பெண்களுக்கு ஏன் பாப் ஸ்மியர் சோதனை அவசியம்?

Spread the love

கருப்பை வாயில் உள்ள அணுக்கள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் பொழுது கருப்பை வாய் புற்று நோய் ஏற்படுகிறது. இது பொதுவாக ஐம்பது வயதிற்கும் மேற்பட்ட பெண்களிடம் கண்டறியப்படுகிறது. இவ்வகை புற்றுநோய் பெண்களிடையே இப்பொழுது பெரிதும் காணப்படுகிறது. இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே பாப் ஸ்மியர் சோதனையின் மூலம் கண்டறியலாம்.

கருப்பை

கருப்பை வாய்

புற்றுநோய்

யோனி

 

கருப்பை வாய் புற்றுநோயின் காரணிகள்:

 1. பரம்பரை நோய்
 2. அதீத உடல் எடை
 3. குறிப்பிட்ட காலத்திற்கும் முன்பே மாதவிடாய் ஆரம்பித்தல்
 4. காலம் தாண்டி மாதவிடாய் நின்றல்
 5. புகை பிடித்தல்
 6. உயர் ரத்த அழுத்தம் அல்லது உயர் சர்க்கரை
 7. சுரப்பிகளின் மாற்றம்

பொதுவாக, புற்றுநோயை குணப்படுத்துதல் மிகக் கடினம். ஆனால் புற்றுநோயைத் தவிர்க்க பல சோதனைகள் உண்டு. அவற்றுள் ஒன்று தான் பாப் ஸ்மியர் சோதனை.

 

பாப் ஸ்மியர் சோதனை என்றால் என்ன?

பெண்கள் பாப் ஸ்மியர் சோதனை செய்து கொள்வது மிக அவசியம். இந்த சோதனையில் கருப்பை வாயில் உள்ள சில அணுக்கள் ஆராயப்படும். நுண்ணோக்கி மூலம் இந்த அணுக்கள் ஆராயப்படுவதால் ஏதேனும் அணுக்கள் புற்று நோய் அணுக்களாக மாறி உள்ளதா என்று துல்லியமாக அறியலாம். அவ்வாறு புற்று நோய் அணுக்களாக மாறி இருந்தால், எந்த நிலையில் புற்று நோய் உள்ளது என்பதையும் இந்த சோதனையில் அறிந்து கொள்ளலாம். இந்த சோதனையை மேற்கொள்ளும் முன் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

 

இந்த சோதனையை மேற்கொள்ளும் முன் மனதில் கொள்ள வேண்டிய கருத்துக்கள்:

 • மாதவிடாயின் பொது இந்த சோதனைக்குச் செல்லாதீர்கள்
 • யோனியில் ஏதேனும் நோய் தோற்று ஏற்பட்டு இருந்தால் இந்த சோதனைக்குச் செல்லாதீர்கள்
 • சோதனை எடுத்துக்கொள்ளும் 24 மணி நேரத்திற்குள் உடலுறவு கொள்ளாதீர்கள்
 • சோதனைக்குச் செல்லும் 24 மணி நேரத்திற்குள் எந்த கிரீமும் வெளிப்புறத்தில் போடாதீர்கள்
 • இந்த சோதனைக்கு செல்வதற்கு கருமுட்டை வெளியேறும் நாளில் செல்ல வேண்டும். அப்பொழுது தான் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டெரோன் சுரப்பிகளினால் கருப்பை வாய் மிகவும் மென்மையாகவும் திறந்தும் இருக்கும்.

 

எப்பொழுது இந்த சோதனையை எடுக்க வேண்டும்?

 • 21 வயதிற்கு முன்: இந்த சோதனை தேவை இல்லை
 • 21 முதல் 30 வயது வரை: இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு முறை
 • 30 முதல் 35 வயது வரை: 3 வருடத்திற்கு ஒரு முறை பாப் ஸ்மியர் சோதனை. ஹெச்பிவி பாப் 5 வருடத்திற்கு ஒரு முறை
 • 65 வயதிற்கு மேல்: இந்த சோதனை தேவை இல்லை

பாப் ஸ்மியர் சோதனையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை அழுத்தவும்:

பாப் ஸ்மியர் சோதனை முறையாக செய்யப்பட்டால் கருப்பை வாய் புற்றுநோயின் மூலம் ஏற்படும் இறப்பை பெரிதும் தவிர்க்கலாம். இந்த சோதனையை முறையாக செய்து கொண்டு கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்போம் என்று நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.

 

பட மூலம்: ஹெல்த்.மில், விக்கிமீடியா காமன்ஸ்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன