Search

Home / Women Health Tips in Tamil / கர்ப்பப்பை புற்றுநோயின் அலட்சியப்படுத்தக் கூடாத 5 அறிகுறிகள்

கர்ப்பப்பை புற்றுநோயின் அலட்சியப்படுத்தக் கூடாத 5 அறிகுறிகள்

Nithya Lakshmi | ஜூலை 30, 2018

இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களில் மிகவும் கொடுமையானது கர்ப்பப்பை புற்றுநோய் ஆகும். மிகவும் முற்றிய நிலை அடையும் வரை இந்த நோயின் அறிகுறிகளை அறிய முடிவதில்லை. புற்றுநோய் கட்டி நன்கு வளர்ந்து வெளியே தெரியும் வரை வளர்வதற்கு கர்ப்பப்பையில் இடம் இருக்கும் காரணத்தினால் இந்நோயை அறிவதில் கால தாமதம் ஏற்படுகிறது. உங்களது உடம்பில் ஏற்படும் சாதாரண மாற்றம் கூட கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கும் காரணத்தினால் சிறிய மாற்றத்தையும் அலட்சியப்படுத்தாதீர்கள். நீங்கள் கண்டிப்பாக அலட்சியப்படுத்தக் கூடாத கர்ப்பப்பை புற்றுநோயின் பொதுவான ஐந்து அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

 

1.நெஞ்செரிச்சல்

சரியான உணவுப்பழக்கம் இன்மை அல்லது மிதமிஞ்சிய குடிப்பழக்கம் ஆகிய காரணங்களினால் கூட நெஞ்செரிச்சல் ஏற்படலாம். மன உளைச்சலினால் கூட நெஞ்செரிச்சல் ஏற்படும். அனால் இந்த நெஞ்செரிச்சல் இரண்டாவது வாரத்திற்கும் தொடருமானால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். தொடர்ந்து நெஞ்செரிச்சல் இருக்குமாயின் அது கர்ப்பப்பை, வயிறு அல்லது தொண்டை புற்றுநோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்புண்டு ஏனெனில் இந்த புற்றுநோய்கள் உணவுக்குழாயின் அணுக்களை அழித்து விடும்.

 

2.பசியின்மை

சாதாரண அறிகுறியான பசியின்மை கூட புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். சிறிய அளவே சாப்பிட முடிதல், சிறிது சாப்பிட்டாலே வயிறு நிறைதல் அல்லது எதுவுமே சாப்பிட முடியாமை இவை அனைத்தும் கர்ப்பப்பையில் உள்ள கோளறைக் குறிக்கலாம். இவற்றுடன் உணவை விழுங்குவதில் சிரமம் அல்லது அடிவற்றில் அசௌகரியம் ஆகியவையும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

 

3.வயிறுவீங்குதல்

பெண்களுக்கு வயிறு வீங்குதல் ஒரு சாதாரண நிகழ்வு. இதனுடன் அடிவயிற்றில் வலி அல்லது அழுத்தம் ஏற்பட்டால் அது கவனிக்க வேண்டிய ஒன்று. கர்ப்பப்பை, வயிறு, குடல், கணையம் அல்லது மார்பு புற்றுநோய்களுக்கு ஒரு வாரத்திற்கும் மேல் வயிறு வீங்குதல் ஒரு பொதுவான அறிகுறியாகும்.

 

4.ஒழுங்கற்ற மாதவிடாய்

மாதவிடாய் ஒழுங்கற்ற முறையில் ஏற்பட்டால் – மிக சீக்கிரமாக அல்லது மிக தாமதமாக அல்லது ஒரு மாதத்தின் சுழற்சி வராவிடில் மருத்துவரிடம் சோதனை செய்து கொள்ள வேண்டும். மாதவிடாயின் பொது அதிக ரத்தப்போக்கு இருந்தாலோ அல்லது மாதவிடாய் முடிந்தும் கூட ரத்தப்போக்கு இருந்தாலோ அது கர்ப்பப்பை புற்றுநோயாக இருக்கலாம். மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து உடனடியாக சோதனை செய்து கொள்ள வேண்டும்.

 

5.கடுமையான அடிவயிற்று வலி

மாதவிடாயின் பொது அல்லது வயிற்றில் கோளாறு இருந்தாலோ அடிவயிற்றில் வலி வருவது இயல்பு. அனால் இந்த வலி மாதவிடாய் முடிந்தும் கூட வருமாயின் அது கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். கர்ப்பப்பை புற்றுநோய் வந்த பலர் அடிவயிற்றில் வீங்குதல் மற்றும் வலியுடன் வந்தவர்கள் தாம். முழு பரிசோதனை செய்வதின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

 

மேலே குறிப்பிடவற்றுள் ஏதேனும் அறிகுறி உங்களுக்கு இருந்தால் அதை அலட்சியப்படுத்தாமல், விரைவாக மருத்துவரை அணுகவும்.

பட மூலம் : பிக்ஸாபே, பிளிக்ர், விக்கிபீடியா கமோன்ஸ்

Nithya Lakshmi

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன