வாய்ப்புண்ணிற்கான வீட்டு வைத்திய முறைகள்:

Spread the love

வாய்ப்புண்கள், மருத்துவத்தில் வெண்ணை புண்கள் என்று அழைக்கப்படும். இது பார்ப்பதற்கு சிறியதாகவும், வலியுடனும், பள்ளம் போன்று வாய், உதடு, நாக்கு மற்றும் தொண்டையில் தோன்றும். இதனால் பேசுவது, சாப்பிடுவது, அருந்துவது போன்ற செயல்பாடுகளில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பொதுவாக, பெண்கள், இளம் பருவத்தினர் மற்றும் பரம்பரை வழியாகவும் இந்த புண்கள் அதிக ஆபத்து ஏற்படுத்துகிறது.

 

வாய்ப்புண் ஏற்படுவதற்கான கரணங்கள்:

இந்த புண்களின் தோற்றத்திற்கு என குறிப்பிட்ட காரணம் வழங்கப்படாவிட்டாலும், பல சாத்தியமான கரணங்கள் இருக்கவே செய்கின்றன. இவை பின் வருமாறு:

 • கடுமையாக பல் துலக்குதல், விளையாட்டினால் பற்களில் ஏற்படும் காயம், பல் அல்லது தற்செயலாக கடித்தல் ஆகியவற்றால் ஏற்படும் சிறிய காயங்கள்
 • காஃபின் அல்லது சாக்லேட் போன்ற உணவு உட்கொள்வதால் ஏற்படும் உடல் சூடு.
 • பருவ காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள்.
 • பூஞ்சை, வைரஸ் அல்லது பாக்ட்டீரியா தொற்றுகள்.
 • அழுத்தம் அல்லது தூக்கமின்மை.
 • ஒவ்வாமை
 • வைட்டமின் குறைபாடு குறிப்பாக பி 12, ஃபோலேட், இரும்பு அல்லது துத்தநாகம்
 • சிட்ரஸ் அல்லது இயற்கையாக அமிலத்தன்மை கொண்ட உணர்வுகளினால் ஏற்படும் உணர்திறன்
 • சோடியம் லாரில் சல்பேட் கொண்டிருக்கும் பொருள்களினால்  ஏற்படும் உணர்திறன் .
 • புகை
 • சில மருந்துகள்.

வாய்ப்புண்கள், கடுமையான நோய்களான கல்லிரல் புண்கள், வாய்வழி புற்றுநோய், இரைப்பை மற்றும் குடல் நோய், தன்னியக்க நோய் சீர்குலைவுகள் அல்லது நோய்யெதிர்ப்பு பலவீன குறைவு போன்றவற்றிற்கும் அறிகுறியாக இருக்கலாம்.

 

வீட்டு  வைத்திய முறைகள்:

வாய்ப்புண்கள் மிகவும் வலியுள்ளதாக இருக்கும். இதற்கென நேரடி சிகிச்சை இல்லாவிட்டாலும் சில வைத்திய முறைகள் வலியை குறைக்க உதவும்.

 

1.சாமமைல் வாய் கழுவி:

சாமமைல் எதிர்ப்பு அழற்சிகளை  உட்கொண்டு இருப்பதால் இதற்கு புண்களை ஆற்றும்  பண்புகள் உண்டு.

 

2.துளசி இலைகள்:

துளசி இலைகள், வாய்ப்புண்களை குணப்படுத்தும் கிருமி நாசினியாகவும்  மற்றும் வாயை புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.

 

3.தேன்:

பழங்காலங்களில், மஞ்சளின் மருத்துவ குணங்கள் அறியப்பட்டதாகவும் மற்றும் தேன்  வாய்ப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது.

 

4.புரோபயாட்டிக் தயிர் :

புரோபயாட்டிக் தயிர் அல்லது வீட்டு முறையில் தயாரிக்கப்படும் தயிர் என்பது நல்ல பாக்ட்டீரியாக்களை உட்கொள்வதோடு மட்டுமல்லாமல் வாயை சுத்தமாக வைத்து கொள்வதற்கும் உதவுகிறது. மேலும் இது செரிமானத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

 

5.துத்தநாகம் அடங்கிய மருந்துகள்:

பெரும்பாலும் வாய்ப்புண்கள் துத்தநாக பற்றாக்குறையினால் ஏற்படுகிறது. துத்தநாக மருந்துகள் உட்கொள்வதால் உடலில் உள்ள பற்றாக்குறையை நிரப்புவதற்காகவும், வாய்ப்புண்களை குணப்படுத்துவதற்க்காகவும் உதவுகிறது.

 

6.கிளிசரின்:

(புண்களின் மேல் கிளிசரினை நேரடியாக தடவுவதன் மூலம் வாயில் உள்ள உமிழ்நீரை கட்டுப்படுத்த முடியும் )

பெரும்பாலாக  வாய்ப்புண்ணிற்கான சிகிச்சை மருந்தாக இது பயன்படுகிறது. இது தோளினில்  ஏற்படும் புண்களை ஆற்றவும் உதவுகின்றது.

வழக்கமாக வாய்ப்புண்கள் தானாகவே ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் குணமடைந்து விடும். இருப்பினும், அறிகுறிகள் கடுமையானதாகவோ  அல்லது இரண்டு வாரங்களுக்கு மேலாகவோ இருந்தால், மருத்துவ ஆலோசனையை பெறுவது சிறந்தது.

 

Image source: Pexels, Pixabay, Publicdomainpictures and Flickr

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன