Search

HOME / நீங்கள் தவிர்க்க வேண்டிய ஐந்து நச்சு உணவுகள்

நீங்கள் தவிர்க்க வேண்டிய ஐந்து நச்சு உணவுகள்

Nithya Lakshmi | நவம்பர் 19, 2018

நீங்கள் தவிர்க்க வேண்டிய ஐந்து நச்சு உணவுகள்

நம் அன்றாட வாழ்க்கைக்கு உணவு இன்றியமையாத ஒரு பகுதியாகும். எனினும், சில நேரங்களில், நாம் உட்கொள்ளும் உணவு நம் உடலுக்கு பயன்தருவதைவிட அதிகம் சேதம்விளைவிப்பதாக இருக்கிறது.

உங்கள் வழக்கமான, தினசரி உணவில் நிச்சயமாக நச்சு பொருட்கள் மறைந்து இருக்கிறது அது நல்லதை விட அதிக தீங்கு தரும்.

பெட்டர்பட்டர் நீங்கள் விலகி இருக்கவேண்டிய ஐந்து நச்சு உணவுகளைப் பற்றி உங்களுக்கு கூறுகிறது.

 

1) செயற்கை உணவு நிறங்கள்/சாயங்கள்

அந்த பிரகாசமான, உங்கள் விருப்பமான மாவுப்பண்ட கடைகளின் ஜன்னல்களில் வண்ணமயமான கேக்குகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அந்த அழகான, வானவில்-நிறம் கொண்ட உணவுகளே உலகளவில் இயங்குகிறது? அவை மிகவும் அழகாகத் தெரிகிறது, இல்லையா? ஆனால் அந்த உணவுகள் அசல் மாவில் ஒரு சிறு துளிகள் வண்ணம் சேர்த்து தயார் செய்யப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தமாதிரியான உணவு வண்ணங்கள் மற்றும் சாயங்கள் மூலம்தான் உண்மையில் நம் உடலுக்குள் தீங்கு செய்யும் நச்சு வந்து நுழைகிறது. இந்த நிறங்களில் சிலவற்றை எப்டிஏ ஏற்றுக்கொண்டாலும், அவை இன்னும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கு மிகவும் தீங்கானது. கேக்குகள், பாஸ்ட்ரிஸ் மற்றும் இந்த விஷயத்தில் கறிகள் மூலம்கூட, இந்த வண்ணங்களை நுகர்வது, உண்மையில் உங்களை கேன்சர் பாதிப்புக்குள்ளாக்கும். இந்த செயற்கை நிறங்கள் பல்வேறு நரம்பியல் கோளாறுகளுடனும் இணைக்கப்பட்டது, அது உங்கள் மூளையையும் மற்றும் உங்கள் நரம்பு மண்டலத்தையும் மோசமாக பாதிக்கக்கூடும். அதனால் எதை வாங்குவதற்கு முன்னும், பொட்டலம் அல்லது பாட்டில் பின் பட்டியலிட்ட பொருட்களை எப்போதும் பார்க்க ஒரு முக்கிய முனைப்பாக மேற்கொள்ளுங்கள்.

 

2) அதிகப்படியான உப்பு

எந்த பதார்த்தமும், எந்த நாட்டில் இருந்து அது வந்தாலும், உப்பில்லாமல் செய்ய முடியாது. எந்த பதார்த்தமும் ஒரு ‘சிட்டிகை உப்பு’ சேர்க்காமல் முழுமை அடைவதில்லை ஏன்னெனில் உப்பு ஒவ்வொரு உணவுவகைக்கும் அது சுவையை கூட்டுகிறது. எனினும், மிக அதிகமான உப்பு உங்களுக்கு மிகவும் தீங்காகும். வழக்கமாக அதிகப்படியாக உப்பை நுகர்வது, அதிக இரத்த அழுத்தம், சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகள் மற்றும் இதய பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

3) பூச்சிக்கொல்லிகள்

இந்தியா ஒரு அதிக மக்கள் தொகை கொண்ட நாடு மற்றும் அனைவரும் உயிர்வாழ உணவு உண்பது அவசியம். இந்த வளரும் தேவையை சந்திக்க அடிப்படை உணவான பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள், ஆகிய இந்த உணவு பொருட்களை வளர்க்க விவசாயிகள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். இந்த உணவு பொருட்களை அறுவடை செய்து சந்தைக்கு அனுப்பும்போது, பூச்சிக்கொல்லியின் மிச்சங்கள் பெரும்பாலும் இந்த உணவு பொருட்களில் பின்தங்கிவிடும். இந்த தீங்கான மற்றும் நச்சு கொண்ட பூச்சிக்கொல்லிகள் அனைத்திற்கும் இணைக்கப்பட்டது-அது கேன்சராகவோ அல்லது பிறப்பில் குறைபாடுகள் கொண்டதாகவோ. இந்த பூச்சிக்கொல்லிகளை விழுங்குவதில் இருந்து உங்கள் குடும்பத்தையும் மற்றும் உங்களையும் பாதுகாக்க, பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்துவதற்கு முன் எல்லாவற்றையும் முற்றிலும் ஒழுங்காக கழுவி பயன்படுத்தவும்.

4) சோடியம் நைட்ரேட்

சோடியம் நைட்ரேட் உணவுகளை பதப்படுத்த பிரதானமாக பயன்படுகிறது. அது மிக அதிகமாக சிற்றுண்டிகளிலும் மற்றும் சுவையான உணவான சிப்ஸ் மற்றும் பதப்படுத்திய இறைச்சி ஆகியவற்றில் பயன்படுத்துகிறார்கள். சோடியம் நைட்ரேட் உணவை பதன்படுத்தவும் மற்றும் அதன் உயிர்தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது. எனினும், சோடியம் நைட்ரேட் கான்சருக்கு தொடர்புடைய மற்றொரு நச்சு உணவு. இந்த பதப்படுத்தும் பொருள் கொண்ட உணவை வழக்கமாக நுகர்வதால் கேன்சர் மற்றும் நீரழிவு போன்ற ஆரோக்கியம் சம்மந்தமான பிரச்சனை தொகுப்புகளுக்கு வழிவகுக்கும். இந்த தீங்கான நச்சில் இருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாக்க, எப்பொழுதும் பொட்டலம் அல்லது பாட்டில் பின் பட்டியலிட்ட பொருட்களை படிக்கவும்.

 

5) பூஜ்ய கலோரி சக்கரை

பூஜ்ய கலோரி சக்கரைதான் உணவு தொழிலில் மிகப்பெரிய ஊழல்! செயற்கை சுவையூட்டிகள் மற்றும் பூஜ்ய கலோரி சக்கரைகள்  சாக்கரின் மற்றும் அஸ்பார்டேம் கொண்டது. இந்த செயற்கை சுவையூட்டிகள்தான் கீல்வாததிற்கும்(அதிரடிஸ்) வயிறு சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் காரணம். சில மக்கள் பூஜ்ய கலோரி சக்கரை எடுப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது மற்றும் அது உடல் எடையை குறைக்க உதவும், என்று நினைக்கிறார்கள், எனினும், இது எல்லாம் வெறும் கட்டுக்கதை. உண்மையில், இந்த சக்கரையை நுகர்வதால் உங்கள் எடை குறைவதற்கு பதில் கூடும்.

இந்த நச்சு உணவுகளை ஒரு குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள், மற்றும் எப்போதும் உங்கள் உள்ளூர் சந்தையில் எந்த உணவு பொருட்களை வாங்குவதற்கு முன்னும் இரண்டு முறை சிந்தியுங்கள்.

ஆதாரங்கள்: CNBC.com, Mindbodygreen, Onlymyhealth, Pixabay, Tesco Real Food, The Heart Foundation.