Search

Home / Uncategorized / உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி உங்கள் முடி என்ன சொல்கிறது?

உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி உங்கள் முடி என்ன சொல்கிறது?

Nithya Lakshmi | நவம்பர் 2, 2018

நல்ல முடியின் முக்கியத்துவத்தை தீர்மானிக்கும் உண்மை என்னவென்றால் நீண்ட, மின்னும் கூந்தல்கள் உங்கள் தனித்தன்மையை ஒளிரச் செய்யும் மேலும் உங்களை இளமையாக காண்பிக்க வைக்கும். மேலும், உங்கள் முடி உங்கள் ஆரோக்கியத்தின் கண்ணாடி, மற்றும் உங்கள் முடி மெல்லியதானால் அல்லது அதிகப்படியாக வறண்டு போனால், அதுவும் பல்வேறு ஆரோக்கிய குறைபாட்டிற்கான ஒரு அறிகுறியே ஆகும். டாக்டர். கிரண் லோஹியா, லூமியர் தோலியல்(டெர்மடோலஜி) மருத்துவ இயக்குனரின்படி, “உங்கள் முடிக்கும் ஆரோக்கியத்திற்கும் மிக நெருங்கிய சம்மந்தம் இருக்கிறது, அதனால் நீங்கள் ஏதாவது முடி பிரச்சனைகளினால் போராடினால் உண்மையான காரணத்தை தெரிந்து கொள்வது முக்கியம் மற்றும் எந்த தாமதமும் இல்லாமல் தகுந்த தீர்வை கண்டுபிடிக்க வேண்டும்”.

 

1) முடி உதிர்தல்

ஒரு நாளில் 100 முடி விழுவது சாதாரணமாக கருதப்படுகிறது, ஆனால் அதிகமாக முடி உதிர்தல் இருந்தால் மற்றும் உங்கள் முடி கொத்து கொத்தாக விழுந்தால் மேலும் உங்கள் தூரிகையில்  இருந்தால் மற்றும் தரையில் தெரிந்தால், பிறகு அது ஒரு கவலைக்குரிய விஷயம். அடிக்கடி முடி உதிர்வது உங்கள் உடலில் இரும்புச் சத்து அடிக்கடி குறைவதைக்குறிக்கிறது. உங்கள் உடம்பில் குறைவாக இரும்பு சத்து இருந்தால், உங்கள் சிவப்பு இரத்த அணு(ஹீமோகுளோபின்) வழக்கமாக இருந்தால் கூட, நீங்கள் முடி உதிர்தலால் பாதிக்கப் படுவீர்கள். இதனோடு, முடி மெல்லியதாவதற்கும் விழுவதற்கும் புரதச்சத்து(ப்ரோடீன்) குறைபாடு காரணமாகும்.

2) முடி மெல்லியதாகுதல்

முடி மெல்லியதாகும் பிரச்சனை பல உடல் குறைபாடுகளை காண்பித்து பின்னர் சில வேறு ஆரோக்கியம் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மெல்லிய முடி பல காரணங்களால் இருக்கலாம், இதில் அடங்குவது பல வகையான முடி சிகுச்சைகள்,  ஆரோக்கியமற்ற உண்ணும் பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் சினைப்பைக் கட்டிகள்(பி.சி.ஓ.எஸ்) போன்ற புலங்களின் (ஹார்மோனல்) பிரச்சனைகள். “இது ஒரு பரம்பரை பிரச்சனையாக இருக்கலாம் மேலும் முதுமைகூட ஒரு காரணமாகலாம். இது ஒரு மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யலாம் மற்றும் பிஆர்பி(பிலேலெட் என்ரிச்ட் பிளாஸ்மா) சிகுச்சை மூலம் சரியான முறையில் செய்து கொள்ளலாம்”, என்று டாக்டர். லோஹியா கூறுகிறார்.

3) பிசுபிசுப்பான மற்றும் அரிக்கும் உச்சந்தலை

உச்சந்தலையின் அரிப்பு பார்க்க மட்டும் மோசமாக இல்லை ஆனால் சில தீவிர பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாகிறது. உச்சந்தலை அரிப்பு உச்சந்தலை குறைந்த சரும அளவுகளின் ஒரு அறிகுறி. அது இரும்புசத்து குறைவினால் கூட இருக்கும் என்றும்; சில விஷயங்களில் சிரங்கு அல்லது காளாஞ்சகப்படை(ஸோரியாசிஸ்) போன்ற தோல் வியாதிகளால்கூட இருக்கலாம், பொதுவான காரணங்கள் மன அழுத்தம், தலைசுற்று அல்லது ஒவ்வாமைகள், மேலும் முடி பராமரிப்பு பொருட்களில் உள்ள சில இரசாயனங்கள் என்று டாக்டர். கிரண் கூறுகிறார்.

 

4) பிளவுபட்ட நுனிகள் (ஸ்பிளிட் எண்ட்ஸ்)

உங்கள் முடியின் அடி இரண்டாக பிளவுபட்டால், அது நிச்சயமாக ஆபத்தானது. இதற்கு முக்கிய காரணம் கேரட்டின் குறைபாடு. இதைத் தவிர முடியை அழுத்தும்போது, ஊதி காயவைக்கும் போது அல்லது அழகுபடுத்தும்போது(ஸ்டைலிங்) பாதுகாக்க ஒரு பொருத்தமான பொருளை பயன்படுத்தாவிட்டால், இது நடக்ககூட வாய்ப்பாகும், அதனால் முடி இறந்தும் அழுதம்மடைந்தும்  விடுகிறது. அந்தமாதிரியான சிகுச்சைகள் முடிக்கு ஒரு அதிர்ச்சியாக வேலைசெய்கிறது, முடி முருக்கவும் உடையவும் காரணமாகிறது.

 

5) முதிர்ச்சிக்கு முன் முடி நரைத்தல்

முதிர்விற்கு முன் முடி நரைத்தல் அறிகுறிகளை முடியில் தென்பட்டால், அதாவது நேரத்திற்கு முன்பே(இளம் வயதிலேயே) முடி வெள்ளையாக ஆரம்பித்தால், அது உடலில் மெலனின் குறைபாட்டை காண்பிக்கிறது. என்றாலும் அது நாற்பது வயதுகளில் பரம்பரையாக இருக்கலாம், ஆனால் நீங்கள் முப்பத்தி ஐந்து வயதிற்கு குறைவாக இருந்தால் மற்றும் உங்கள் முடி வெள்ளையாக ஆரம்பித்தால் பிறகு அது வைட்டமின் பி குறைபாட்டின் அறிகுறி அல்லது தைராய்ட் சுரப்பியின் முறையற்றதாகும்.

6) மந்தமான மற்றும் உயிரற்ற முடி

உங்கள் முடி மந்தமாகத் துவங்கினால் மற்றும் அதன் இயற்கையான பொலிவை இழந்தால் பிறகு நீங்கள் உங்கள் புலங்களை(ஹோர்மோன்ஸ்) சரிபார்க்க வேண்டும். முடியுடன் பயன்படுத்திய பொருட்களுடன், அதை கழுவும் தண்ணீரின் தன்மைகூட, அவற்றை சேதம் செய்யும். அதனால் அதை சரிபார்க்கவும் மற்றும் அது கடினமாக இருந்தால், அதை சரிசெய்த பிறகே பயன்படுத்துங்கள் மற்றும் முடியை சுத்தம் செய்ய ஏற்றதாகும்.

வரட்சியை தவிர, முடி மந்தமாகவும் உயிரற்றும் தெரிந்தால், நீங்கள் மிக அதிகமாக நொறுக்கு தீனி உணவு உண்கிறீர்களா மற்றும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்கிறதா என்று சரிபார்க்கவும்.

இதை சரி செய்ய, நிறைய காய்கறிகள், பழங்கள் மற்றும் உங்கள் உணவில் புரதச்சத்து(ப்ரோடீன்) சேர்த்துக்கொள்வது முக்கியம், மேலும் உங்கள் இயக்கத்தில் சுத்திகரிக்கப்பட்ட சக்கரை அல்லது மாவு போன்ற கார்டிசோல் அளவை அதிகரிக்கும் உணவுகளில் இருந்து விலகி இருங்கள். ஷாம்பூ போடுவதால் மற்றும் சூரியனின் புறஊதாக் கதிர்களால்(யூவி), கேரட்டின் பழுதாகக்கூடும். சிலிக்கன் அல்லது பாராபின் பொருட்கள், ஷாம்புகள் அல்லது கண்டிஷ்னர்கள் ஆகியவற்றில் இருந்து விலகி இருங்கள். மேலும், பொடுகை குறைக்கும்(ஆன்டி-டான்டிரப்) அல்லது கனமாக்கும் ஷாம்பூகளை தேவைக்கு அதிகமாக பயன்படுத்தாதீர்கள் ஏன்னெனில் உங்கள் முடியில் இருக்கும் இயற்கையான கேரட்டினை குறைக்கும் தனிமங்கள் இருக்கிறது.

நீங்களும் மேலே சொன்ன ஏதாவது பிரச்சனைகளில் சிரமப்பட்டால், ஒரு நல்ல ட்ரைகோலோஜிஸ்டை சந்திக்கவும் மேலும் அடிப்படை காரணத்தை கண்டுபிடித்து உங்கள் வாழ்க்கையில் மற்றும் உணவில் உடனடி மாற்றங்களை செய்யுங்கள். நீண்ட நாட்களாக  பார்த்ததில், சில சமயங்களில் மருத்துவ சிகிச்சையால்கூட முடி இழப்பை ஈடு செய்ய முடியாது.

 

படத்தின் ஆதாரங்கள்: பிக்ஸாபே, விக்கிபீடியா, பிலிக்கர், மேக்ஸ்பிக்செல், லாமோடிசெஸ்ட்வொஸ்

Nithya Lakshmi

BLOG TAGS

Uncategorized

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன