Search

HOME / டெங்குவிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று ருஜுதா திவேகர் அளிக்கும் டிப்ஸ்கள்

டெங்குவிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று ருஜுதா திவேகர் அளிக்கும் டிப்ஸ்கள்

Subhashni Venkatesh | அக்டோபர் 24, 2018

BLOG TAGS

Health Information

டெங்குவிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று ருஜுதா திவேகர் அளிக்கும் டிப்ஸ்கள்

மழைக்காலம் தொடங்கும் நேரமாதலால் பலவகையான நோய்களும், வைரல் தொற்றுகளும் நம்மை பாதிக்கும் ஆபத்து உள்ளது. கொசுக்கடியால் ஏற்படும் ஒரு ஆபத்தான நோய் டெங்கு ஆகும். டெங்குவை நோய்க்கு காரணமான கொசுக்கள் சுத்தமான நீரில் தான் இனப் பெருக்கம் செய்கின்றன. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களில் ஏடிஸ் எனும் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. அந்த கொசுவின் கடிக்கு உள்ளாகும் பொழுது டெங்கு நோய் ஏற்படுகிறது. டெங்கு என்னும் வைரல் தொற்றானது வேகமாக பரவி உடலின் இரத்தம் உறைவு அமைப்பில் பாதிப்பை விளைவிக்கிறது. ரத்தத்தில் உள்ள தட்டுக்களின் (platelets) எண்ணிக்கை ஏற்கனவே குறைந்த அளவில் இருப்பதால், உயிருக்கே ஆபத்தாகும் இரத்தக் கசிவை உடலில் ஏற்படுத்துகிறது. இந்த நோய்க்கான மிகச் சிறந்த சிகிச்சை இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான். இந்தியாவின் புகழ் பெற்ற உணவு நிபுணர் ருஜுதா திவேகர் அவர்கள் டெங்கு நோயை தடுப்பதற்கான சில குறிப்புகளை உங்களுக்காக அளித்துள்ளார்.

சுவை மட்டுமல்ல ஆச்சரியமூட்டும் மருத்துவ குணங்களையும் உடைய சிலவற்றை முறையாக உண்டால் எந்த தொற்றின் பாதிப்பையும் தடுத்து விடலாம். டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் இவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்யத்தில் முன்னேற்றம் காணலாம்.

 

1.குல்கந்து

இந்த வரிசையில் முதலில் உள்ளது குல்கந்து. அதை காலையில் வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பாட்டுடனோ உண்ணலாம். அஸிடிட்டி, வயிற்று பிரட்டல், குமட்டல், உடல் சோர்வு போன்றவைக்கு கை மேல் பலன் இது தரும்.

 

2.குங்குமப்பூ மற்றும் மஞ்சள் சேர்த்த பால்

ஒரு கப் பாலில், ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, இரண்டு அல்லது மூன்று குங்குமப்பூ ஆர்க்குகள் மற்றும் ஒரு துளி ஜாதிக்காய் சேர்க்கவும். அது பாதியாக வைத்தும் வரை கொதிக்க விடவும். அதில் சிறிது வெல்லம் சேர்த்து சூடாகவோ அல்லது ஆறிய பிறகோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப குடிக்கவும். குங்குமப்பூ மற்றும் மஞ்சள் சேர்த்த இந்த  பால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ப்ரோட்டின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, வீக்கத்தை குறைக்கிறது.

 

3.அரிசி கஞ்சி

இதை அரிசியிலிருந்து செய்த சூப் என்றும் சொல்லலாம். கறுப்பு அல்லது கல் உப்பு , பெருங்காயம் மற்றும் நெய் இவற்றை அரிசி கஞ்சியில் சேர்க்கவும். கேரளாவில் கிடைக்கும் சுத்தமான, அசல் பெருங்காயத்தை உபயோகிக்குமாறு ருஜுதா திவேகர் கூறுகிறார். இதை தொடர்ந்து உண்டால் பசியை தூண்டி, உடல் வறட்சியை நீக்கி, எலக்ட்ரோலைட்களை சமன் படுத்துகிறது.

 

4.நிறைய தண்ணீர்

தினமும் சிறிது சிறிதாக நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக அளவு நீர் குடிப்பதால்,  நீங்கள் நிறைய சிறுநீர் கழிக்க வேண்டி வரும். அவ்வாறு அடிக்கடி சிறுநீர் வெளியேறும் சமயம் அத்துடன்  நச்சுப் பொருட்களும் உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. சிறுநீரின் நிறம் மாறி, நிறமற்றதாக மாறும் பொழுது உங்கள் ஆரோக்க்யத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது அன்பதை அறியலாம்.

 

5.யோகா

ஆரோக்யமான உணவுடன் சில எளிமையான யோகாசனங்களான கோனாசனம், சுப்த பதாசனம்  போன்றவைகள் நன்மைகளை பயக்கும் என்கிறார் ருஜுதா திவேகர்.

இந்த நிலையை ஐயங்கார் அமைப்பின்படி பழகுவதற்கு இரண்டு பொருட்கள் வேண்டும். ஒரு குஷன் அல்லது சற்று உயரமான தலையணையில் உங்கள் முதுககை வசதியாக சாய்த்துக்கொள்ளவும், ஒரு போர்வை உங்கள் கழுத்தின் அடியில் வைத்துக் கொள்ளவும் தேவைப்படும். உங்கள் உடலின் மேற்பாகத்தை வசதியான நிலையில் வைத்துக்கொண்டால் புத்துணர்வும், முதுகு வலியிலிருந்து நிவாரணமும் கிடைக்கும்.

நம் அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் மிகவும் இன்றிமையாதது மற்றும் முதன்மையானதும் கூட. மற்றவை அனைத்தும் ஆரோக்யத்திற்கு பின் தான். டெங்கு போன்ற உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் தொற்று நோய்களை தவிர்க்க மேலே கூறப்பட்டுள்ள  குறிப்புகளை முறையாக பின்பற்றினால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாகும். மேலும் மற்ற எந்த நோயும் உங்களை தாக்காத வண்ணம் இயற்கையான முறையில் அரணாக உங்கள் உடலை பாதுகாக்கும்.

 

Image Source: maxpixel , Flickr, pxhere,