Search

Home / Women Health Tips in Tamil / ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டிய பாலியல் நோயின் அறிகுறிகள்!

ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டிய பாலியல் நோயின் அறிகுறிகள்!

Nithya Lakshmi | ஜூலை 26, 2018

நமது சமுதாயத்தில் இந்த நூற்றாண்டிலும் கூட உடலுறவு மற்றும் அதனைச் சார்ந்த விஷயங்களைப் பற்றி பேசுவது பெரும்பாலும் தவிர்க்க படும் சம்பவமாகும். பெரும்பாலும் பெண்கள் இதைப் பற்றி பேச தவிர்க்கிறார்கள். திருமணமான பெண்கள் பாலியல் நோயால்(உடலுறவினால் ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய்கள்/தொற்றுகள்) பாதிக்கப்பட்டு இருந்தால், இதனைப் பற்றி பேச தயங்கி மெளனமாக இருந்து விடுகிறார்கள். இந்த மௌனத்தினால் எளிதாக சாதாரணமாக குணப்படுத்தக் கூடிய நோய் தோற்று, பாலியல் நோயாக வளர்ந்து ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றது.

பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சில முன்னேற்பாடுகளை மேற்கொண்டு, தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்தால், அத்தைகைய தொற்றுகள்/நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடித்து மேலும் தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ளலாம். பெண்களுக்கு நேர கூடிய பாலியல் நோய்களையும் அதன் அறிகுறிகளையும் இங்கே காண்போம்:

 

பெண்களை தாக்கக் கூடிய பாலியல் நோய்கள்:

முதலாவதாக அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், துணைவருடன் யோனியின் மூலம் உடலுறவு கொள்ளுவது மூலம் மட்டும் பாலியல் நோய் பரவாது. வாய்வழி உடலுறவு மற்றும் ஆசன வாய் உடலுறவு கொள்வதன் மூலம் கூட இத்தகைய தொற்றுகளும் நோய்களும் பரவும். பாலியல் நோயால் பாதிக்கப் பட்ட ஒருவர் ஆரோக்கியமான பெண்ணிடம் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டால், நோய் ஏற்படுத்தும் கிருமிகள் பெண்ணின் உடம்பிற்குள் நுழைந்து விடுகிறது. பாலியல் நோயில் உள்ள மிகப் பெரிய சிக்கல் என்னவென்றால் ஆரம்ப நிலையில் இதைக் கண்டு பிடித்தல் கடினம். இதனைக் கண்டு கொள்ளும் நிலையில் தோற்று பரவி தீவிர சிகிச்சை தேவை படுகிறது.

கிளமீடியா, கோனோரியா, ட்ரிக்கோமோனியாஸிஸ், ஹெச்ஐவி, ஜெனிட்டல் ஹெர்பெஸ், ஹெப்பாடிட்டீஸ், சிபிலிஸ் மற்றும் ஹெச்பிவி ஆகியவை பெண்களைத் தாக்கும் சில நோய்கள் ஆகும். தரமான மருத்துவ கண்காணிப்பின் கீழ் சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டால், விரைவில் குணம் பெறலாம். பாதுகாப்பான உடலுறவு கொள்ளுவதே பாலியல் நோயைத் தவிர்க்க சிறந்த வழிமுறையாகும்.

பெண்ணின் உடம்பில் ஏற்படக் கூடிய ஆரம்ப அறிகுறிகள்:

பாலியல் நோயின் கண்டறிதலையும் சிகிச்சைக்கும் உள்ள பெரிய இடையூறே அணைத்து பாலியல் நோயிற்கு உள்ள ஆரம்ப அறிகுறிகள் ஒரே மாதிரி இருத்தல் ஆகும். மருத்துவரை அணுகி தேவையான சோதனைகளைச் செய்தால் மட்டுமே ஒரு பெண்ணினால் எந்த நோய் என்றும் அதன் சிகிச்சை என்னவென்றும் அறிய முடியும். பாலியல் நோய்களின் அறிகுறிகளைப் பற்றி விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே சரியான நேரத்தில் பிரச்சினையை அறிந்து அதற்கு ஏற்ற மருத்துவ உதவியைப் பெற முடியும்.

உதாரணமாக, யோனியில் வழக்கத்திற்கு மாறாக சீழ் வடியுதல், உடலுறவிற்குப் பிறகு ரத்தம் வடியுதல் மற்றும் உடலுறவின் பொது கடும் வலி ஏற்படுதல் ஆகியவை கிளமீடியாவின் முக்கிய அறிகுறிகளாகும். கோனோரியா பெரும்பாலும் வாய்வழி உறவின் மூலம் பரவி பெண்ணின் சிறுநீர் குழாய், கர்ப்பப்பை, ஆசனவாய், தொண்டை மற்றும் கண்களைப் பாதிக்கும். நெய்சேர்ரியா கோனோரியாவின் ஒரு வகையானது பெண்ணின் ரத்தத்தில் பரவி காய்ச்சல், மூட்டு வலி மற்றும் தோலில் புண்களை ஏற்படுத்தும். ஆட்கொல்லி நோயான ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸின் ஆரம்பகால அறிகுறிகள் சளிக்காய்ச்சல், உடல் அரிப்புகள் மற்றும் தொண்டைப்புண் ஆகும். மருத்துவ சோதனையின் மூலம் இதனை உறுதி செய்ய இயலும்.

மனித பாபிலோமா கிருமியால் ஒரு பெண் பாதிக்கப்பட்டால், அவரது பிறப்புறுப்பைச் சுற்றி கட்டிகள் ஏற்படும். ஸிபிலிசினால் பாதிக்கப்பட்டால் உடலில் பிறப்புறுப்பு, ஆசனவாய், நாக்கு மற்றும் உதடு போன்று எங்கு வேணுமானாலும் சிறிய சிவப்பு நிற அரிப்பு ஏற்படும். பொதுவாக தொற்று எங்கே ஏற்பட்டதோ அங்கே அரிப்பு ஆரம்பிக்கும். ட்ரிக்கோமோனியாஸிஸினால் பாதிக்கப்பட்டால் வெள்ளை, பச்சை மற்றும் மஞ்சள் நிற திரவம் யோனியில் வடியும். இதனுடன் அரிப்பு மற்றும் எரிச்சலும் யோனியில் ஏற்படும்.

இறுதியாக, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றுள் ஏதேனும் அறிகுறிகளை நீங்களும் கொண்டிருந்தால், உடனடியாக மருத்துவ அறிவுரைகளைப் பெறவும். அப்பொழுது தான் சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை அளிக்க இயலும்.

  • அடிவயிற்றில் வலி
  • மாதவிடாயின் பொது அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல்
  • யோனியை சுற்றி அரித்தல் மற்றும் யோனியில் சீழ் வடிதல்
  • சிறுநீர் கழிக்கும் போதோ உடலுறவின் போதோ அதிக வலி ஏற்படுதல்
  • பிறப்புறுப்பைச் சுற்றி சிவந்த வலி இல்லா காயங்கள் ஏற்படுதல்
  • பிறப்புறுப்பைச் சுற்றி இளஞ்சிவப்பு நிறத்தில் கட்டி ஏற்படுதல்
  • உடலுறவின் பொது யோனி மற்றும் ஆசனவாய்க்குள் அல்லது அதனைச் சுற்றி கடும் வலி ஏற்படுதல்
  • திடீர் தோற்று நோய், அன்றாடம் சலுப்பு மற்றும் சோர்வு, இரவு வியர்வை மற்றும் அசாதாரண எடையிழப்பு

 

பட மூலம் – திப்ளூடைமென்ட்கேலரி.காம், மாக்ஸ்பிஸேல்.காம், பிக்ஸ்ஹியர்.காம், அக்யுவிடஅகுபங்சர்.காம், சிங்கள்கேர்ஹெச்ஆர்ஸீ.காம், பப்ளிக்டொமைன்பிக்சர்ஸ்.நெட், பிஹெச்பிஏ.ஹெல்த்.மேரிலாண்ட்.கவ், பிஸ்யூவிஅன்கர்ட்.காம்

Nithya Lakshmi

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன