Search

Home / Kids Health Care Tips in Tamil / வளரும் குழந்தைகளுக்குத் தேவையான 5 புரதம் நிறைந்த சிற்றுணவுகள்

வளரும் குழந்தைகளுக்குத் தேவையான 5 புரதம் நிறைந்த சிற்றுணவுகள்

Nithya Lakshmi | ஜூலை 26, 2018

சுவையான தின்பண்டம் தின்பதால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி மற்றும் அவர்களது வயிறு நிறையும். ஆனால் அவை சரியான உணவா? தினசரி உணவில் தேவையான அளவு புரதச் சத்து அவர்களுக்குக் கிடைக்கிறதா? வளரும் குழந்தைகளுக்கு நோய்தொற்றுகளிடம் இருந்து விடுபட சரியான அளவு புரதமும் உயிர் சத்தும் உணவில் இருக்கவேண்டும்.

உங்கள் குழந்தை மறுக்காமல் உண்ண விரும்பும் சுவையான மற்றும் விரும்பக்கூடிய ஆறு சிற்றுணவுகள் இங்க குறிப்பிடப்பட்டுள்ளன.

 

1.முளைகட்டிய பயிறு சுண்டல்

ஆரோக்கியமான முளை தானியங்களை கொத்தமல்லி, வெங்காயம், மாங்காய் துண்டு, தக்காளி மற்றும் சில துளி எலுமிச்சைச் சாறு கலப்பதன் மூலம், புரதம் நிறைந்த முளை தானியங்கள் நாவில் நீர் சொட்டும் சிற்றுணவாக மாறி குழந்தைகளை ஈர்க்கும். பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் உண்ண சிறந்த உணவு முளை தானியங்கள் ஆகும்.

விரிவான செய்முறைக்கு இங்கே அழுத்தவும்– http://www.betterbutter.in/recipe/3424/sprout-bhel

 

2.வால்நட் மஃபின்

ஒமேகா 3 அமிலச் சத்து நிறைந்த வால்நட் மூளை மற்றும் எலும்பை வலுப்படுத்த உதவும். அழற்சி நோய்களை எதிர்க்க வால்நட் உதவுகின்றது. மசித்த வாழைப்பழம், வால்நட்கள், சமையல் சோடா, சர்க்கரை மற்றும் சிறிது வெண்ணிலா சேர்த்து செய்தால், இதுவே உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க சிறந்த சிற்றுணவு.

விரிவான செய்முறைக்கு இங்கே அழுத்தவும்- http://www.betterbutter.in/recipe/5213/banana-and-walnut-muffins

 

3.மசாலாக் கடலை

புரதச் சத்து நிறைந்த நிலக்கடலை நல்ல கொழுப்பை அதிகரித்து நோய்தொற்றுகளை எதிர்த்து சருமத்தைப் பராமரிக்கும். இத்தனை நன்மைகளுடன் உள்ள இந்த புரதம் நிறைந்த சிற்றுணவைத் தயாரிக்க இருபது நிமிடங்கள் போதும். மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு அரிசி மாவு சேர்த்து மைக்ரோவேவ் அடுப்பில் மெலிதாக வறுக்கவும். சுவைக்காக புதினா இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். 

விரிவான செய்முறைக்கு இங்கே அழுத்தவும்- http://www.betterbutter.in/recipe/4506/instant-masala-peanuts

4.பசலை பக்கோடா

பொதுவாக பசலைக் கீரையை உண்பதற்கு குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். சத்து மிகுந்த இந்த கீரையை உண்ண வைக்க தாய்மார்கள் பெரிதும் சிரமப் படுவர். வைட்டமின் A , வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பசலைக் கீரை வளரும் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டிய ஒரு கீரை ஆகும். அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், அறிந்த வெங்காயமுடன் இந்த சிற்றுணவைத் தயாரிக்க இருபது நிமிடங்கள் போதும். மிக எளிதாய் செய்யக் கூடிய சுவை மிக்க உணவு இதுவே ஆகும்.

விரிவான செய்முறைக்கு இங்கே அழுத்தவும்- http://www.betterbutter.in/recipe/3036/palak-pakoda-spinach-fritters

5.க்ரானோலா பட்டை

ஆரோக்கியமான கொட்டைகளான பாதாம், உலர் திராட்சை மற்றும் வால்நட்கல் நிறைந்தது க்ரானோலா பட்டைகள் ஆகும். இதில் உள்ள இலவங்கப் பட்டை மற்றும் ஆளிவிதைகள் உங்கள் குழந்தைகளை நீண்ட நேரத்திற்கு சுறு சுறுப்புடன் வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி முடிந்து சாப்பிட சிறந்த உணவான இந்த க்ரானோலா பட்டைகள், குழந்தைகளுக்கு சுவை மிக்க ஆரோக்கிய உணவாகவும் விளங்குகிறது.

விரிவான செய்முறைக்கு இங்கே அழுத்தவும்- http://www.betterbutter.in/recipe/5196/healthy-granola-bars-sugar-free-gluten-free-oil-free

Nithya Lakshmi

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன