Search

Home / Women Health Tips in Tamil / பற்களில்  ஏற்படும் மஞ்சள் கறையிலிருந்து விடுபட 7 எளிமையான தீர்வுகள்

பற்களில்  ஏற்படும் மஞ்சள் கறையிலிருந்து விடுபட 7 எளிமையான தீர்வுகள்

Subhashni Venkatesh | ஜூலை 16, 2018

உங்கள் பற்களில் கறை ஏற்படாத வரைதான், ஒரு  புன்னகையால் உங்கள் முகத்தை அழகாக காண்பிக்க முடியும். பற்களில் ஏற்படும் மஞ்சள் கறை மிகவும் தர்மசங்கடமானது. தவறான பல் துலக்கும் முறைகள், அதிகப்படியான தேநீர், காப்பி அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் சில உணவு வகைகளால் இந்நிலை ஏற்படுகிறது.

எனினும், அதைபற்றி கவலை படாதீர்கள். இதோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள எளிமையான தீர்வுகளை பின்பற்றி மஞ்சள் கறையிலிருந்து விடுதலை பெறுங்கள்:

 

1.துளசி

துளசி இலைகளுக்கு, பற்களை வெண்மையாக்கும் தன்மை இருப்பதுடன், ஈறில் ஏற்படும் பயோரியா என்னும் நோயிலிருந்தும் பாதுகாக்கிறது. வெயிலில் துளசி இலைகளை காயவைத்து, நன்கு காய்ந்தவுடன் பொடித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பல் துலக்கும்போது பற்பசையுடன் சிறிது துளசி பொடியையும் சேர்த்து பல் துலக்கவும்.

 

2.ஆப்பிள்

கரகரவென்று இருக்கும் ஆப்பிளை சாப்பிடும்போது, தானாகவே உங்கள் பற்கள் சுத்தம் செய்யப்படுகிறது. பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்கவும் உதவுகிறது. ஒன்று அல்லது இரண்டு ஆப்பிள்களை ஒரேநாளில் உண்ணும்போது பற்களை வெண்மையாக பளிச்சிட வைக்கிறது.

 

3.சமையல் சோடா / பேகிங் சோடா

கால் தேக்கரண்டி சமையல் சோடாவை பற்பசையுடன் கலந்து பல் துலக்கி, வெதுவெதுப்பான நீரினால் கழுவுங்கள். இதை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்வதன் மூலம் வெண்மையான பற்களை பெறலாம்.

 

4.ஆரஞ்சு தோல்

பல் துலக்க ஆரஞ்சு தோலை உபயோகிப்பதன் மூலம், மிக சுலபமாக மஞ்சள் கறைகளை அகற்றி விடலாம். தினமும் இரவு படுக்கச்செல்லுமுன் ஆரஞ்சு தோலை பற்களில் தேய்க்கவும். அதில் உள்ள வைட்டமின்C மற்றும் கால்ஷியம் பற்களில் ஏற்படும் பாக்டீரியாவை தடுக்கிறது. இம்முறையை தினமும் இரு முறை வீதம் ஒரு வாரத்திற்குகடைபிடித்து வித்தியாசத்தை உணருங்கள்!

 

5.உமி கரி / சாம்பல் கரி

பற்களை வெண்மையாக்க , கரிப்பொடியை உபயோகிப்பது ஒரு சிறந்த முறை. இதில் படிந்துள்ள ரசாயன படிகங்கள், மஞ்சள் கறையை அகற்ற உதவுகிறது. சிறிது கரிபொடியை பற்பசையுடன் கலந்து ஒரு நாளைக்கு இரு முறை உபயோகித்து பயனை பெறுங்கள்.

 

6.வேப்பிலை

ஆரோக்யமான, வெண்மையான பற்களை பெற வேப்பிலையை உபயோகிக்கலாம். வேப்பிலையில் உள்ள கட்டுப்படுத்தும் தன்மையும், கிருமிநாசினி குணமும் வாயில் ஏற்படும் துர்நாற்றம் , உட்குழி போன்ற பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது.

 

7.எலுமிச்சை பழம்

எலுமிச்சையில் உள்ள வெளிறச்செய்யும் தன்மை, பற்களில் படியும் மஞ்சள் கறையை அகற்ற உதவுகிறது. சில துளிகள் எலுமிச்சை சாறில் உப்பை தூவி குழைக்கவும். அதை விரலில் எடுத்து பற்களை தேய்க்கவும். சில நிமிடங்கள் கழித்து நீரினால் வாயை கொப்புளிக்கவும். தினமும் இருமுறை வீதம் இரண்டு வாரத்திற்கு இவ்வாறு செய்யவும்.

Subhashni Venkatesh

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன