வைர மோதிரங்களின் சமீபித்திய வடிவமைப்புகள்

Spread the love

தங்க மோதிரத்திற்கு ஈடு,  இணை எதுவுமில்லை என்றாலும், வைர மோதிரத்திற்கு தனி அழகு உண்டு என்பதை மறுக்க முடியாது. அவை பெண்களுக்கு மிகவும் பிடித்தவை. இன்று பெட்டர் பட்டர் உங்களுக்காக, வைர மோதிரங்களின் சமீபத்திய வடிவமைப்புகளை அளிக்கிறது.

 

1.பூச்செண்டு / மலர் கொத்து வடிவ வைர மோதிரம்

பெரிய அளவு மோதிரங்களே இப்பொழுது ஃபேஷன். இம்மோதிரத்தில் உள்ள வைர கற்கள் தொலைவில் இருந்து பார்க்கப் படும் பொழுது கூட ஜொலிக்கின்றன. இந்த பூச்செண்டு வடிவ மோதிரத்தின் சிறப்பம்சம், இதில் காணப்படும் ரிப்பன் ஆகும். இந்த மோதிரத்தை அணியும் பொழுது வெறு எந்த துணை நகையும் அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

 

2.பல அடுக்கு கற்களை உடைய மோதிரம்

இது ஒரே மோதிரம் என்றாலும், பார்ப்பதற்கு நான்கு வித்தியாசமான மோதிரத்தை அணிந்திருப்பது போன்ற உணர்வை தருகிறது. உங்களுக்கு விருப்பமான எந்த நிற கற்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். மிக நேர்த்தியான தோற்றத்தை இம்மோதிரம் அளிக்கிறது.

 

3.மலர் வடிவ வைர மோதிரம்

இயற்கையால் ஈர்க்கப்பட்டு, வடிவமைக்கப்பட்ட இந்த மோதிரம் சிறிது விலை உயர்ந்தது என்றாலும் இந்த மனதை மயக்கும் அழகு, மற்ற மோதிரங்களின் அழகை மங்கச் செய்து விடும். உங்கள் வசதிக்கேற்ப மோதிரத்தின் அளவையும், மலரின் எண்ணிக்கையையும் குறைத்துக் கொள்ளலாம்.  

 

4.சிறு குழல் வடிவ வைர மோதிரம்

பொதுவான மற்ற வைர மோதிரங்களிருந்து மாறுபட்ட இந்த மோதிரம் நவீன தோற்றத்தை கொண்டது. ஒரு சிறு குழலை போன்று காட்சியளிக்கும் இம்மோதிரத்தின் நடுவில் வைரம் பொருத்தப் பட்டிருக்கும்.

 

5.காக்டெய்ல் வைர மோதிரம்

மற்ற மோதிரங்களிருந்து சற்று பெரியதாக காணப்படும் இம்மோதிரம் மற்றவர்களின் கவனத்தை தன்பால் ஈர்க்கக் கூடியது. இக்காலத்தில் அனைவராலும் விரும்பப்படும் மோதிரம் இது.

 

6.திறந்த வாய் மோதிரம்

இந்த மோதிரத்தின் பெயரால், இதன் வடிவத்தைப் அறிய முடிகிறது. இதன் மேல் பாகம் திறந்தவாறு இருப்பதால் பார்க்க நேர்த்தியாகவும், நவீனமாகவும் உள்ளது. இந்த மோதிரத்தை நீங்கள் அணிந்துக் கொண்டால் அனைவரின் பாராட்டையும் பெறப் போவது உறுதி!!

 

7.செவ்வக வடிவ நீல மாணிக்க வைர மோதிரம்

சபையர் என்று அழைக்கப்படும் நீல மாணிக்கக்கல் வைரத்தோடு ஜோடி சேரும் பொழுது அதன் அழகு பன்மடங்கு கூடி தனித்துவமடைகிறது. இதன் சிறப்பம்சம், திறந்தபடி இருப்பது மற்றும் மூன்று தனி குமிழ்களால் செய்யப்பட்டது ஆகும்.

 

8.இரு வட்டங்கள்

நீங்கள் பெரிய அளவு மோதிரத்தை விரும்பாதவர்கள் ஆனால் அதைபோல் தோற்றமளிக்கும் மோதிரத்தை தேடுபவர் என்றால் இது உங்களுக்கான மோதிரம். உங்கள் பண வசதிக்கு ஏற்ப, ஆனால் பார்பதற்கு விலையுயர்ந்தது போல் தோற்றமளிக்கும் மோதிரம் இது.

 

9. முத்து மற்றும் வைர மோதிரம்

இந்த மோதிரத்தை நன்றாக உற்று பாருங்கள். வித்தியாசமாக ஏதாவது தெரிகிறதா? ஆமாம்! சுற்றிலும் வைர கற்களால் அலங்கரிக்கப் பட்ட இந்த முத்து மோதிரம் நடு விரலில் அணியக் கூடியது. இந்த வித்தியாசமான மோதிரம் இப்பொழுதைய ஃபேஷன்.

 

10.பத்து அடுக்கு வைர மோதிரம்

ஒரு விரலில் இந்த மோதிரத்தை அணிந்து, உங்கள் கை முழுவதையும் அழகாக்க கூடிய மோதிரம் இது. இதில் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு வைர கற்கள் உங்களுக்கு ராஜ தோற்றத்தை அளிக்கிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன