நல்லெண்ணையுடன் பொலிவான சருமம் பெற 6 வழிகள்!

Spread the love

எள், மனித குலம் அறிந்த பழமையான எண்ணெய்-வித்து பயிர், அழகு துறை மற்றும் அழகு சாதன பொருட்களில் முக்கிய இடம் வகிக்கிறது. பல மினரல்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்து, நல்லெண்ணெய் பல அழகு சாதன பொருட்களில் அடித்தளமாக அமைகிறது. குறைவாக மதிப்பிட படும் இந்த தடிமனான எண்ணெய்  உங்கள் சருமம் மற்றும் முடிக்கு பல ஆச்சர்யமிக்க செயல்கள் செய்யும்.

நல்லெண்ணையின் உபயோகமும் வழிமுறைகளும்:

 

1.ஈரப்பதம்

(Source: https://www.publicdomainpictures.net/pictures/70000/velka/sesame-seeds-and-glass-oil.jpg)

இயற்கையிலேயே தடிமனாக மற்றும் வழவழப்பாக  இருப்பதால்,நல்லெண்ணெய் சிறந்த ஈரப்பதமூட்டியாக இருக்கும். வைட்டமின் B கூட்டு, D மற்றும் E, கொழுப்பு அமிலங்கள் மற்றும் லினோலேயும் அமிலம் கொண்டு, இந்த எண்ணெய் தோலில் ஆழ்ந்த திசுக்களையும் அடைந்து அவற்றை ஈரப்படுத்தும். இது சருமத்தினுள் சென்று சேதமடைந்த அணுக்களை சரி செய்து ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

இந்த எண்ணெயை முகம் மற்றும் முழு உடம்பிற்கும் உபயோகிக்கலாம். இரவு முழுவதும் எண்ணெய் தேய்த்து விட்டு விடலாம் அல்லது காலையில் குளிப்பதற்கு முன் மசாஜ் செய்யலாம் அல்லது சூடான குளியலுக்கு பின் தேய்க்கலாம்.

 

2.சூரிய அடைப்பு

(Source: https://media.defense.gov/2011/Aug/06/2000231434/780/780/0/110806-F-JZ020-328.JPG)

நல்லெண்ணெய் தோலின் மேல் ஒரு மெல்லிய படலமாக இருந்து சூரியனின் கொடும் கதிர் வீச்சிலிருந்து தோலை பாதுகாக்கும். மேலும் தோலை கறுப்பாகும் உபரி ராடிக்கல்ஸ் மற்றும் ஒக்ஸிடேஷனிடம் இருந்து காக்கும்.

நல்லெண்ணையுடன் மற்ற முக்கிய எண்ணெய்களான லாவெண்டர், பட்டை இன்னும் பல கலந்தால் நல்ல பலன் கிடைக்கும். பொதுவாக ஒரு டீஸ்பூன் நல்லெண்ணையுடன் மூன்று சொட்டு வேறு எண்ணெய் கலக்கவும். சூரிய கதிரில் இருந்து பாதுகாக்க சிறந்த வழி கேரட் விதை எண்ணெயுடன் நல்லெண்ணெய் கலந்து உடலில் தேய்க்கவும்.

 

3.சுத்தகரித்தல்

(Source: https://cdn.pixabay.com/photo/2017/03/10/16/54/hand-massage-2133272_960_720.jpg)

நுண்ணுயிரி மற்றும் அழற்சியை அழிக்கும் ஆற்றல் கொண்ட நல்லெண்ணெய் சிறந்த சுத்திகரிப்பு பொருள் ஆகும். பருக்களை எதிர்ப்பதோடு,  அழுக்கு மற்றும் நச்சு பொருட்களை போக்கி, துவாரங்களை சுத்தம் செய்து, சருமத்தை மென்மையாக்கி மேலும் சருமத்தின் உபரி எண்ணெயை நீக்கவும் உதவும்.

நல்லெண்ணையுடன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து முகத்தில் தேய்க்கவும். சிறிது நேரம் அப்படியே விட்டு பிறகு இளம் சூடான நீரில் கழுவவும். இல்லாவிட்டால், இளம் சூடான நல்லெண்ணையை முகம் மற்றும் கழுத்தில் சுத்தும் முறையில் தேய்க்கவும். பத்து நிமிடம் அப்படியே  விடவும்.பருத்தி பந்தில் துடைத்து விட்டு உங்கள் வழக்கமான முகம் கழுவியில் முகத்தை கழுவவும்.

 

4.முதுமைக்கு எதிரான கிரீம்

(Source: https://images.pexels.com/photos/371109/pexels-photo-371109.jpeg?auto=compress&cs=tinysrgb&dpr=2&h=650&w=940)

நல்லெண்ணெயில் ஆன்டிஒக்ஸிடன்டஸ் இருக்கிறது அவை சுருக்கம் மற்றும் வரிகளை நீக்க உதவும். இது இயற்கையான முறையில் துவாரங்களை அடைக்கும், அப்படியே தோலை இறுக்கமாக்கும்.

நல்லெண்ணெயுடன் லாவெண்டர் எண்ணெய் கலந்து சுத்தும் முறையில் முகத்தில் தேய்க்கவும். இரவு முழுதும் விட்டு விடவும். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி பொலிவான சருமத்தைக் கொடுக்கும்.

 

5.ஸ்க்ரப்

(Source:https://upload.wikimedia.org/wikipedia/commons/1/19/Cosmetologist_applying_skincare_treatment.jpg)

ஸ்க்ரப் சருமத்தை சுத்தம் செய்யும், உடைதலை தடுக்கும், துவாரங்களின் அளவைக் குறைக்கும், உள்வளர்ந்த முடியை வெளியேற்றும் மற்றும் ஈரபதனி உள்ளே ஊடுருவ உதவும்.

சிறப்பான ஸ்க்ரப் செய்ய, நல்லெண்ணெய்யை முகத்தில் தடவவும். ஐந்து நிமிடம் கழித்து அரிசி மாவை போட்டு தேய்க்கவும். இளம் சூடான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். பத்து நிமிடம் கழித்து முகத்தில் குளிர்ந்த நீரை தெளிக்கவும்.

 

6.முகப் பூச்சு

(Source: https://images.pexels.com/photos/413880/pexels-photo-413880.jpeg?auto=compress&cs=tinysrgb&h=350)

முகப் பூச்சு இறந்த அணுக்களை அகற்ற உதவும், இதனால் சருமம் புத்துயிர் பெறுவதுடன் இளமையாகவும் வளப்புடனும் தெரிவிக்கும்.

சிறப்பான பூச்சு செய்ய, முல்தானி முட்டியை மஞ்சள் மற்றும் நல்லெண்ணையுடன் கலக்கவும். இந்த பூச்சை 30 நிமிடம் தேய்த்து பிறகு அலசவும்.

இந்த சிறப்பான எண்ணெயினை உங்கள் தினசரி முகம் கழுவும் பயிற்சியில் எடுத்து கொண்டு சில காலத்தில் இது உங்கள் சருமத்தில் ஏற்படுத்தும் நன்மையைப் பாருங்கள்!

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன