முப்பது வயதைக் கடந்த பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பத்து பழக்கங்கள்

Spread the love

“வயதென்பது வெறும் எண்ணிக்கைதான்” என்று சொல்வதுண்டு. ஆனால், குறிப்பிட்ட வயதிற்கு மேல் நாம் நினைவுகொள்ளவேண்டிய சில பழக்கங்களும் உண்டு.  இருபத்தைந்து, முப்பது வயதில், நாம் கவனக்குறைவாக இருக்கும் விஷயங்களினால் ஏற்படும் விளைவுகளை சரிசெய்துவிட முடியும்.  ஆனால், முப்பதைத் தாண்டிய பிறகு, நம் கவனக்குறைவு நமக்கு பெரும் கேட்டை விளைவிக்கும்.

பெண்கள் தமது வழக்கமான வேலைகளின் நடுவே, கவனத்தில் கொள்ளவேண்டிய பழக்கங்களை இங்கே காணலாம்.

1.உங்கள் உடல் எடை மீது ஒரு கண் வையுங்கள்:

எந்த வயதிலும் நமது உடல்  நலத்திற்கு கேடான விஷயங்களை நாம் ஏற்க முடியாது. நமது உணவுகள் சத்துள்ளவைகளாக இருக்கவேண்டும்.  நல்லதொரு மருத்துவரைச் சந்தித்து, நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பத்திய உணவு அட்டவனை ஒன்றை பெற்று, அதன்படி உண்டால், நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் சரியான விகித்த்தில் கிடைக்கப் பெறலாம்.

 

2.மாதாந்திர மார்பக பரிசோதனை:

பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுவது கணிசமாக அதிகரித்து வருவதால், மக்களுக்கு இந்நோய் குறித்த தெளிவு பிறக்கும் வரை காத்திருப்பது, தாமதிக்கும் செயலாகும்.  அதனால், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, நாமும் நமது குடும்பமும் உடல் நலத்தோடு இருக்க வழிசெய்தல் அவசியமாகும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு நல்ல மருத்துவமனைக்குச் சென்று நமது உடலை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

 

3. சேமிக்கும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள்:

முப்பது வயதிற்கு முன்னால், நாம் இஷ்டப்படி செலவு செய்திருக்கலாம். ஆனால், முப்பது வயதைக் கடந்த பிறகு, நாம் சேமிக்கும் பழக்கத்தை மேற்கொண்டால், நமது தேவைக்கும், நமது குடும்பத்தின் தேவைக்கும் சரியான சமயத்தில் உதவ முடியும்.  தற்போது, வங்கிகள் தொடங்கியுள்ள பல்வேறு பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதால், நமது சேமிப்பு பாதுகாப்புடனும், நமதுவேலை சுலபமாகவும் இருக்கும்.

 

4.காலை உணவை (பிரேக் ஃபாஸ்ட்) தவிர்க்க வேண்டாம்:

ஒரு  நாள் என்பது, காலை உணவிலிருந்து ஆரம்பிக்கிறது.   அது, நாள் முழுவதும், நமக்கு, நமது வேலையை செய்வதற்கான தெம்பை அளிக்கிறது.

 

5.யோகா எனப்படும் தேகப்பயிற்ச்சிக்கு சிறிது நேரம் ஒதுக்கவும்:

தேகப்பயிற்ச்சிகளில், யோகா ஒன்றுதான் நமது உடல் வலிமையை அதிகரித்து,  நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கி, உடலை நலத்தோடு வைக்கிறது. அதனால், தினமும் யோகா செய்யுங்கள்.  அது நமது வலிமையை கூட்டுவது மட்டுமல்ல, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்கிறது

6.அலை பேசி உபயோகிக்கும் நேரத்தை குறையுங்கள்:

அலைபேசியிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு, பல பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால், நமது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.  அதனால், அலைபேசி உபயோகிக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு, தேவைப்படும் போது மட்டும் பேசும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்

 

7. உங்கள் மேனி எழிலில் கவனம் செலுத்துங்கள்:

முப்பது வயதைக் கடந்தபிறகு, சரியான பராமரிப்பு இல்லாவிட்டால், முகத்தில் சுருக்கங்கள் தென்படத் தொடங்கும். அதனால், மேனி எழிலைப்பாதுகாக்கும் கழிமுறைகளைக் கண்டறிந்து, முகத்தை பொலிவுடன் வைத்திருக்க வீட்டு வைத்தியமாக செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

 

8) தூங்கும் நேரத்தை அதிகப்படுத்துங்கள்:

நாம் எல்லோருக்கும் தூங்குவது மிக அவசியமென்றாலும், முப்பது வயதைக் கடந்த பெண்கள் தினமும் எட்டு மணி நேரம் தூங்கவேண்டியது அவசியமாகிறது.  தூக்கமின்மை எரிச்சல், இரத்த அழுத்தம் மற்றும் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும்.

 

9.பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்:

முப்பது வயதைக் கடந்த பெண்களுக்கு அன்றாட வாழ்வில் பொறுப்புகள் மிக அதிகம். பொறுப்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வதால், அவர்களுக்கும் பொறுப்புணர்ச்சியை உண்டாக்க முடியும்

 

10.அடிக்கடி உங்கள் பெற்றோருடன் பேசுங்கள்:

நமது பெற்றோருடன் அடிக்கடி பேசுவதால், அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்ள நினைக்கும் விஷயங்களை கேட்கும் பொழுது நமக்கு இதமாகவும், சில நேரங்களில் அது நமக்கு ஆறுதலாகவும் இருக்கும்

 

மூலப்படங்கள் தி காஸா போஸ்ட், டாக்டர். ஜோசப் மோஸ்குவெரா, மணி வ்யூ, ஹிந்துஸ்தான் டைம்ஸ், அல் பராரி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஃபெமினா, வெட்டெங் டூயர்ஸ்.காம்,  சிம்பிள் மோஸ்ட், ஹோம் டச் பிளாக், யூ டியூப், மற்றும் மணி கிராஸர்ஸ் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *