களை அணிய நீங்கள் விசேஷமான தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டாம். இந்திய அல்லது மேற்கத்திய உடை இரண்டிற்கும் இது மிகவும் பொருந்தும்.

 

3.மாங்கல்ய ப்ரேசிலட்கள்

இந்த குறிப்பிட்ட டிசைன் ப்ரேசிலட்களுக்கு சந்தையில் நல்ல கிராக்கி. இது இரண்டு வகையில் உபயோகப்படுகிறது. உங்கள் மாங்கல்யத்தை கைகளில் ப்ரேசிலட்களாக அணியலாம். அதன் நுனியில் ஒரு ஸ்டார், டைமன்ட், ஹார்ட் போன்ற எந்த வடிவத்தை வேண்டுமென்றாலும் தொங்க விட்டுக் கொள்ளலாம்.

 

4.ராஜ்வடா ப்ரேசிலட்கள்

இந்த பெரிய ப்ரேசிலட் நடுவில் பதிக்கப்பட்டுள்ள சிவப்பு மாணிக்க கல் ஒரு முரணான ராஜ களை தோற்றத்தை அளிக்கிறது. அதனால் தான் இதற்கு ராஜ்வடா என்று பெயர் வந்தது.

 

5.மகாராணி ப்ரேசிலட்

தங்கம் மற்றும் வைரத்தினால் செய்யப்பட இந்த ப்ரேசிலட்டை நீங்கள் அணியும் பொழுது ராணி போன்ற உணர்வை பெறுவீர்கள். தொலைவிலிருந்து பார்த்தால் கூட இந்த ப்ரேசிலட் ஜொலிக்கும்.

 

6.‘ஓம்’ மாங்கல்ய ப்ரேசிலட்

‘ஓம்’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட இந்த மாங்கல்ய ப்ரேசிலட் புனிதமானது. மாங்கல்யம் புனிதமானது. அதனுடன் ‘ஓம்’ சேரும் பொழுது அது மிகவும் மங்களகரமாகிறது.

 

7.கடா ப்ரேசிலட்

அதிர்ஷ்டம் உங்களிடம் இருக்கிறது. ஆண்கள் பொதுவாக அணியும் கடா என்னும் காப்பின் வடிவத்தில் செய்யப்படும் இந்த ப்ரேசிலட்டில் ஏழு வைர கற்கள் பதிக்கப் பட்டிருக்கும். பெரும்பாலான மக்களுக்கு 7 அதிர்ஷ்ட எண் என்பதால் தான் 7 உலக அதிசங்கள், 7 புனித நதிகள், 7 சூளுரைகள் என நாம் வைத்துள்ளோம்.

 

8.மீனாகரி ப்ரேசிலட்கள்

நீங்கள் நகை பிரியர் என்றால் கண்டிப்பாக உங்களிடம் இந்த மீனாகரி ப்ரேசிலட் இருக்க வேண்டும். வண்ணமயமான இந்த ப்ரேசிலட்கள் எந்த உடைக்கும் பொருந்தி அணிபவரின் அழகை கூட்டும்.

Image Source: Pinterest

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன