Home / Women Health Tips in Tamil / உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் மற்றும் சமாளிக்கும் வழிமுறைகள்
ஒரு குறிப்பிட்ட ஆளவுக்கு மீறி இரத்த அழுத்தம் அதிகரிக்கும் சமயம், இரத்த அழுத்ததுக்கான அறிகுறிகள் வெளியே தெரிய வரும். இரத்தம் நம் உடல் முழுவதற்கும் பரவுவதற்கு ஒரு விதமான அழுத்தம் இரத்தத்தால் செலுத்தப்படுகிறது. இவ்வாறு தமனிகளில் செல்லும் இரத்த ஓட்டத்தில் செயல்படுத்தப்படும் அழுத்தம் இதயத் துடிப்பில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. இதுவே இரத்த அழுத்தம் எனப்படுகிறது. நம் இதயம் சுருங்கும் போதும், உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்தத்தைச் செலுத்தும் போதும் தமனிகளில் ஏற்படும் இரத்த ஓட்டத்தின் அழுத்தம் அதிகமாகவும் இதயம் விரிந்து இரத்தம் இதயத்தில் நிரம்பும்போது தமனிகளில் ஏற்படும் இரத்த ஓட்டத்தின் அழுத்தம் குறைவாகவும் காணப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு என்பது நம் இரத்த அழுத்தம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் சராசரி அளவினை விட அதிகமாக இருப்பதே ஆகும். ஆரம்பக் கால கட்டத்தில் இந்நோயால் பெரிய அளவான ஆபத்து ஏற்படாது என்றாலும், நாளடைவில் இதனால் கண் பார்வை, சிறுநீரகம், மூளை மற்றும் இதயம் செயலிழப்பு போன்றவை ஏற்படும்.
தாங்கள் உயர் இரத்த அழுதத்தால் பாதிக்கப் பட்டிருப்பதையே உணராமல் பலர் உள்ளனர். இந்நோயை சமாளித்து, ஆரோக்யமான வாழ்க்கையை மேற்கொள்ள உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் பற்றி தெரிந்திருப்பது மிக அவசியம்.
Table of Contents
இரத்த அழுத்தத்தில் இரண்டு வகைகள் உள்ளன – அதில் ஒன்று ஆரம்பக்கட்ட நிலை. இதில் இரத்த அழுத்தத்தின் அளவு பல வருடங்களாக அதிகரித்துக் கொண்டே வரும், ஆனால் அதற்கான எந்த அறிகுறிகளும் வெளியே தெரியாது. மற்றொரு நிலையானது இரண்டாம் கட்ட நிலை. இரத்த அழுத்தம் திடீரென்று அதிகரிக்கும். இந்த திடீர் உயர்வு, கர்ப்பம், மாத்திரை மருந்து விளைவுகள், போதை பொருட்கள், கட்டி, சிறுநீரக கோளாறு போன்றவற்றால் ஏற்படலாம்.
உயர் இரத்த அழுத்தத்தினை ஆரம்ப நிலையில் கண்டுப்பிடிக்கவோ, உணரவோ முடியாது என்றாலும் நாளடைவில் கீழே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் தென்படத் தொடங்கும். இவை கண்டிப்பாக இரத்த கொதிப்பினால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனால் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது நலம்.
Image Source: pixnio, libreshot,pixabay
COMMENTS (0)