குளிர்காலங்களில் எடையை பராமரிக்க உதவும் குறிப்புகள்

Spread the love

குளிர்காலம் தொடங்கியவுடன், அதிகம் சாப்பிடும் மனப்பான்மை துவங்குகிறது. எல்லா நேரமும் ஒருவர் ஏதாவது மென்று கொண்டிருக்க விரும்புகிறார், மேலும் இந்த அடங்கா விருப்பத்தினால், எடை கூடுவது எளிதாகிறது. கவலைப்படாதீர்கள்! உங்கள் குளிர்கால எடையை கவனிக்க உங்களுக்கு உதவுவதற்காகவும் மற்றும் உங்களையும் உங்கள் வயிறையும் சந்தோசமாக வைக்க  சில தனிப்பட்ட குறிப்புகளை நாங்கள் உங்களுக்காக வைத்திருக்கிறோம்!

1) காலை உணவை ஆரோக்கியமானதாக செய்யுங்கள்

பராத்தாக்கள் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் விருப்பமான காலை உணவாக இருக்கிறது, ஆனால் உங்கள் வயிற்றிற்காக இந்த தேர்வை நீங்கள் விட வேண்டும் மேலும் இந்த ஆரோக்கியமான காலை உணவு தேர்வுகளை பின்பற்றுங்கள்:

  • வேகவைத்த இட்லி
  • வேகவைத்த டோக்ளா
  • அவல் போன்றவை.

2) சாலட்களுக்கு பதிலாக சூப் ஸ்டார்டராக இருக்கட்டும்

நீங்கள் ஒரு பனிமூட்டமான மாலையில் வீட்டிற்கு வந்தால் மேலும் சூடான பகோடா(பகோராஸ்) சாப்பிட கிடைத்தால், பின் கண்டிப்பாக ஒருவரை சாப்பிடத் தூண்டும். ஆனால் அங்கே ஒரு ஆரோக்கியமான ஸ்டார்டர் இருந்தால், அது கண்டிப்பாக சூப் தான். சூப் உங்கள் வயிறை முழுமையாக உணரவைக்கும் மற்றும் நீங்கள் வழக்கமாக சாப்பிடுவதை விட குறைவாக உண்பீர்கள், எனினும் மாலையில் ஏழு மணிதான் சூப் அருந்த சரியான நேரம். காய்கறி சூப், தக்காளி சூப், காளான் சூப், கேரட் சூப்…இவ்வாறு சூப்பை தேர்வு செய்ய எந்த பற்றாக்குறையும் இல்லை!

3) வீட்டில் செய்த இனிப்புகளையே உண்ணுங்கள்

குளிர்காலங்களில் இனிப்புகளை அடியோடு விட்டுவிடுவது எந்த ஒரு பாவமும் இல்லை. நீங்கள் இனிப்புகள் உண்ண விரும்பினால், பிறகு வெளியில் இருக்கும் இனிப்புகளை விட வீட்டில் செய்த  அல்வாவை சாப்பிடுங்கள் வீட்டில் இனிப்புகளை செய்யும்போது எல்லாமே உங்கள் கையில் இருக்கிறது- எவ்வளவு நெய் சேர்ப்பது, எவ்வளவு இனிப்பு பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தாது கூட. இரும்புசத்துமிக்க வெல்லம் குளிர்காலங்களில் உங்கள் உடலை வெதுவெதுப்பாக வைக்க உதவும் ஒரு நல்ல தேர்வு.

4) வெளியில் உண்பதற்கு பதிலாக வீட்டிற்கே விநியோகிக்க ஆடர் செய்யுங்கள்

இப்போது இதன் பயன் என்ன என்று நீங்கள் வியப்படைவீர்கள்? நன்மை என்னவென்றால் ஒரு மணிநேரம் சாப்பிடும் முன்னரே ஆர்டர் செய்வதால், நீங்கள் குறைவாக உண்ண  முனைவீர்கள். ஆனால் உணவகத்தில், உணவு பரிமாறியவுடன், நீங்கள் உங்களை அறியாமல் அதிகம் உண்ண முனைவீர்கள். உணவகத்தில் கூடுதலாக நீங்கள் நிறைய ஆர்டர் செய்ய வழியிருக்கிறது ஆனால் வீட்டில் உண்ணும் போது, நீங்கள் மறு முறை ஆர்டர் செய்ய மாட்டீர்கள்!

5) சிறந்த உடற்பயிற்சி பரிசு நடனத்திற்கே செல்கிறது

ஜிம்மிற்கு செல்லவோ அல்லது யோகா செய்யவோ சாத்தியமில்லை என்று நிறைய பேர் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள், ஆனால் நடனம் ஒரு வகையான உடற் பயிற்சி அதை யார் வேண்டுமானாலும் எளிதில் செய்யலாம். தினமும் ஒரு அரைமணி நேரம் உங்களால் உங்கள் விருப்பமான பாட்டிற்கு நடனம் ஆட நேரம் ஒதுக்க முடிந்தால் பின் உங்கள் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும்.

6) குறைவான மாவுச்சத்து(கார்ப்ஸ்), நிறைய புரதச்சத்து

மதிப்பில்லா உணவு மற்றும் குளிர்பானங்களில் மாவுச்சத்து(கார்ப்ஸ்) இருக்கிறது அது உங்கள் எடையை அதிகரிக்கும் ஆனால் எல்லா பருப்புகளும், சுண்டல், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது, மற்றும் குளிர்காலங்களில் அவற்றை நுகர்வது பயன்தரும்.  

 

7) வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் க்ரீன் டீ

குளிர்காலங்களில் எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரும் க்ரீன் டீ குடித்துக்கொண்டே இருங்கள் ஏன்னெனில் அது உங்கள் எடையை சரிபார்க்க உதவுகின்றது மற்றும் உங்கள் உடலை ஆரோக்கியமாகவும் வைக்கிறது. மற்றொரு பயன் என்னவென்றால் நீங்கள் குறைவாக தேநீரும் காபியும் அருந்த முனைவீர்கள்.

படத்தின் ஆதாரம்: யூடுயூப், யூனிலீவர் புட் சொல்யுசன்ஸ் யூகே, மஞ்சுளாஸ் கிச்சன், ஹெல்த்திவுமன், ஸ்டைல்கிரேஸ், ஆர்டெர்ஸ்2மீ, எம்எஸ்என்.காம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன