பெண்கள் இளமையை நீட்டிக்க, முதுமையை விரட்ட, தினமும் உண்ணவேண்டிய 7 பயனுள்ள உணவு பொருட்கள்

Spread the love

நீங்கள் முதுமை அடைவதை தள்ளிப்போடும் பயன் தரும் உணவுப்பொருட்கள்  உங்கள் சமையலறையிலேயே இருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா உங்களால்? இந்த உணவுகள் உங்களுக்கு இளமையான தோற்றத்தையும், பொலிவையும் தர உதவுகிறது.

 

1.எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய்:

இந்த எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் நம் இதயம் மற்றும் இதய அமைப்பின் சீரான செயல்பாட்டிற்கு மிக நல்லது. நாம் விரும்பும்  எந்த உணவில் வேண்டுமென்றாலும், இந்த எண்ணெயை உபயோகப் படுத்தலாம். சாலட் மீது அலங்கரிக்கவோ அல்லது சமைத்த உணவின் மீது லேசாக தூவியோ உண்ணலாம். நல்ல சுவையையும் ஆரோக்யத்தையும் தர வல்லது.

 

2.கிவி:

கிவி பழத்தில் நிறைந்துள்ள  வலுவான ஆன்டி ஆக்சிடன்ட் கலவைகள் சரும  கோடுகள், சுருக்கங்கள் ஏற்படுவதை தள்ளிப் போடுகிறது. இதில் நிறைந்துள்ள வைட்டமின் C, வைட்மின் E தான் இதற்கு காரணம். மேலும் இதில் உள்ள ப்ரீ ராடிகல்ஸ் ஏற்படுத்தும்  சரும பாதிப்புக்களை குறைக்கிறது.

 

3.நட்ஸ் (கொட்டைகள்):

நம் தினசரி உணவில் நட்ஸ் சேர்த்துக்கொள்வதால் நம் இளமை பருவத்தை நீட்டிப்பது மட்டுமல்லாது, புற்று நோய், இதய நோய், அறிவாற்றல் குறைவு  போன்ற நாட்பட்ட நோய்களையும் நம்மை நெருங்க விடாமல் தடுக்கிறது. இதில் நிறைந்துள்ள மோனோ அன்சாட்டுரேடட் மற்றும் பாலி அன்சாட்டுரேடட் கொழுப்புகள் நம்மை டைப் 2 டையாபடீஸ் என்னும் பேராபத்திலிருந்து காப்பாற்றுகிறது. இத்தகைய வலுவான வாஸ்குலர் காரணிகள், முதியவர்களுக்கு ஏற்படும் அறிவாற்றல் பின்னடைவை தள்ளிப்போடுகிறது. இதற்கு உகந்த நட்ஸ்கள் முந்திரி, பாதாம், வால்நட் போன்றவையாகும்.

 

4.மீன் எண்ணெய்:

ஒமேகா 3 என்னும் கொழுப்பு அமிலங்கள் ஏராளமான ஆரோக்ய பயன்களை தர வல்லது. அதில் முக்கியமானது வயதாவதை எதிர்க்கும் சக்தி. மீன் மற்றும் மீன் எண்ணெய் இரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது. DHA என்றும் அழைக்கப்படும் ஒமேகா- 3 ஏராளமான ஆரோக்யமான பயன்களை அள்ளித்தருகின்ற மற்றும் வேகமாக செயல்படும் புரோஸ்டாகிளாண்டின் என்ற கொழுப்பு அமிலமாகும்.

 

5.பூண்டு:

பூண்டு அதிகமான சல்பர் நிறைந்த, சக்திமிக்க ஆன்டி ஏஜிங் உணவு. சல்பர் நிறைந்த உணவு கல்லீரல் மற்றும் சரும பாதுகாப்பிற்கு உகந்தது. பூண்டு இதயத்திற்கும், சீரான ரத்த அழுத்தத்திற்கும் மட்டுமின்றி,  எண்ணற்ற பயன்களை அள்ளி கொடுக்கும் ஒரு உணவு.

 

6.பிளாக்ஸ் சீட்ஸ் என்னும் ஆழி விதைகள்:

ஆழி விதைகள் நம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிப்பதுடன், அதில் ஏற்படும் சுருக்கம் , கோடுகளையும் குறைக்கிறது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், லிக்னேன்ஸ், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. ஒமேகா 3 சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவுகிறது. லிக்னேன்ஸ் உடைந்த இரத்த நாளங்களையும், சரும செல்களையும் மீண்டும் வரையறுக்க பெரிதும் உதவுகிறது. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் சருமத்தை ப்ரீ ராடிகல்ஸ் , UV கதிர்களிலிருந்து காப்பாற்றுகிறது.

 

7.மாதுளை:

மாதுளையில் மிக அதிகமாக காணப்படும் வைட்டமின் C, அதிக வெப்பத்தினால நம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களிளிருந்து பாதுகாக்கிறது. மாதுளைஜூஸில் இருக்கும் இலாஜிக் அமிலம் என்னும் பாலிபினால் கலவை , ப்ரீராடிகலினால் ஏற்படும் சரும சேதத்தை எதிர்த்து போராடுகிறது. மேலும் அதில் உள்ள ப்யுனிகாலஜின் என்னும் அருமையான ஊட்டச்சத்து நம் உடலில் உள்ள கொலாஜன் அளவை பாதுக்காக்கும் திறனையும் அதிகரிக்கிறது.மேலும் இவை இணைப்பு திசுக்கள் மூலம் நம் சருமத்தை கவர்ச்சியாகவும், ஆரோக்யமாகவும், இளமையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *