Search

HOME / உங்கள் பசியை கட்டுப்படுத்தும் உணவுகள்

உங்கள் பசியை கட்டுப்படுத்தும் உணவுகள்

Nithya Lakshmi | நவம்பர் 19, 2018

உங்கள் பசியை கட்டுப்படுத்தும் உணவுகள்

உங்கள் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்களா?

அல்லது நீங்கள் அந்த பட்டினி வேதனையை அடக்க முயற்சிக்கிறீர்களா?

அல்லது நீங்கள் ஆரோக்கியமான விருப்பங்களைத் தேர்வுசெய்து  பொருத்தமாக நீங்கள் இருக்க முயற்சி செய்கிறீர்களா?

உங்கள் காரணம் எதுவாக இருந்தாலும், உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கும் உணவைத் தேர்வு செய்வதால்  உதவுகிறது. தொகுதி-நிறை உணவுகளை தேர்ந்தெடுப்பது தான் தந்திரம். அதிக காற்று, தண்ணீர், புரதம்(ப்ரோடீன்) அல்லது நார்ச்சத்து கொண்டதே தொகுதி-நிறை உணவுகள். இவற்றில் கலோரிகள் குறைவாக இருக்கும் மற்றும் நுகரும்போது, அவை வயிற்றை நீட்டிக்கும். அது மெதுவாக வயிற்றை விட்டு விலகும், ஒருவரை முழுமையாக உணரச் செய்யும்.

உங்கள் உடல் பயிற்சி இலக்குகளை அடைய நீங்கள் தேர்வு செய்ய இங்கே சில தொகுதி-நிறை உணவுகளின் பட்டியல்-

1) ப்ரோக்கோலி

(Source: https://www.pexels.com/photo/agriculture-broccoli-close-up-close-up-399629/)

ப்ரோக்கோலியில் கலோரிகள் மிக குறைவாக இருக்கிறது மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மிகவும் அதிகமாக நிறைந்திருக்கிறது. இதனால் தான் ஒவ்வொரு ஊட்டச்சத்து நிபுணரும் இந்த காய்கறியை பரிந்துரைக்கிறார்கள். ஒரு கிண்ணம் ப்ரோக்கோலியில் வெறும் 31 கலோரிகள், 2.5 கிராம் புரதம்(ப்ரோடீன்) மற்றும் 2.4 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. அது வயிறை விரைவாக நிறைக்கும் மற்றும் காயின் அமைப்பும் ருசியும் மிக அதிகமாக உட்கொள்வதை தடுக்கிறது.

2) ஆளி விதைகள்(பிளாக்ஸ் விதைகள்)

(Source: https://www.flickr.com/photos/alishav/3462218206)

ஆளி விதைகளில் நார்ச்சத்து, புரதம்(ப்ரோடீன்) மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கிறது. அது வயிற்றில் அதிக இடத்தை எடுக்காததால், ஒரு நபரை நீண்ட நேரம் நிறைவாக கனமாக உணராமல் வைக்கிறது.

3) நீர் இருத்த தயிர்(கிரீக் யோகர்ட்)

(Source: https://c1.staticflickr.com/8/7418/16426695981_026d1d7a2a_b.jpg)

நீர் இருத்த தயிரில்(கிரீக் யோகர்ட்) ஒரு அழுத்தமான, கிரீம் மற்றும் அமைப்புடன் சிறந்து இருப்பது உங்களை நீண்ட நேரம் நிறைவாக உணரச் செய்யும். ஒருவர் தயிருடன் பழங்களும் கொட்டைகளும்(நட்ஸ்) சேர்த்தால் அது மிகவும் ஈர்கத்தக்கதாக இருக்கும். எந்தமாதிரியான சேர்க்கையும் தயிரின் அளவை கூட்டும், நுகர்வோருக்கு மனநிறைவை அதிகரிக்கும்.

4) தண்ணீர்

(Source: https://libreshot.com/wp-content/uploads/2016/05/water-flows-glass.jpg)

ஏராளமான நபர்கள் பசிக்கான தாகத்தை தவறாக புரிந்து கொள்கிறார்கள். அதனால் அடுத்தமுறை நீங்கள் பசியாக உணர்ந்தால், ஒரு குவளை தண்ணீர் குடிக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு தாகமாக இருந்திருந்தால், தண்ணீர் உங்களை திருப்தி செய்யும், சாப்பிட வலியுறுத்துவதை கட்டுப்படுத்தும். மாறாக, உண்மையில் நீங்கள் பசியாக இருந்தால், பத்து நிமிடங்களில் அந்த வேதனை திரும்ப வரும் மேலும் நீங்கள் ஏதாவது ஆரோக்கியமானதை உங்களால் உண்ண முடியும்.

 

5) ஓட்ஸ்(ஓட்மீல்)

(Source: https://cdn.pixabay.com/photo/2016/08/09/11/13/breakfast-1580328_960_720.jpg)

ஓட்மீல் பீட்டா-குலுக்கன்ஸ், ஒரு கரையும் நார்ச்சத்து வகையில் இருப்பதால் தடிமனாக, ஒட்டும் அமைப்பை விளைவிக்கும்.  நார்ச்சத்தானது, வயிற்றில் இருந்து மெதுவாக விலகும். பித்தநீர் பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றுவதால் கொழுப்பு அளவுகளை குறைப்பதற்கான ஒரு ஆரோக்கியமான தேர்வு இது.

6) பாலாடைக்கட்டி(காட்டேஜ் சீஸ்)

(Source:https://commons.wikimedia.org/wiki/File:Homemade_Paneer_cottage_cheese_cut_into_cubes.JPG)

பாலாடைக்கட்டியில் கொழுப்பு குறைவாக இருக்கிறது மற்றும் ஒரு நல்ல கேசீன்க்கு ஆதாரமாகும், பசியை அடக்கும் ஒரு வகையான புரதம்(ப்ரோடீன்). அதன் சுவை இனிப்பு மற்றும் உப்பு ஆகிய சுவையுடன் பிரமாதமாக கலக்கும், அதனால் ஒருவருக்கு  பிடித்தவாரு அதை நுகர இடம் கொடுக்கிறது.

7) பாதாம்

(Source: https://pixabay.com/en/almonds-nuts-food-natural-brown-2111196/)

பாதாமில் புரதம்(ப்ரோடீன்கள்) மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் சிறப்பாக உள்ளது. அது செரிப்பதற்கு கொஞ்சம்  நேரம் எடுப்பதால், அதன் பசி-குறைக்கும் விளைவுகள் பிரதிபலிக்க நேரம் எடுக்கிறது. நீங்கள் உண்மையில் பசியாக இருக்கும்போது பாதாமை தேர்ந்தெடுங்கள் மற்றும் அளவுப் பகுதியை கவனமாக பார்க்கவும்.

8) சுண்டல்

(Source: https://commons.wikimedia.org/wiki/File:Ordinary_chickpeas_in_a_ceramic_bowl.jpg)

சுண்டல் புரதசத்திற்கு(ப்ரோடீன்களுக்கு) ஒரு சிறந்த ஆதாரமாகும். சுண்டலை வறுத்தோ அல்லது வேகவைத்தோ உண்பது, ஒரு சாலட், துணை உணவு(சைடிஸ்), முக்கிய உணவு(மெயின்டிஸ்)  அல்லது டிப்ஸ், ஆகியவற்றில் அவை அற்புதமான சிற்றுண்டியாக அல்லது உணவாக இருக்கும்.

9) பருப்பு வகைகள்

(Source:https://commons.wikimedia.org/wiki/File:CSIRO_ScienceImage_3224_Pulses_and_legumes.jpg)

பருப்பு வகைகள் அல்லது பருப்புகள் சிக்கலான மாவுச்சத்து மற்றும் புரதங்களுக்கு(ப்ரோடீன்ஸ்) சிறந்த ஆதாரமாகும். சிக்கலான  மாவுச்சத்தை நம் உடல் செரிக்க முடியாததால், இந்த உணவுக்குழு செரிக்கும் முறையை மெதுவாக்கி மற்றும் உடலை விட்டு நீங்க நீண்ட நேரம் எடுக்கிறது.  

மேலும், பருப்பு வகைகள் ஒரு ஹார்மோன் விடுவிக்கும் அது செரிக்கும் முறையை குறைக்கும், அதன்மூலம் நீண்டநேரம் நம்மை முழுமையாக உணர வைக்கும்.

ஒருவர் உண்ணும் உணவின் அளவை கட்டுப்படுத்துவதால் ஒரு வகையில் அவரை பழைய நிலைக்கு அதிகம் சாப்பிட வழிவகுக்கும். மாறாக, சின்ன தட்டுகளும் பெரிய முள்கத்தியை பயன்படுத்தி, சரியான உணவை தேர்ந்தெடுத்தால், மற்றும்  ஒருவருடைய பசி விருப்பத்தை அவர்களாகவே காண்பது அவரின் பசியை வெற்றிகரமாக அடக்கும், அந்த பசி வேதனையை வெற்றிகரமாக கட்டுக்குள் வைக்கும்!