Search

Home / Travel Guide And News in Tamil / நீங்கள் இந்த 7 மர்மமான இந்திய கோவில்களுக்கு சென்று இருக்கிறீர்களா?

நீங்கள் இந்த 7 மர்மமான இந்திய கோவில்களுக்கு சென்று இருக்கிறீர்களா?

Subhashni Venkatesh | செப்டம்பர் 6, 2018

நம் இந்திய நாடு, கோவில்களுக்கு மிகவும் பெயர் பெற்றது. இந்துக்கள் ஏறத்தாழ 33 கோடி கடவுள்களின் மீது நம்பிக்கை வைத்து வணங்குவதால், ஒவ்வொரு தெருவிலும் ஒரு கோவில் இருப்பதில் சிறிதும் ஆச்சரியம் இல்லைதானே! பெரும்பாலான கோவில்கள் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்திருந்தாலும், சில கோவில்கள் தங்களுக்குள் உள்ளடங்கிய சில மர்மங்களால் மற்ற கோவில்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனித்து விளங்குகின்றன.

இங்கே உங்களை ஆச்சரியப்பட வைக்கும் 7 புதிரான கோவில்களைப் பற்றி பார்ப்போம்:

 

1.நிதி வன் கோவில், உத்திர பிரதேசம்

கிருஷ்ணர் கோவிலான நிதி வன் கோவில் வளாகத்தினுள், எப்பொழுதும் இலைகளுடன் இருக்கும் பசுமையான மரங்கள்  நிறைந்த காட்டில் ரங்க மஹால் உள்ளது. வறண்ட நிலத்தில் உள்ள இந்த மரங்கள் வருடம் முழுவதும் பசுமையாகவும், உள்ளே வெற்றிடமாகவும் உள்ளன. தினமும் இரவில் கிருஷ்ணரும் ராதையும் இங்கு வந்து ‘ இராச லீலை’ நடத்துவதாகவும், கோபிகைகளாக கருதப்படும் மரங்கள் யாவும் அவர்களுடன் சேர்ந்துக் கொள்வதாகவும் நம்பப்படுகிறது. இரவில் சலங்கை சத்தம் கேட்கப்படுவதாகவும், காட்டில் இருந்து வெளிச்சம் வருமென்றும் கூறுகிறார்கள். அங்கு காட்டினுள் இரவு என்ன நடக்கிறது என்று பார்க்க யாரவது முயற்சித்தால்,  அவர்கள் பார்வை பறி போய் விடும் அல்லது சித்தம் கலங்கி விடும் அல்லது இறந்து விடுவார்கள்.

 

2.திருமலை வெங்கடேஸ்வரா கோவில், ஆந்திரபிரதேசம்

இங்குள் பாலாஜி கடவுளின் சிலையானது தொடர்ந்து 110  டிகிரி வெப்பநிலையில் இருந்து வருகிறது. மேலும் குளிர் காலத்தில் இச்சிலைக்கு வியர்கிறது என்பது பெரும் ஆச்சரியம். இதற்கான காரணத்தை  இதுவரை எந்த விஞ்ஞானியாலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

 

3.வீரபத்திரன் கோவில், ஆந்திர பிரதேசம்

இக்கோவிலில் 70 தூண்கள் இருந்தாலும், தொங்கும் தூண் மிக்க ஆச்சரியத்தை அளிக்கிறது. இத்தூணின் அடிப்பாகம் தரையை தொடாமல் இருக்கிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த இடைவெளியில் காகிதம் அல்லது துணியை நுழைத்து பார்ப்பது வழக்கம்.  

 

4.ஜெகநாதர் கோவில், ஒடிஸா

ஜெகநாதர் கோவில் தன்னுள் அதிகப்படியான மர்மங்களை அடக்கியுள்ளது. இக் கோவில் கோபுரத்தின் உச்சியில் பறக்கும் கொடி, காற்று வீசும் எதிர் திசையை நோக்கி பறப்பதற்கான காரணம் என்ன என்று இன்று வரை புரியாத புதிராக உள்ளது. பிரதான கோபுரத்தின் நிழலையும் பகலில் எங்கும் காண முடியாது. பிரசாதங்கள் செய்ய ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு மண் பானைகள் அடுக்கப்படுகின்றன. ஆனால் மேலே உள்ள பானையில் உள்ள உணவு முதலில் சமைக்கப்பட்டு, அடியில் கீழே உள்ள பானையில் உள்ள உணவு கடைசியில் சமைக்கப்படுகிறது. தினமும் ஒரே அளவில் பிரசாதங்கள் சமைக்கப் பட்டாலும், ஆயிரமோ அல்லது லட்சமோ அனைத்து பக்தர்களுக்கும் அவை போதுமானதாக இருக்கிறது. ஒரு முறைகூட, சமைத்த பிரசாதம் வீணாவது இல்லை.

 

5.அனந்த பத்மசாமி கோவில், கேரளா

இந்த ஐந்து சமயக்  கோவிலில் 7 இரகசிய கிடங்கு / அறைகள் உள்ளன. அவற்றில் 6 அறைகள் உச்ச நீதி மன்றத்தின் ஆணைப்படி  ஏற்கனவே திறக்கபட்டிருந்தாலும், ஒரு அறை மட்டும் இன்று வரை பூட்டி தான் இருக்கிறது. அந்த அறையில் நம் கண்களுக்கு புலப்படும் படி எந்த பூட்டு அல்லது தாழ்ப்பாள் இல்லை. இரகசிய மந்திரத்தின் உச்சரிப்பு மூலம் தான் இந்த அறையை திறக்க முடியும் என்று நம்பப் படுகிறது. வேறு எதாவது முறையில் இந்த அறை திறக்கப்பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.

 

6.காமக்யா தேவி கோவில், அஸ்ஸாம்

51 சக்தி பீடங்களில் மிகவும் பழமையான சக்திபீடமான இந்த கோவிலில் தான் சதி தேவியின் யோனி சிவப்பு நிற புடவையால் மூடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு பருவமழை காலத்திலும் தேவியின் மாதவிடாய்க்காக கோவிலை மூன்று நாட்கள் அடைக்கிறார்கள். அந்த மூன்று நாட்கள் இக்கோவிலின் நிலத்தடி ஊற்றின் நீர் கூட சிவப்பு நிறத்திற்கு மாறுகிறது!

 

7.ஜ்வாலாஜி கோவில், ஹிமாச்சல் பிரதேசம்

கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு மேலாக இந்த சதி தேவி கோவிலில் நெருப்பு அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கிறது. இந்த நெருப்பிற்கான எரிபொருள் எங்கிருந்து வருகிறது என்று இன்று வரை விஞ்ஞானிகளால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

பல மர்மங்களையும், புதிர்களையும் உள்ளடக்கிய கோவில்கள் இன்னும் நிறைய இருந்தாலும் மேலே கூறப்பட்டுள்ள சில கோவிகளை விஜயம் செய்து அங்குள்ள மர்மங்களை கண்கூடாக காண்போம்!

 

Image source- wikimapia, wikimedia, pixabay, staticflickr,

Subhashni Venkatesh

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன