மாதவிடாய் நின்றுபோவதற்க்கான ஏழு அறிகுறிகள்

Spread the love

ஒரு பெண்ணின் வாழ்க்கையில், மாதவிடாய் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதற்கிணையானது, மாதவிடாய் நின்றுபோகும் தருணம்.   மாதவிடாய் நின்றுபோகும் சமயத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களே “மொனோபாஸ்” என்றறியப்படுகிறது. சரியான முறையில் அதனை கையாள வேண்டியது அவசியம்.  பொதுவாக, பெண்களுக்கு நாற்பத்தைந்து அல்லது ஐம்பது வயதில் தான் மாதவிடாய் நின்றுபோகும் என்றாலும், சில பெண்களுக்கு முப்பது வயதிலேயே கூட நின்று போகும்.

மாதவிடாய் நின்ன்று போவதற்கான ஏழு அறிகுறிகள், இதோ:

 

1.தூக்கமின்மை (இன்சோம்னியா)

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவது, மாதவிடாய் நின்று போவதற்கான பொதுவான அறிகுறியாகும்.  நடு இரவில் எழுந்துவிட்டு, பிறகு உறக்கம் வராமலிருப்பது, உறக்கம் வராமல், மறு நாள் முழுவதும் உடல் தளர்வுற்று இருப்பது தூக்கமின்மையால் வரும் தொல்லைகள்.

நிறைய நீர் அருந்துவதும், மது வகைகளை விலக்கி வைப்பதும், நன்கு  தூங்குவதற்கு உதவும்

 

2.மாதவிடாய்க்காலங்களின் முறையற்ற சுழற்ச்சி:

மாதமொருமுறை வரும் மாதவிடாய் சுழற்ச்சி முறையில் ஏற்படும் முறையற்ற தன்மை, மாதவிடாய் நிற்கும் நேரம் வந்துவிட்டதைக் குறிப்பதாகும்.  அளவுக்கதிகமான அல்லது மிகக் குறைந்த உதிரப்போக்கு ஏற்படுவதனால், சுழற்சிமுறையில் மாற்றம் உண்டாகி, முறையற்ற வகையில் மாதவிடாய் ஏற்படுவது, மாதவிடாய் நின்றுபோவதற்கான அறிகுறியாகும்

 

3.அலைபாயும் மனநிலை:

மன நிலையில் திடீர், திடீரென ஏற்படும்  மாற்றங்கள் மற்றும் எளிதில் உணர்ச்சி வயப்படுதல் ஆகியவை மாதவிடாய் நின்றுபோவதற்கான அறிகுறிகள். பெண்மைசுரப்பிகள் அளவு குறையும் போது, மாதவிடாய் தோன்றுமுன் ஏற்படும் ஊக்கமின்மை, மாதவிடாய் நின்றுபோகும் சமயம் அதிகமாக ஏற்படும்.

4.சிறு நீர்ப் பை  (பிளாடர்) தொந்தரவுகள்

பெண்மைச் சுரப்பிகளின் அளவு குறையும் போது, மாதவிடாய் மட்டுப்பட்டு, அணுக்கள் மறு உற்பத்தியாகும். இந்த சமயத்தில் ஏற்படும் தளர்ச்சியினால், சிறு நீர் கழிப்பதில் வலி, இருமும்போது அல்லது தும்மும் போது ஒரு துளி சிறு நீர் கழித்தல், கழிவறைக்குள் செல்வதற்கு முன்பாகவே சிறு  நீர் வெளியேறுதல் போன்ற தொந்தரவுகள் வரக்கூடும்.

 

5.திடீரென உடல் சூடாவது:

எண்பது விழுக்காடு பெண்களுக்கு பெறும் பிரச்சினையாக இருப்பது, மாதவிடாய் நிற்கும் சமயங்களில், திடீரென உடல் முழுவதும் சூடு பரவி, தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பாரமாக உணர்வதுதான்.   உடலின் மேல் பாகத்தில் ஏற்படும் அதிகப்படியான வியர்வை, அதிகப்படியான இருதயத்துடிப்பு போன்றவற்றால், சூடு உடலெங்கும் பரவுவது போன்ற உணர்வு ஏற்பட்டு கழுத்து மற்றும் மார்புப் பகுதிகள் பாரமாக இருக்கும்.  ஒரு ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு தொடரும் இந்த தொந்தரவு, மாதவிடாய் நின்றபிறகும், சிலருக்கு ஏற்படக்கூடும். ஆனால், அதுவாக குறைந்துவிடும்.

6.தோல்கள் வலிமையற்று தளர்வது:

மாதவிடாய் நிற்கும் தருணங்களில், கருப்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தோல்கள் நெகிழும் தன்மையை இழந்து, தளர்வடையும்.  வயதாவதால் ஏற்படும் பிரச்சினை இது. பெண்மைச்சுரப்பிகளின் அளவு குறைவதால், முடி உதிர்வது அதிகமாகும். தலைமுடியை பாதுகாப்பதற்காக, வேதிபொருட்கள் அதிகமுள்ள கலவை பூச்சுக்களை, உபயோகிப்பதை தவிர்க்கவும்.

 

7.பாலுணர்ச்சி குறைதல்:

பெண்மைச் சுரப்பிகள் அளவு குறைவதால், மனதின் காம உணர்ச்சி குறைந்து, கருப்பை உலர்வாக தெரியும்.  பாலுணர்ச்சி சம்பந்தமாக எந்த உணர்வும் எழாமல் இருப்பது அல்லது எரிச்சலடைவது இச்சமயத்தில், இயல்பாகும்.  இது போன்ற தொந்தரவு அதிகமானால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

 

மாதவிடாய் நின்று போவதற்கான அறிகுறிகளென மேற்சொன்ன ஏழு முக்கிய விவரங்களைத் தவிர, தங்கள் தாயார் மற்றும் நெருக்கமான குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை பெற்று செயல்பட்டால், மாதவிடாய் குறித்த தெளிவான புரிதல் உண்டாகும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *